சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய்
சென்னை: சினிமா திரையில் எத்தனையோ வில்லன்களை ஒற்றை ஆளாக வீழ்த்திய 'விஜய்', நிஜ அரசியல் களத்தின் சதுரங்க ஆட்டத்தில் இப்போது சற்றே சோர்ந்து போயிருக்கிறார். பனையூர் வீட்டை விட்டு தற்காலிகமாக வெளியேறி, பட்டினப்பாக்கம் இல்லத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் விஜய்யின் மௌனம், வெறும் தனிப்பட்ட காரணங்களால் மட்டுமானது அல்ல; அதன் பின்னால் ஒரு பெரிய அரசியல் தோல்வி ஒளிந்திருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தம்பிகள்!
காங்கிரஸ் 'மிஸ்ஸிங்': தளபதி கொடுத்த அசைன்மென்ட்... ஃபெயிலான தளபதிகள்!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பை விட, விஜய்யின் தற்போதைய பெரும் கவலை 'கூட்டணி' என்பதுதான். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைத் தங்களது கூடாரத்திற்கு இழுத்து வர வேண்டும் என்பதுதான் விஜய்யின் மாஸ்டர் பிளான். இதற்காக தனது கட்சியின் டாப்-3 நிர்வாகிகளிடம் (முக்கிய ஆலோசகர்கள் மற்றும் டெல்லி வரை செல்வாக்குள்ள புள்ளிகள்) இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் விஜய்.
"அண்ணே... கவலைப்படாதீங்க, காங்கிரஸ் கை நம்ம பக்கம் தான் வரும். திமுக சீட் பங்கீட்டில் அவர்களைக் கையாண்ட விதம் அவர்களுக்கு அதிருப்தியைத் தந்திருக்கிறது. நாம் ஒரு கௌரவமான இடங்களைக் கொடுத்தால் போதும், ராகுல் காந்தி தரப்பு நம்மைத் திரும்பிக் பார்க்கும்" என அந்த மூன்று முக்கிய நிர்வாகிகளும் விஜய்க்கு ரத்தத்தில் எழுதித் தராத குறையாக உறுதி அளித்திருந்தார்களாம்.
பாருங்க ராகுல் பனையூர் வருவார் என்றார்கள். ஆனால், நிஜத்தில் நடந்தது வேறு. மார்ச் 4-ம் தேதி அன்று திமுக-காங்கிரஸ் இடையே 28+1 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக, விஜய்யின் அந்த 'கூட்டணி கனவு' தவிடுபொடியானது.
விவாகரத்து புகார் ஒருபுறம்... கூட்டணி ஏமாற்றம் மறுபுறம்!
சங்கீதாவுடனான விவாகரத்து விவகாரம் மற்றும் நீதிமன்ற நோட்டீஸ் போன்றவை விஜய்யை மனதளவில் பாதித்திருந்தாலும், அவர் அதை விட அதிகமாக அரசியலில் ஏற்பட்ட இந்தத் தேக்க நிலையைக் கண்டுதான் கொதித்துப் போயிருக்கிறார் என்கிறார்கள்.
நிர்வாகிகள் மீது அதிருப்தி: "அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே... இப்போது அவர்கள் அங்கே போய் உட்கார்ந்து விட்டார்களே? நம்மை ஒரு சாதாரணக் கட்சியாக டெல்லி மேலிடம் பார்க்கிறதா?" எனத் தனது அந்த மூன்று முக்கியத் தளபதிகளிடம் விஜய் காட்டமாகப் பேசியதாகத் தகவல்.
தனிமைப்படுத்தப்பட்ட தவெக: திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது, அதிமுக தன் பங்கிற்கு காய்களை நகர்த்துகிறது. ஆனால், 'யாரையும் சாராமல்' நிற்பதாகச் சொன்னாலும், ஒரு தேசியக் கட்சியின் பலம் பின்னால் இருந்தால் நன்றாக இருக்கும் என விஜய் நினைத்தார். இப்போது எந்தப் பெரிய கட்சியும் வராத நிலையில், தவெக 'ஐசோலேட்' ஆனது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது.
"எங்கே போவது?" - பட்டினப்பாக்கம் யோசனைகள்!
தற்போது பட்டினப்பாக்கம் வீட்டில் முகாமிட்டுள்ள விஜய், கட்சிப் பிரமுகர்கள் யாரையும் சந்திக்க மறுத்து வருகிறார். முக்கியமாக, அந்த 'வாக்குறுதி' கொடுத்த மூன்று நிர்வாகிகளுக்கும் அங்கே 'நோ என்ட்ரி' போடப்பட்டுள்ளதாம்.
"அரசியல்னா சும்மா இல்லைன்னு இப்பதான் அண்ணன் உணர்றாரு. சினிமாவுல ஸ்கிரிப்ட் படி எல்லாம் நடக்கும், இங்க எல்லாமே லாபிதான். கூட்டணி இல்லாம 234 தொகுதியிலயும் நிக்குறது சாதாரண விஷயமில்லை. ஆனா, அண்ணன் இதையெல்லாம் எப்படி மேனேஜ் பண்ணப்போறாருன்னு தெரியல," எனத் தவிக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள்.
தனிப்பட்ட வாழ்க்கையில் வீசும் சூறாவளி ஒருபுறம், அரசியல் களத்தில் பார்ட்னர்கள் இல்லாத ஏமாற்றம் மறுபுறம் என விஜய் இப்போது ஒரு 'டபுள் அட்டாக்' சூழலில் இருக்கிறார்.
நிர்வாகிகளின் அடுத்த கட்டம்?
விஜய் அப்செட்டில் இருப்பதால், கட்சியின் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குழப்பத்தில் இருக்கும் நிர்வாகிகளைத் தெளிவுபடுத்த விஜய் எப்போது வெளியே வருவார்? அல்லது இந்த மௌனம் ஒரு பெரிய போராட்டத்திற்கான ஆரம்பமா?
விஜய்யின் இந்த அரசியல் பின்னடைவைச் சரிசெய்ய அந்த டாப்-3 நிர்வாகிகள் மீண்டும் முயற்சி எடுப்பார்களா? அல்லது புதுக் கூட்டணி அமையுமா? விரிவாகப் பார்க்கலாமா?
-
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு












Click it and Unblock the Notifications