மீன் நழுவ.. மாட்டிக்கொண்ட எம்.பி.. டைரக்ட் அட்டாக்! ‘அதான் பிரச்சனையே’.. மாஜியிடம் சீறிய எடப்பாடி!
சென்னை : கடந்த ஓரிரு நாட்களாக அதிமுகவில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு டென்ஷனை எகிற வைத்திருக்கிறதாம். சி.வி.சண்முகத்தின் பேச்சு, எடப்பாடியின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே கருதப்பட்டாலும், அந்த தொனியை ஈபிஎஸ்ஸே விரும்பவில்லையாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி, இவ்வளவு டைரக்டாக பாஜகவை அட்டாக் செய்ததை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பாஜக, தங்களுடன் கூட்டணியில் இருப்பதை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் ஜெயக்குமார், கேபி முனுசாமி போன்றோர் அமைதி காக்க, வேகமாக வார்த்தையை விட்டு மாட்டிக் கொண்டுள்ளார் சி.வி.சண்முகம்.

வடக்கில் தாமரைக்கு எதிரான குரல்
பாஜக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான வட மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை. பாஜக உடனான கூட்டணியால், சிறுபான்மையினர் வாக்குகள் பறிபோகின்றன, தங்கள் வெற்றி பாதிக்கப்படுகிறது, தங்களின் கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கே பாஜக உடனான கூட்டணி தான் காரணம் என்பதால், அவர்களுடன் கூட்டணி வேண்டாம் என அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இந்த அடிப்படையிலேயே அவர்கள் பாஜகவை அவ்வப்போது சீண்டி வந்தனர்.

சைலண்ட் ஆக்கிய எடப்பாடி
அப்போதெல்லாம், எடப்பாடி பழனிசாமியே அவர்களிடம், இப்படி பேசவேண்டாம், இங்கிருந்து டெல்லிக்கு ரிப்போர்ட் போய்க்கொண்டிருக்கிறது, கவனமாக இருங்கள் என அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியானது. எதிர்க்கட்சி யார் என்பது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துகளை பாஜக வாட்ச் செய்ததால், அவரிடம் எடப்பாடி பழனிசாமியே சில காலம் சைலண்டாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. அந்த வகையில் அவரும் அதன்பிறகு பாஜகவை சீண்டும் வகையில் பேசுவதில்லை.

வார்த்தையை விட்ட சண்முகம்
இந்தச் சூழலில் தான், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நெய்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை கொஞ்சம் மிகையாகவே சீண்டிவிட்டார். எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக் கூட்டங்களின்போது வெளிப்படும் அவரது உணர்வுகளைப் பிடித்தே, பாஜக கூட்டணியை ஈபிஎஸ்ஸும் விரும்பவில்லை என்பதை அறிந்து வார்த்தையை கடுமையாக விட்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

பல்ஸ் பார்க்கும் எடப்பாடி?
அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி ரியாக்ட் செய்யாமல் இருக்கிறார். பாஜக - அதிமுக உரசலை எடப்பாடி கண்டும் காணாதது இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், எடப்பாடியின் மனநிலையையே சி.வி.சண்முகம் பிரதிபலித்திருக்கிறார், எடப்பாடி பழனிசாமி நேரடியாக பாஜகவை விமர்சிக்க முடியாமல், இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து பாஜகவை சீண்டுகிறார் என்கிற ரீதியிலான பேச்சுகள் பாஜக வட்டாரத்தில் கிளம்பியுள்ளன. ஆனால், சி.வி.சண்முகத்தை, ஈபிஎஸ் கடிந்து கொண்டார் என்கிறார்கள் ஈபிஎஸ் வட்டாரத்தில்.

சீறிய ஈபிஎஸ்
பாஜக கூட்டணியை ஈபிஎஸ் பெரிதாக விரும்பாவிட்டாலும் கூட, சி.வி.சண்முகம் நேரடியாக பாஜகவை தாக்கியதை எடப்பாடியே ரசிக்கவில்லை என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். அதற்குத் தோதாக, பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோரும் கொஞ்சம் காட்டமாகப் பேசியதால் ஈபிஎஸ் கடுமையாக அப்செட்டாகி விட்டாராம். உடனே, சி.வி.சண்முகத்தை அழைத்து, இதுதொடர்பாகப் பேசி இனியும் சர்ச்சையை வளர்க்க வேண்டாம், அமைதியாக விட்டுவிடுங்கள், செய்தியாளர்கள் கேள்வி கேட்டாலும், பாலிஷாக பேசிவிடுங்கள் எனக் கூறியதாக கிசுகிசுக்கப்படுகிறது.

பிரச்சனைக்குரிய விஷயம்
சி.வி.சண்முகத்தின் பேச்சில் எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கிய விஷயம், பாஜகவை நேரடியாக தாக்கியது தானாம். மத்திய பாஜகவுக்கு திமுகவினர் பணிந்து கிடக்கிறார்கள், இங்கு இருக்கும்போது வீராவேசமாகப் பேசுகிறார்கள், டெல்லிக்குப் போனால், திமுக எம்.பிக்கள் பாஜகவிடம் பம்மி விடுகிறார்கள் எனப் பேசியதெல்லாம் சரி தான், காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன், திமுகவும் பாஜகவும் ஒன்றுதான், திமுகவை பாஜக கூட்டணிக்கு வரச் சொல்கிறது என்றெல்லாம் பேசியதுதான் சிக்கலாகிவிட்டது என எடப்பாடி பழனிசாமி கருதுகிறாராம்.

துடிக்கிறாங்களே
சி.வி.சண்முகம் இப்படிப் பேசிய நிலையில், அது குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டுவிட்டு, பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக துடியாய் துடிக்கிறது, இதைத் தான் சி.வி.சண்முகம் கூறியுள்ளார் எனத் தெரிவித்தார். இதில், திமுக + பாஜக கூட்டணி அமையப்போகிறது என்கிற ரீதியிலான விமர்சனம் இருந்தாலும், இதில் பாஜக நேரடியாகச் சீண்டப்படவில்லை, திமுகவை விமர்சிப்பதாகவே இருக்கிறது. இதில் தான் சி.வி.சண்முகம் டோட்டலாக கோட்டை விட்டு, பாஜகவின் எதிர்ப்பைச் சம்பாதித்து விட்டார் என்பதில் எடப்பாடிக்கு கொஞ்சம் கோபமாம்.

கழுவுற மீனில் நழுவிய மீன்
இதைச் சுட்டிக்காட்டியே சண்முகத்திடம் பேசினாராம் எடப்பாடி பழனிசாமி. ஜெயக்குமாரைப் பாருங்க, "கழுவுற மீனில் நழுவுற மீனாக" பாலிஷாக பேசி எஸ்கேப் ஆகிவிட்டார். நீங்களும் அப்படி திமுகவை விமர்சித்து, அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார்கள் எனப் பேசியிருந்தால் பிரச்சனையில்லை. பாஜக தொண்டர்கள் பற்றி அவன் இவன் என்றெல்லாம் பேசியிருக்கீங்க.. அதற்கு அவங்களும் ரியாக்ட் செய்யவும் தான் பிரச்சனையாகிடுச்சு எனச் சுட்டிக்காட்டி உள்ளாராம்.

டோட்டலா கோட்டை விட்டுட்டார்
இப்போது நிலை எப்படி இருந்தாலும், பாஜகவை முழுமையாக பகைத்துக் கொள்வது சரியான அணுகுமுறையாக இருக்காது. பாஜகவை எதிர்த்துப் பேச எனக்குத் தெரியாதா? ஆனால், ஏன் பொறுமையாக இருக்கிறேன்? தேர்தலுக்கு அவர்கள் தயவு நமக்குத் தேவை இல்லை என்றாலும், நாம் பாஜக தலைமையோடு இணக்கமான உறவைத்தான் கடைபிடிக்க வேண்டும், தேர்தலைத் தாண்டி சில கணக்குகள் இருக்கின்றன என்கிற ரீதியில் ஈபிஎஸ் பேசி இருக்கிறாராம்.

பலியாகிவிடக்கூடாது
அதாவது, 2024 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமையாமல் போனாலும், பாஜக இங்கு ஒரு சீட் கூட ஜெயிக்காமல் போனாலும், தேசிய அளவில் அவர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக்கூடும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எதிர்க்கட்சிகளுக்கு பல வகைகளிலும் நெருக்கடி கொடுப்பார்கள், அதற்கு நாமும் பலியாகி விடக்கூடாது, நாம் பேசுவது டெல்லிக்கு தெரியவா போகிறது என நினைக்கக்கூடாது, நிலைமை இப்போது முன்பு போல இல்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் எடப்பாடி பழனிசாமி பொங்கியுள்ளாராம்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications