சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு வார்த்தை கூட சொல்லாத எடப்பாடி.. குறுக்கே புகுந்த ஸ்டாலின்.. பட்டென பேசி.. இதுதான் ராஜதந்திரம்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மிஸ் செய்த முக்கியமான விஷயம் ஒன்றை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசியது.. அதிமுக கட்சியினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. பொதுக்குழு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எடப்பாடிக்கு எதிராக இடைக்கால தடை விதித்து உள்ளது.

அதிமுகவில் மாற்றங்கள் எதையும் செய்ய கூடாது. பொதுச்செயலாளர் தேர்தல் எதையும் நடத்த கூடாது என்று எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.

தொண்டர்கள்

தொண்டர்கள்

இந்த நிலையில் இடைப்பட்ட காலத்தில் அதிமுகவில் தொண்டர்களை கவர ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் பல்வேறு கூட்டங்களை வீட்டில் நடத்தி நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி சார்பாக கட்சி பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதிமுக மெகா கூட்டணி அமைக்கும். அடுத்து நம்முடைய ஆட்சிதான் என்றெல்லாம் கூறி எடப்பாடி தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்ட முயன்று கொண்டு இருக்கிறார். எப்படியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பாக முடிந்த அளவு தொண்டர்களை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று அதிமுகவின் இரண்டு அணியும் தீவிரமாக முயற்சிகளை செய்து வருகிறது.

என்ன?

என்ன?

இந்த நிலையில்தான் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவிற்காக ஓபிஎஸ், சசிகலா வாழ்த்து செய்தி வெளியிட்டனர். அதிமுகவில் எம்ஜிஆர் முகத்திற்காக வாக்களிக்கும் மக்கள் பல கோடி பேர் உள்ளனர். எடப்பாடி - ஓபிஎஸ் காலம் என்றாலும்.. இப்போதும் கூட எம்ஜிஆர் முகத்திற்காக அதிமுகவை தீவிரமாக ஆதரிக்கும் மக்கள் கூட்டம் உள்ளது. இதன் காரணமாகவே வி.என்.ஜானகி அம்மாளின் பிறந்த நாள், இறந்த நாள் தினங்களையும் அதிமுக தொண்டர்கள் நினைவு கூர்வது வழக்கம். எம்ஜிஆருக்கு என்று இருக்கும் மிகப்பெரிய வாக்கு வங்கிதான் இதற்கு காரணம்.

எடப்பாடி சொல்லவில்லை

எடப்பாடி சொல்லவில்லை

இந்த நிலையில்தான் வி.என்.ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவிற்காக ஓபிஎஸ், சசிகலா வாழ்த்து செய்தி வெளியிட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதை பற்றி வாயே திறக்கவில்லை . அவர் வாழ்த்து செய்தி எதையும் வெளியிடவில்லை. ஜெயலலிதா - ஜானகி மோதல் காரணமாக, தன்னை ஜெயலலிதாவின் அரசியல் தொண்டன் என்று காட்டிக்கொள்ளும் விதமாக எடப்பாடி இப்படி செய்ததாக கூறப்படுகிறது. இதை பற்றி பேச வேண்டாம் என்பதற்காக அவர் பேசாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது எம்ஜிஆர் ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஓ பன்னீர்செல்வம், சசிகலா வாழ்த்து தெரிவித்த நிலையில் எடப்பாடி எதுவும் சொல்லாமல் இருந்தது எம்ஜிஆர் ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இப்படிப்பட்ட நிலையில்தான் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இதற்காக நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். எடப்பாடி மிஸ் செய்த சான்சை பயன்படுத்திக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசினார். எம்ஜிஆர் குறித்து முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசினார். நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். நான் படம் நடித்த போது அதை பற்றி எம்ஜிஆர் என்னிடம் பேசி இருக்கிறார். அவருடன் நெருக்கமாக நான் பழகி இருக்கிறேன், என்று எம்ஜிஆரை புகழ்ந்து பேசினார். கடந்த சட்டசபை தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின் இப்படி எம்ஜிஆர் பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் பற்றி பேசாமல் மிஸ் செய்த நிலையில்.. எம்ஜிஆர் தொண்டர்களை தன் பக்கம் கவரும் விதமாக ஸ்டாலின் பேசி இருக்கிறார்.. ஆனால் எடப்பாடி ஏன் இந்த முறை மிகவும் மௌனமாக இருந்தார்.. எம்ஜிஆர் எதுவுமே சொல்லவில்லையே என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.

English summary
Why did not Edappadi Palanisamy talk about MGR on Janagi function? Stalin master plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X