ரொம்ப நல்லாருக்கே.. எடப்பாடி மனசை குளிர வைத்த "பெஞ்சமின்".. 70% ஓவர் ஓவர்.. திகைத்து பார்த்த ஓபிஎஸ்
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாளை காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு நடக்க உள்ளது.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுமார் 5 மணி நேரம் மொத்தமாக இந்த வழக்கின் விசாரணை ஒற்றை நீதிபதி முன்பாக நடைபெற்றது. இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான மனுவில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

தீர்ப்பு
தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு நடக்கும். இருந்தாலும் அதிமுக பொதுக்குழுவிற்கு தீவிரமான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்து வருகிறது. அதிமுக பொதுக்குழு கடந்த முறை போலவே இந்த முறையும் வானகரத்தில் நடக்க உள்ளது. ஆனால் இந்த முறை வானகரத்தில் ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடக்காமல் மண்டபம் இருக்கும் பகுதியில் வெளியே டென்ட் போட்டு, பெரிய பந்தல் போட்டு பொதுக்குழுவை நடத்த உள்ளனர்.

ஏற்பாடு
இதற்காக 30 ஆயிரம் சதுர அடியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 1200 பேர் சாப்பிடும் வகையில் உணவு பந்தல் போடப்பட்டுள்ளது. மேலே மேடை 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கீழே உறுப்பினர்கள் அமரும் பகுதி 2 அடி உயரத்திற்கு இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

70% ஓவர்
நாளை பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் நேற்று மாலை வரை 70 சதவிகித ஏற்பாடுகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள ஏற்பாடுகள் இன்று முடியும் என்று கூறப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தையும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்தான் மேற்கொண்டார். மற்ற மாஜி அமைச்சர்கள் வந்து பார்வையிட்டாலும், பெஞ்சமின்தான் பணிகளை நேரில் பார்வையிட்டு இருக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு இது தொடர்பான வீடியோக்கள் போட்டு காட்டப்பட்டுள்ளன.

எடப்பாடி
எடப்பாடி இந்த பணிகளை நேரில் பார்வையிடவில்லை. ஆனால் அவர் ஏற்பாடுகளை போனில் வீடியோவாக பார்த்து இருக்கிறார். கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்து உள்ளனர். வெள்ளை - பச்சை நிறத்தில் மழை நீர் புகாத வகையில் பந்தல் போட்டுள்ளனர். எடப்பாடி - எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் மட்டும் அடங்கிய மிகப்பெரிய பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

தோரணம்
அதாவது இவர்களின் உருவம் மட்டும் இரண்டு பக்கமும் இருக்கும் வகையில் பொதுக்குழுவிற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளை பார்த்து எடப்பாடி பழனிசாமி அதை வியந்து பாராட்டியதாக கூறப்படுகிறது. ஏற்பாடுகள் எல்லாம் நல்லா இருக்கே.. மேடை பெரிதாக அமைக்கப்பட்டு இருக்கிறதே என்று எடப்பாடி பெஞ்சமினை பாராட்டியதாக கூறப்படுகிறது. பொதுக்குழுவிற்காக இந்த முறை பெரிதாக வெள்ளை பந்தல் போட்டு மேடை அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்
பொதுக்குழுவிற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு நம்பிக்கையாக பணிகளை செய்து வருகிறதாம். ஆனால் ஓபிஎஸ் தரப்போ பொதுக்குழு நடக்காது என்ற நம்பிக்கையில் இப்போதும் இருக்கிறதாம். எப்படியும் பொதுக்குழுவை நடத்த விட மாட்டோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம். ஹைகோர்ட் தீர்ப்பு இன்னும் வராத நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக பொதுக்குழுவிற்கு தயாராகி வருவது ஓபிஎஸ் தரப்பை அதிர வைத்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications