"சர்க்கஸ்" செய்யும் பவன் கல்யாண்.. கார்த்தியை சீண்டி மாட்டிக்கிட்டாரே.. சொந்த ரசிகர்களே கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் பேசும் விஷயங்கள், செய்யும் விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிண்டலுக்கு உள்ளாகி வருகின்றன. அதிலும் திருப்பதி லட்டு விவகாரத்தில் அவர் செய்ததை எல்லாம் பார்த்து.. பவனை பூந்தியாக உடைத்து கிண்டல் செய்து கொண்டு இருக்கின்றனர் அவர் ரசிகர்கள்.

பொதுவாக தெலுங்கு சினமா ரசிகர்கள் தமிழர்களை விட அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அதிலும் பவன் கல்யாணுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.; ஆனால் அப்படிப்பட்ட பவன் கல்யாணுக்கே அங்கே கடுமையான எதிர்ப்புகள் வர தொடங்கி உள்ளன. ஆந்திர சினிமா ரசிகர்களுக்கு ஒரு குணம் உண்டு. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் extreme masculine celebration. அதீத கொண்டாட்டங்கள், ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்கள், முரட்டு தனமான ஆண் குணங்களை ரசிப்பது போன்ற தீவிர குணம் கொண்டவர்கள். அஞ்சலியை கைவைத்து தள்ளிவிடும் பாலையாவிற்கு விசில் அடிக்க எல்லாம் ஆந்திர சினிமா ரசிகர்களால் மட்டுமே முடியும். தமிழிலோ, மலையாளத்திலோ இது இப்போது சாத்தியம் இல்லை.

pawan kalyan tirupati

அப்படிப்பட்ட ஆந்திர சினிமா ரசிகர்களுக்கு.. திரையில் மட்டுமின்றி அரசியலிலும் சினிமா "ஓட்டிக்கொண்டு" இருப்பவர்தான் பவன் கல்யாண். இவரை யாரோ ஆழ் மனதிற்குள் போய்.. நீங்க திரையில் மட்டுமல்ல தரையிலும் ஹீரோதான் என்று நம்ப வைத்து இருப்பார்கள் போல. பிரச்சார மேடையில் கூட சினிமா வசனம் போலவேதான் பேசுவது இவர் வழக்கம்.

பெரிய எக்ஸ் யூவி காரில் 7 பேர் இருக்க இடம் இருந்தும் கூட.. நான் டாப்பில்தான் உட்காருவேன் என்று கார் மேலே அமர்ந்து சினிமா பாணியில் செல்வதெல்லாம் "ஹீரோயிசம்" என்று நினைக்கும் அளவிற்குத்தான் பவன் கல்யாணின் இதுவரையிலான அரசியல் புரிதல்கள் இருந்துள்ளன.

அப்படிப்பட்ட பவன்தான் இப்போது திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்க்கஸ் நடத்திக்கொண்டு இருக்கிறார். ஒரு கோமாளியை ஆட்சியை செய்ய தேர்வு செய்தால்.. ஆட்சியை எதிர்பார்க்காதீர்கள்.. சர்க்கசை எதிர்பாருங்கள் என்பார்கள். அப்படிதான் பவன் லட்டுவை வைத்து சர்க்கஸ் நடத்திக்கொண்டு இருக்கிறார்.

லட்டு விவகாரம்: திருப்பதியில் மாட்டுகொழுப்பு லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க இந்துக்கள் இடையே அதிர்ச்சியை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் பலரும் இந்த சம்பவம் காரணமாக கொதித்து போய் உள்ளனர்.

இதை அடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அங்கே சாந்தி யாகம் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை 'சாந்தி யாகம்' கோயிலில் நடத்தப்பட்டது திருப்பதி லட்டு தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த புகார் தற்போது உண்மையாகி உள்ளது. லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகள் மாட்டுக் கொழுப்பு தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை வெளியிட்டு உள்ளன.

ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பவன் கல்யாண் காமெடிகள்; திருப்பதியில் உள்ள திருமலா கோயிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதற்காக பிராயச்சித்தமாக ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார். அவரின் உண்ணாவிரதம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது.

சனாதனத்தை காக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்த இவர்.. காவி உடை அணிந்து கொண்டு பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்த கோவில் நிர்வாகத்தில் இருப்பது எல்லாம் இந்துக்கள்.. லட்டுவை பிடித்தது குறிப்பிட்ட சிலர் மட்டுமே அப்படி இருக்க.. இந்த சம்பவத்தில் தேவையில்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை இழுத்து பேசி காமெடி செய்தார் பவன் கல்யாண். இது போக இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் கோவில்களில் செய்வீர்களா என்று தேவையில்லாமல் இழுத்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ஒரு துணை முதல்வராக கோவிலுக்கு ஏற்பட்ட அவலத்திற்கு.. சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல்.. விரதம் இருப்பது.. கோவிலில் பூஜை செய்வது என்று பவன் செய்யும் விஷயங்கள் காமெடியின் உச்சமாக உள்ளது. இந்த அவலத்தை பற்றி கோவில் அர்ச்சகர்கள் பூஜை இருக்கலாம்.. ஆனால் ஒரு துணை முதல்வர் கலப்படம் செய்தவர்களை தண்டிக்காமல் விரதம் இருந்து என்ன நடக்க போகிறது.

கார்த்தி: இப்படிப்பட்ட நிலையில்தான் ஹைதராபாத்தில் நடந்த 'மெய்யழகன்' படத்தின் விழாவில் லட்டு பற்றிய கேள்விக்கு கார்த்தி அளித்த பதிலுக்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்போது லட்டு பற்றி பேசக்கூடாது. அது சர்ச்சைக்குரிய விஷயம். எங்களுக்கு அது வேண்டாம்., என்று தன்மையாக நேர்மையாக கார்த்தி பேசினார்.

அவர் பேசியதில் தவறு எதுவும் இல்லை. இதை கூட புரிந்து கொள்ளாமல் பவன் இதிலும் அரசியல் செய்யும் வகையில், சனாதன தர்மத்துக்கு எதிராக இப்படி பேசக்கூடாது. இதை வைத்து சிரித்தபடி எல்லாம் பேச கூடாது. எங்கள் திருப்பதி லட்டு பற்றி பேசுவதற்கு முன்பு 100 முறை யோசித்து பேசுங்கள்.. வார்த்தைகளை அளந்து பேசுங்கள் என்று கடுமையாக பேசி உள்ளார்.

இதற்கு கார்த்தி.. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக மன்னிப்பு கேட்டுள்ளார். கார்த்தி பேசியதில் தவறு இல்லை. இதை கூட புரிந்து கொள்ளாமல் பவன் இதிலும் அரசியல் செய்யும் வகையில் சர்ச்சையாக்கி உள்ள நிலையில் அவரின் ரசிகர்களே கார்த்திக்கு ஆதரவாகவும்.. பவனை தாக்கியும் பேச தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+