சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் கொலை- மனிதவெடிகுண்டு தணுவின் கூட்டாளி A1 நளினி, 4 ஈழ தமிழர்- மத்திய அரசு மறு ஆய்வு மனு ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் A1 - முதல் குற்றவாளியான நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திடீரென மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் வழக்கில் A18 - 18-வது குற்றவாளியான பேரறிவாளன் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் முதல் குற்றவாளியான நளினிக்கு எப்படி பொருந்தும் என்பது மத்திய அரசின் வாதமாக இருக்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி ஶ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டான தணுவால் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கையை சேர்ந்த பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா, சிவராசன், சுபா, தணு என பலரும் குற்றம்சாட்டப்பட்டனர். ஆனால் கைது செய்யப்பட்ட நபர்களில் முதல் குற்றவாளி நளினி என சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் A1 நளினி செய்த குற்றம் என்ன என்பதை விரிவாகவே பட்டியலிட்டிருக்கிறது.

ஆட்டத்தை காட்டிய மத்திய பாஜக அரசு- ராஜீவ் கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேர் விடுதலைக்கு எதிராக மனு! ஆட்டத்தை காட்டிய மத்திய பாஜக அரசு- ராஜீவ் கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேர் விடுதலைக்கு எதிராக மனு!

A1 நளினி

A1 நளினி

அதாவது ராஜீவ் காந்தி படுகொலை சதித் திட்டத்துடன் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த முருகனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நளின். ராஜீவ் கொலையாளிகளான சிவராசன், தணு, சுபா ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்தவர் நளினி. சிவராசன், தணு, சுபா மூவரையும் ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செய்யப்படும் இடத்துக்கு அழைத்து சென்றவர் நளினி. முன்னதாக விபி சிங் நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி படுகொலைக்கு ஒத்திகைபார்த்ததிலும் உடனிருந்தவர் நளினி.

 நளினிக்கு தூக்கு விதித்த சுப்ரீம் கோர்ட்

நளினிக்கு தூக்கு விதித்த சுப்ரீம் கோர்ட்

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் கொலையாளிகளான சிவராசன், சுபா தப்பிச் செல்ல உடந்தையாகவும் இருந்தார். இச்சதித் திட்டத்தில் இணைந்த முருகனுடன் சேர்ந்து தப்பி ஓடி தலைமறைமாகவும் முயற்சித்தார் நளினி. ராஜீவ் கொலை வழக்கில் நேரடியாக ஈடுபட்டிருந்த தணு, சிவராசன், சுபா மூவரும் இறந்துவிட்ட நிலையில் உயிரோடு இருந்த ஒரே நபர் நளினி மட்டும். ஆகையால் நளினி முதல் குற்றவாளி என நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

A18 பேரறிவாளன்

A18 பேரறிவாளன்

ராஜீவ் கொலை வழக்கில் A2 சாந்தன், A3 முருகன், A9 ராபர்ட் பயாஸ், A10 ஜெயக்குமார், A16 ரவிச்சந்திரன், A18 பேரறிவாளன். A18 பேரறிவாளன் மீது பேட்டரி வாங்கி கொடுத்ததாக மட்டும்தான் வழக்கு. ஆனால் அந்த பேட்டரிதான் மனித வெடிகுண்டான தணுவின் பெல்ட் பாமில் இருந்தது என்பது உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில் பெல்ட் பாம் எங்கே தயாரிக்கப்பட்டது என்பதும் விடைதெரியாத கேள்விக் குறி. அத்துடன் பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரி தியாகராஜன், பொய்யான வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இத்தகைய பல அம்சங்கள் பேரறிவாளனின் விடுதலையை சாத்தியப்படுத்தியதாக இருந்தது.

மத்திய அரசு மறு ஆய்வு மனு

மத்திய அரசு மறு ஆய்வு மனு

தற்போது பேரறிவாளன் விடுதலைக்கான காரணத்தை அப்படியே அடிப்படையாக வைத்து A1 நளினி உள்ளிட்ட 6 பேர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை இப்போது மத்திய அரசு கடுமையாக எதிர்த்து மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. மத்திய அரசானது, இந்த நாட்டின் முன்னாள் பிரதமரை படுகொலை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்யும் போது மத்திய அரசுக்கு உரிய வாய்ப்பை வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கிறது.

 எங்களை கேட்கனும்ல... மத்திய அரசு

எங்களை கேட்கனும்ல... மத்திய அரசு

அத்துடன் நளினி உள்ளிட்டோர் விடுதலை கோரி தாக்கல் செய்த மனுக்களில் மத்திய அரசு எதிர்மனுதாரர் என சேர்க்கப்படவில்லை; ஆகையால் மத்திய அரசு இந்த வழக்கில் இணைந்து கொள்ளவில்லை. இது நடைமுறை குறைபாடு எனவும் மத்திய அரசு சுட்டிக்காட்டி இருக்கிறது. மேலும் தற்போது உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கும் 6 பேரில் 4 பேர் ஈழத் தமிழர்கள்; இவர்கள் நீதியின் முன் நிவாரணம் பெறுவதற்கு ஏன் தகுதி இல்லாதவர்கள் என்பதை விளக்குவதற்கு ஒரு வாய்ப்பை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தந்திருக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருக்கிறது மத்திய அரசு. இத்தகைய காரனங்களால் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை விவகாரத்தில் சிக்கல் எழுந்துள்ளது என்றே சீனியர் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

English summary
Here reasons behind the Centre's Challenge Release Of Convicts In Rajiv Gandhi assassination case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X