Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி புறப்பட்ட அண்ணாமலை.. 6 மணி நேரத்தில் நடந்தது என்ன? “காலை வரை காத்திருங்கள்”.. சட்டுனு பதில்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். தனது டெல்லி பயணம் ஏன் என்பது பற்றி பேசியுள்ளார் அண்ணாமலை.

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணாமலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக இன்னும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் திடீரென டெல்லி கிளம்பியுள்ளார் அண்ணாமலை. முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசினார் அண்ணாமலை.

ஈரோட்டில் அதிமுக பேனரில் கூட்டணி பெயர் மாறி இருந்தது எழுத்துப் பிழை என சீனியர்கள் தலைவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக அரசிற்கு எதிராக நிற்க வேண்டுமென்றால், வலிமையான வேட்பாளராக இருக்க வேண்டும் அது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்போம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் இறங்கிவிட்ட நிலையில், அதிமுக சார்பாக வேட்பாளர்கள் அறிவிக்கபப்டாமல் இருந்தது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது பாஜகவா அதிமுகவா என குழப்பம் நீடித்து வந்த நிலையில், இன்று காலை வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக முன்னாள் அமைச்சர் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தார் ஈபிஎஸ்.

 இரு அணிகளும்

இரு அணிகளும்

பாஜக போட்டியிட்டால் விட்டுக் கொடுப்போம் இல்லையெனில் நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியிருந்த நிலையில், இன்று எடப்பாடி வேட்பாளரை அறிவித்துவிட்டதால் தங்கள் அணி சார்பாக செந்தில் முருகனை வேட்பாளராக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். தங்களது முடிவை ஓரிரு நாளில் தெரியப்படுத்துவோம் என்றும், அதுவரை அதிமுக காத்திருக்கலாம் தவறில்லை என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் நேற்று கூறியிருந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் வேட்பாளரை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனரில் கூட்டணி பெயர் மாற்றம்

பேனரில் கூட்டணி பெயர் மாற்றம்

முன்னதாக, ஈரோட்டில் தேர்தல் பணிமனையையும் திறந்து வைத்தது ஈபிஎஸ் தரப்பு. அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் என்று இருந்தது. மேலும், பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் பாஜக தலைவர்களின் படம் அந்த பேனரில் இடம்பெறவில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி எனும்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என அதிமுக பேனர் வைத்தது, பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு விட்டதா என்ற கேள்வியை எழுப்பியது.

 டெல்லி புறப்பட்ட அண்ணாமலை

டெல்லி புறப்பட்ட அண்ணாமலை

ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், டெல்லி கிளம்பிச் சென்றுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான நிலவரங்களை மேலிட நிர்வாகிகளிடம் எடுத்துக்கூறி, மேலிட ஆலோசனையின்படி, பாஜக போட்டியிடுவதா, இல்லையென்றால் அதிமுகவின் எந்த அணிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அண்ணாமலை.

 காலை வரை காத்திருங்கள்

காலை வரை காத்திருங்கள்

அப்போது அவரிடம், தேசிய ஜனநாயக கூட்டணி பேனரில் மோடி படத்தை வைப்பது வழக்கம். ஆனால் கூட்டணி பெயர் மாறியதோடு ஈரோடு கிழக்கு அதிமுக தேர்தல் பணிமனை பேனரில் மோடி படம் இல்லையே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஈரோட்டில் கூட்டணி பெயர் பேனரில் மாறியது எழுத்துப்பிழை என்று அதிமுக சீனியர் நிர்வாகிகள் கூறினர். ஆறு மணி நேரத்தில் பேனரை மாற்றியுள்ளனர். அதுபோல நாளை காலை வரை காத்திருங்கள் எனத் தெரிவித்தார்.

வலிமையான வேட்பாளர்

வலிமையான வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "இது எங்களுக்கான தேர்தல் இல்லை என்று மிக தெளிவாக சொல்லியிருக்கிறோம். அதே நேரத்தில் வலுவான ஒரு வேட்பாளர், அசுர பலம் கொண்ட அதாவது, பணபலம், படைபலம், அதிகார பலம் மிக்க, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு கொஞ்சமும் யோசிக்காத திமுக அரசிற்கு எதிராக நிற்க வேண்டுமென்றால், வலிமையான வேட்பாளராக இருக்க வேண்டும். வலிமையான ஒரு வேட்பாளர் திமுகவிற்கு எதிராக நிற்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. அது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்போம்" எனத் தெரிவித்தார்.

டெல்லி பயணம் ஏன்?

டெல்லி பயணம் ஏன்?


டெல்லி பயணம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியா - இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகு, அங்கு 13 -வது அரசியல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாடு பாஜகவின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்கவே டெல்லி செல்கிறேன் எனத் தெரிவித்தார் அண்ணாமலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+