என்னங்க சரத்குமார் இப்படி சொல்லிட்டாரே.. திமுகவுடன் கூட்டணியா.. அப்போ ராதிகா.. ஆட்டத்துலயே இல்லையா?
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அரசியல் குறித்து நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இது பரபரப்பாக பேசப்படுகிறது.
பொன்னியின் செல்வன், ருத்ரன் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றதற்காக அந்த படங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க நடிகர் சரத்குமார் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த சந்திப்பில் சரத்குமார் பேசுகையில் நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள். மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ்தான் பேசி வருகிறேன்.

கலைதான் தொழில்: கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன். ஆனால் தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளேன், கலைதான் என் தொழில். பொன்னியின் செல்வன் பட புரமோஷனில் நான் கலந்து கொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் நான் சென்னையில் இல்லாததால் கலந்து கொள்ள முடியவில்லை.
2026 இல் மாஸ் அறிவிப்பு: மணிரத்னம் அந்த படத்தில் எனக்கு சிறந்த கதாபாத்திரத்தை தந்திருந்தார். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது. விரைவில் அதற்காக தனியாக பத்திரிகை நண்பர்களைச் சந்திப்பேன். 2026 இல் ஒரு மாஸான அறிவிப்பு வரும் என சரத்குமார் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இல்லையா: இந்த பேட்டியில் உற்று கவனித்தால் அவர் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து எதையும் பேசவில்லை. அப்படி என்றால் அவர் ஆட்டத்திலேயே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் அணி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை எல்லாம் 2026 தமிழக சட்டசபை தேர்தலை பற்றி பேசினாலும், அதற்கு முன்பு நடைபெறும் 2024 லோக்சபா தேர்தலை பற்றி பேசாமல் இல்லை.
2024 நாடாளுமன்றத் தேர்தல்: திமுகவை எடுத்துக் கொண்டால் 2024 இல் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம் என்கிறார்கள். அதிமுகவை பொருத்தவரை அதிமுக பாஜக கூட்டணி வரும் 2024 இல் வெற்றிக் கூட்டணியாக மாறும் என்கிறார்கள். அது போல் மக்கள் நீதி மய்யம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. இப்படியே பிற கட்சிகளும் ஒவ்வொன்றை கூறி வருகிறார்கள்

சரத்குமார் பேசாதது ஏன்: அப்படியிருக்க சரத்குமார் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசாதது ஏன்? கடந்த 2019ஆம் ஆண்டு கூட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எந்த வேட்பாளரையும் அவர் களமிறக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து சரத்குமார் கட்சி போட்டியிட்டது. இதில் என்ன ஒரு காமெடி என்றால் ஆங்காங்கே கூடுதல் சீட்டு கிடைக்கவில்லை என அங்கலாய்க்கிறார்கள். நம் சரத்குமாரோ போட்டியிட ஆள் இல்லை என கூறி இரு சீட்டுகளை மக்கள் நீதி மய்யத்திடமே ஒப்படைத்துவிட்டார்.
பாஜகவை விமர்சிக்காத சரத்: அதிமுகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கெனவே சரத்குமார் அறிவித்துவிட்டார். அப்படியென்றால் திமுகவுடன் கூட்டணியா? இல்லை வெளியே இருந்தபடியே ஆதரிக்க போகிறாரா? அண்மைக்காலமாக பாஜகவை சரத்குமார் அந்தளவுக்கு விமர்சிப்பதில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இதற்கு தீனி போடும் வகையில் இருந்தது மனைவி ராதிகாவின் செயல்பாடு.!
பாஜகவுடன் கூட்டணியா: அதாவது கடந்த 14 ஆம் தேதி மத்திய இணையமைச்சர் எல் முருகனின் இல்லத்தில் நடந்த தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகை ராதிகா சரத்குமாரும் கலந்து கொண்டார். பிரதமர் மோடி விஐபிக்களை பார்த்து வணக்கம் கூறி வந்த போது ராதிகாவையும் பார்த்து சிரித்து வணக்கம் கூறியிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் ராதிகா பாஜகவில் இணைகிறாரா என கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக சிலர் கூறினர். எனவே பாஜகவுக்கு வெளியே இருந்து கொண்டு சரத்குமார் ஆதரவு தெரிவிக்கிறாரா? அதற்கு பதிலாக ராஜ்யசபா எம்பி பதவியை பெற்றுக் கொள்வாரா என்ற கேள்வியெல்லாம் எழுந்தது.
-
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!











Click it and Unblock the Notifications