சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் கான்வாயில்.. மேயர் பிரியா "புட்-போர்ட்" அடித்தது ஏன்? காரணமே வேற! உண்மையில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மேயர் பிரியா முதல்வர் ஸ்டாலினின் காரில் தொங்கிக்கொண்டு சென்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் இதற்கு என்ன காரணம்? பின்னணியில் நடந்தது என்ன? என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கரையை கடந்தது. மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து வலிமை இழந்தது. அதி தீவிர புயலாக இருந்த இந்த மாண்டஸ் புயலாக வலிமை குறைந்தது. இந்த புயல் காரணமாக சென்னையில் மிக கனமழை பெய்துள்ளது.

கரையை கடந்த பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவி வந்தது. இதன் பின் மேலும் நகர்ந்த புயல் தற்போது அரபிக்கடலை நோக்கி சென்றுள்ளது.

வார் ரூம் பிஸி! நேரடியாக களத்தில் இறங்கி.. இரவு முழுக்க பணி செய்த மேயர் பிரியா! புயலை வென்றது எப்படிவார் ரூம் பிஸி! நேரடியாக களத்தில் இறங்கி.. இரவு முழுக்க பணி செய்த மேயர் பிரியா! புயலை வென்றது எப்படி

மேயர் பிரியா

மேயர் பிரியா

சென்னை மேயர் பிரியா முதல்வர் ஸ்டாலினின் காரில் தொங்கிக்கொண்டு சென்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாஜகவினர் விமர்சனம் வைத்து வருகின்றனர். இணையத்தில் மேயர் பிரியாவை விமர்சனம் செய்து போஸ்ட் செய்து வருகின்றனர். ஒரு மேயர் இப்படி முதல்வரின் காரில் தொங்கிக்கொண்டு செல்லலாமா? இது சரியா என்று கேட்டுள்ளனர். அந்த காரில் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடியும் தொங்கிக்கொண்டு இருந்தார். இது தவறு என்று பாஜகவினர் உட்பட பலர் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

கார்

கார்

இந்த நிலையில் மேயர் பிரியா இப்படி காரில் தொங்கிக்கொண்டு சென்றது ஏன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். அதன்படி, நேற்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலின் புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். நேரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முக்கியமாக கடலோர பகுதிகளில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அங்கு முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

அதன் ஒரு பகுதியாக காசிமேட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அங்கு மீனவர்களை பார்த்து புயல் குறித்து விசாரித்தார். அதன்பின் உள்ளே இருந்த தெருக்களுக்குள் சென்று, அங்கு இருந்த மீனவர்களிடம் பேசி நலம் விசாரித்தார். மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்தது குறித்து கேட்டறிந்தார். அவர்களிடம் மீனவர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். தங்களுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டனர். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்க காசிமேடு துறைமுகம் செல்வதாக இருந்தது.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அந்த துறைமுகம் ஒரு 300 மீட்டர் தூரத்தில் இருந்தது. இந்த நிலையில் மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வருக்கு முன்பாக அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் முதல்வர் கான்வாய் நீளமாக இருந்ததால் அதற்கு முன்பாக வாகனத்தை கொண்டு செல்ல முடியவில்லை. முதல்வர் வாகனத்திலும் அதிகாரிகள் இருந்துள்ளனர். முதல்வருக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். ப்ரோட்டோகால்படி அங்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால் முதல்வரின் பாதுகாப்பு காரிலேயே இரண்டு பேரும் ஏறி உள்ளனர்.

பேட்டி

பேட்டி

அமைச்சர்கள், அதிகாரிகள் அவசரத்திற்கு இப்படி செல்வது பொதுவாக நடக்கும் விஷயம்தான். அதிலும் வெறும் 300 மீட்டர் தூரம் என்பதால் இவர்கள் சென்றுள்ளனர். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் சென்ற இரண்டு பேரும், முதல்வருக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வந்தனர். அங்கு முதல்வர் ஸ்டாலினுக்கு முன்பாக ஏற்பாடுகளை செய்தனர். அதன்பின் அங்கு வந்த முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். மேயர் பிரியா காரில் தொங்கியபடி சென்றதற்கு இதுதான் காரணம் என்று மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Why did Chennai mayor Priya footboard in CM Stalin convoy during an inspection?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X