சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை புதிய விமான நிலையம்.. மொத்தம் 4 ஏரியா பரிந்துரை.. 2 "ஷார்ட்லிஸ்ட்.." நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைக்க 4 இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டு அதில் இரு இடங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் திரிசூலம் உள்ள விமான நிலையத்தை பெரும்பாலானோர் பயன்படுத்தி விமான பயணம் மேற்கொள்வதால் அந்த பகுதியில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் சென்னைக்கு இன்னொரு விமான நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதன்படி சென்னை அருகே உள்ள புறநகர் பகுதியில் விமான நிலையம் அமைக்க இடங்களை தேர்வு செய்ய தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து திருப்போரூர், படாளம், பன்னூர், பரந்தூர் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்தது.

சென்னை அருகே புதிய விமான நிலையம்.. சென்னை அருகே புதிய விமான நிலையம்.. "இந்த" இரண்டில் ஒரு இடம்! எங்கு அமைகிறது ?

விமான நிலையம்

விமான நிலையம்

விமான நிலையத்திற்கு 2000 முதல் 3000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் இடத்தை தேர்வு செய்வது குறித்து டிட்கோவுடன் (தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்) தமிழக அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளையும் நடத்தியது. இதையடுத்து அந்த 4 இடங்களையும் தமிழக அரசு பரிந்துரைத்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு விண்ணப்பித்திருந்தது.

4 இடங்கள்

4 இடங்கள்

இதையடுத்து 4 இடங்களை ஆய்வு செய்யுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் இவர்கள் பன்னூர் அல்லது பரந்தூர் ஆகியவற்றை தேர்வு செய்துள்ளனர். இந்த இரண்டில் எந்த இடம் என்பது குறித்து டெல்லியில் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தி வருகிறார்.

4 இடங்களில் இரு இடங்கள்

4 இடங்களில் இரு இடங்கள்

அது போல் திரிசூலம் விமான நிலையத்திலிருந்து பன்னூர் அல்லது படாளம் செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆனால் திரிசூலத்திலிருந்து பரந்தூர் பயண தூரம் அதிகமாகும். அதாவது இரண்டு மணி நேரம் ஆகும். எனவே திருப்போரூரை விட்டுவிட்டு மற்ற 3 இடங்களில் விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விமான நிலையம் அமைய தேவையான மாசில்லாத சூழல், உயர் கட்டடங்கள், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்தப்பட்டன.

பயண தூரம்

பயண தூரம்

அது போல் திரிசூலம் விமான நிலையத்திலிருந்து பன்னூர் அல்லது படாளம் செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆனால் திரிசூலத்திலிருந்து பரந்தூர் பயண தூரம் அதிகமாகும். அதாவது இரண்டு மணி நேரம் ஆகும். எனவே திருப்போரூரை விட்டுவிட்டு மற்ற 3 இடங்களில் விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விமான நிலையம் அமைய தேவையான மாசில்லாத சூழல், உயர் கட்டடங்கள், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்தப்பட்டன.

பரந்தூரா? பன்னூரா?

பரந்தூரா? பன்னூரா?

இதில் பரந்தூர் அல்லது பன்னூர் என்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவை அறிக்கையாக விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இரு இடங்களிலும் OLS எனப்படும் Obstacle Limitation Surface Survey செய்யப்பட வேண்டும். அதாவது இரு இடங்களிலும் சில சிக்கல் இருப்பதால் OLSஐ நடத்துவது கட்டாயம். இந்த சர்வே முடிவுகளை வைத்து புதிய விமான நிலையம் அமையும் இடம் இறுதி செய்யப்படும்.

English summary
Why Chennai Airport authorities chose 2 sites out of 4 for new airport? Here are the reasons (சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க 4 இடங்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் பரந்தூர், பன்னூர் ஆகிய இரு இடங்களை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X