பொதுக்கூட்டத்தில் பங்கேற்காத அண்ணாமலை.. அப்செட்டான தலைகள்.. ‘மலை’ சொன்ன காரணம்.. தொண்டர்கள் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் கலந்துகொள்ளாதது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் அண்ணாமலை.

சிதம்பரத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக இருந்தது.

ஆனால், இந்த பொதுக்கூட்டத்தில் திடீரென பங்கேற்காதது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதற்கான காரணத்தை அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உடல்நலக்க்குறைவு காரணமாகவே தான் கலந்துகொள்ளவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக பொதுக்கூட்டம்

பாஜக பொதுக்கூட்டம்

சிதம்பரத்தில் பாஜகவின் பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியல் சாசன சமர்ப்பண நாள் மற்றும் பஸ்தி சம்பார்க் அபியான் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, மாநில பொதுச் செயலாளர்கள் பொன்.பாலகணபதி, மாநில செயலாளர் வினோஜ் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.

அண்ணாமலை வரவில்லை

அண்ணாமலை வரவில்லை

இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்ணாமலை நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு வரவில்லை. அண்ணாமலை வருகிறார் எனக் கூட்டத்தின் கடைசி நாள் வரை அறிவித்த நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்தும் பட்டியல் அணி நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் என 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் கூறியிருந்தனர்.

காலியாக கிடந்த சேர்கள்

காலியாக கிடந்த சேர்கள்

ஆனால் சுமார் 500 பேர் மட்டுமே இந்தப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் கூட்டத்திற்கு அண்ணாமலை வரவில்லை எனத் தெரிந்ததும் கலையத் தொடங்கினர். வெறும் 200 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். சிறப்புப் பேச்சாளர்கள் பேசும்போது வெறும் 100 பேர் மட்டுமே இருந்தனர். இதனால், ஆயிரக்கணக்கான இருக்கைகள் காலியாக இருந்தன.

தலைவர்கள் அப்செட்

தலைவர்கள் அப்செட்

தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தொண்டர்கள் கலையத் தொடங்கியது மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கூட்டம் கலைவதைப் பார்த்த தலைவர்கள் இரவு 8.30 மணிக்கே கூட்டத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டனர். இது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலை வராததால் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கடுமையாக அப்செட் ஆகினர்.

v

v

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்காததற்கு மன்னிப்புக் கோரியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் என்னால் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

அதற்காக கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பாஜகவில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அண்ணாமலை உடல் நலக்குறைவு காரணமாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்காதது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+