மெஸ்ஸிக்கு பக்கத்தில் இருக்கும் GOAT! ஆட்டுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு! இவ்ளோ நாள் தெரியாம போச்சே
சென்னை : உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸியின் மேஜிக்கால் அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றி இருக்கும் நிலையில், பலரும் ஆடு சிம்பலுடன் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உண்மையில் ஆட்டுக்கும் மெஸ்ஸிக்கும் என்ன சம்பந்தம் .. ஏன் ஆடு சிம்பலை பயன்படுத்துகிறார்கள் என பார்க்கலாம்..
22 ஆவது பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த 20ஆம் தேதி கத்தாரில் ஆரவாரமாக தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டன.
போர்ச்சுகல், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட கால்பந்து ஜாம்பவான் அணிகள் நடையை கட்டிய நிலையில் குரோசியா, மொராக்கோ, சவுதி அரேபியா உள்ளிட்ட கத்துக்குட்டி அணிகள் திடீர் ஹீரோக்களாக உருவெடுத்தன.

கால்பந்து திருவிழா
இதையடுத்து பலகட்ட ட்விஸ்ட்களுக்கு பிறகு நேற்று இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும் அர்ஜென்டினாவும் மல்லு கட்டின. இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசித்தனர். இந்த உலகக் கோப்பை தான் எனக்கு கடைசி.. இந்த முறை நான் கோப்பையை வெல்ல வேண்டியது மிகவும் அவசியம் என மனதுக்குள் உறுதி பூண்டு களமிறங்கினார் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி.

அர்ஜென்டினா
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அர்ஜென்டினாவே களத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஐந்தாவது நிமிடத்தில் இருந்தே அந்த அணியின் ஆதிக்கம் தொடங்கிய நிலையில் 21வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு மூலம் அடித்தார். அந்த பெனால்டி வாய்ப்பை பார்ப்பதற்கும் காண கண் கோடி வேண்டும். தொடர்ந்து 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவில் இரண்டாவது கோல் விழுந்தது. மெஸ்ஸி ஜூலியன் உள்ளிட்டோர் மிக அருமையாக விளையாடி அந்த கோலை போட்டனர்.

கோப்பை வசமானது
முதல் பாதி ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா இரண்டாவது பாதியிலும் கடும் போட்டி கொடுத்தது. ஆனால் 80வது நிமிடத்தில் திடீரென பிரான்ஸ் அணியின் கை ஓங்கியது. கச்சிதமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் நட்சத்திர வீரர் எம்மாப்பே கோலாக மாற்றினார். அடுத்த 90 வினாடிகளில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் இரண்டுக்கு இரண்டு என்ன சமநிலை அடைந்தது. தொடர்ந்து எக்ஸ்ட்ரா டைமிலும் தலா ஒரு கோல் அடிக்கப்பட்டது. இதை அடுத்து பெனால்டி சூட் அவுட் முறையில் அர்ஜென்டினா கோப்பையை வென்றது.

மெஸ்ஸி
அர்ஜென்டினாவின் கேப்டனும் உலக அளவில் மிகச்சிறந்த கால்பந்து வீரருமான லயனல் மெஸ்ஸி முதன்முறையாக கோப்பையை வென்றார். இதன் மூலம் 1986க்கு பிறகு கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை கனவு நனவாகி உள்ளது. மேலும் அர்ஜென்டினாவின் மூன்றாவது உலகக்கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினாலும் கோல்டன் பூட் அவரது கைவிட்டுப் போனது. ஆனாலும் கோல்டன் பால் விருதை வென்றார். இதன் மூலம் இரண்டு முறை கோல்டன் பால் விருது வென்ற முதல் வீரர் மெஸ்ஸி என்ற சாதனை படைத்தார். தொடர்ந்து மெசிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஆடு எதற்கு?
பலரும் 'GOAT' என்ற அடைமொழியோடு ஆட்டின் படத்தை வைத்து மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எதற்காக மெஸ்ஸிக்கு ஆட்டின் படத்தோடு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள் என்று பலரும் குழம்பி இருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (greatest of all time) என்பதன் சுருக்கமே கோட். கோட் என்பதற்கு ஆடு என்ற பெயரும் உள்ளதால் மெஸ்ஸிக்கு ஆட்டின் படத்தையும் வைத்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் மெஸ்ஸியா ரொனால்டோவா என்ற போட்டியிலும் மெஸ்ஸி முந்தி இருக்கிறார் என ஊடகங்கள் கூறி வருகின்றன.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications