சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏன் தோத்தீங்க.. விளக்கம் கொடுங்க.. தமிழக பாஜகவுக்கு மேலிடம் நோட்டீஸ்!

தமிழக பாஜகவுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results 2019: தமிழகத்தில் வாஷ் அவுட்டான பாஜக!- வீடியோ

    சென்னை: இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் தமிழக பாஜக தோல்வி அடைய காரணம் என்று கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில், தேசிய கட்சியான பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சி மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    பாஜகவுக்கு அதிமுக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய 5 தொகுதிகளை ஒதுக்கியது. ஆனால் முக்கிய தொகுதிகளை யார் கைப்பற்றுவது என்பதில் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டது.

    என்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே! என்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே!

    எச்.ராஜா

    எச்.ராஜா

    இதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கினர்.

    வாக்கு வித்தியாசம்

    வாக்கு வித்தியாசம்

    ஆனால் இந்த 5 தொகுதிகளிலுமே பாஜக படுதோல்வியை சந்தித்தது. கிடைத்த வாக்குகளும் சொற்ப அளவிலேயே இருந்தன. இந்த மூத்த தலைவர்கள் 5 பேருமே லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    வட மாநிலங்களில் பாஜக எதிர்பாராத அளவுக்கு வெற்றியை பெற, தமிழகத்தின் ஓட்டு வங்கி பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது வெறும் 3.7 சதவீதம் வாக்குககள்தான் கிடைத்துள்ளது. மோடி, அமித்ஷா, பியூஷ்கோயல் போன்றோர் தமிழகத்துக்கு பிரச்சாரம் செய்ய வந்தும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழிசை

    தமிழிசை

    இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைய என்ன காரணம் என்றும், அதை சரிசெய்து கொண்டு, தமிழகத்தில் பாஜகவை வேரூன்றவும் முடிவு செய்துள்ளது. அதனால், தமிழகத்தில் தோல்வி அடைந்தது ஏன் என்று பாஜக தலைமை விளக்கம் கேட்டுள்ளது. மாநில தலைவர் தமிழிசையிடம் மட்டுமின்றி தமிழக பாஜக ஆதரவாளர்கள் பலரிடமும், விளக்க அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் பணி

    தேர்தல் பணி

    இதனிடையே, தமிழகத்தில் "தமிழக பாஜக தலைவர்கள் சிறப்பாக தேர்தல் பணியாற்றவில்லை" என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதை தமிழிசை மறுத்துள்ளதுடன், "கட்சிக்கு தங்களை பற்றியும் தமிழகத்தில் இருந்த களத்தை பற்றியும் மேலிடத்துக்கு தெரியும்" என்கிறார். எனினும் மேலிடத்துக்கு தோல்வி குறித்து என்ன விளக்கம் தமிழக பாஜக தலைமை அளிக்க போகிறது என்று இனிதான் தெரியவரும்.

    English summary
    The notice was sent to the TN BJP office asking for the reason for failure in Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X