அடிமடியிலேயே கைவச்சா விடுவாரா? அண்ணாமலை பற்றி கேட்டதும்.. கோபம் தலைக்கேறிய எடப்பாடி.. ஏன் தெரியுமா?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. இந்த மோதலுக்கு இடையில் முக்கியமான ஒரு காரணம் உள்ளது.
சமீபத்தில் திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விஷயங்களை அண்ணாமலை பேசினார்.
அவர் தனது பேட்டியில், ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையை அப்படியே எதிர்க்க வேண்டும். அடி ஆழத்தில் இருந்து எதிர்க்க வேண்டும். திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை.
இது பார்ட் 1னுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம்.
லோக்சபா தேர்தலுக்கு முன் இதை பற்றி எல்லாம் பேசுவோம். அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசுவோம். நீங்கள் நினைப்பீர்கள்.. அண்ணாமலை திமுக பற்றி மட்டும்தான் பேசுவார் என்று.

இல்லை அனைத்து ஊழல் பற்றியும் நாங்கள் பேசுவோம். 2024 தேர்தலுக்கு முன் எல்லோரையும் பற்றியும் பேசுவோம். ஊழல் பற்றி பேசுவோம் என்றால் எல்லாரையும் பற்றியும் பேசுவோம், ஒருவரை பற்றி மட்டும் பேசினால் நம்மை மக்கள் நம்ப மாட்டார்கள்.
உங்களை எதிர்க்க கூடாது என்றால் டெல்லி போய் அண்ணாமலையை பார்த்துவிட்டு வாருங்கள். அண்ணாமலை இருக்கும் வரை அனைவரின் ஊழலையும் பற்றி பேசுவேன். என்று குறிப்பிட்டு இருந்தார். அண்ணாமலை இப்படி பேசியது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பதிலடி: இதையடுத்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அண்ணாமலை பெயரை கேட்டதும் கோபம் அடைந்த எடப்பாடி தனது பேட்டியில், அண்ணாமலை பற்றி என்னிடம் கேட்காதீங்க. அவரை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.
முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். அவர் இப்படி பேசி பேசித்தான் பிரபலம் ஆகி உள்ளார். அவர் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகி உள்ளார்.
அவர் ஊழல் பட்டியலை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. சொத்து பட்டியலை வெளியிட்டதாகவே தெரிகிறது என்று எடப்பாடி கூறினார். எடப்பாடி - அண்ணாமலை இடையிலான இந்த மோதல் கடந்த சில நாட்களாகவே இருக்கிறது.

சமீபத்தில் பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன்.
தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன்.
கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.
இதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி - கூட்டணி பற்றி எல்லாம் மாநில தலைவர்கள் பாஜகவில் முடிவு எடுக்க மாட்டார்கள். தேசிய தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். பாஜகவில் அமித் ஷா போன்றவர்கள்தான் கூட்டணி பற்றி முடிவு எடுப்பார் என்று கூறினார்.
இதற்கு மீண்டும் பதில் தந்த அண்ணாமலை,
அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதாக என்பதற்கு ‛இருக்கிறது' என்று தான் அமித்ஷா கூறினார். நான் அமித் ஷாவுடன் இரண்டு மணி நேரம் பேசினேன். அதில் பல விஷயங்களை பேசினோம். அதை எல்லாம் இங்கே சொல்ல முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை.
இதுதான் நடக்கும் என்று எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கூட்டணி விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கூற இயலாது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. அரசியலில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று கூறினார்.

மோதலுக்கு காரணம்; இவர்கள் இடையிலான இந்த மோதலுக்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளது என்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் பாஜக வளர்வதை எடப்பாடி விரும்பவில்லை. அண்ணாமலை வளர்ந்தால் கொங்கில் தன்னுடைய ஆதிக்கத்தை எதிர்க்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கொங்கில் வலிமையாக உள்ள நிலையில், பாஜக அந்த இடத்தை பிடிக்க பார்க்கிறது. அது சரியில்லை. முக்கியமாக அண்ணாமலை அந்த இடத்தை பிடிக்க பார்க்கிறார் என்பதால் அண்ணாமலையை எடப்பாடி எதிர்க்கிறார் என்கிறார்கள்.
முக்கியமாக தன் அரசியலின் அடிமடியிலேயே பாஜக கை வைக்கிறது என்று எடப்பாடி நினைக்கிறாராம். அதோடு எடப்பாடி இருக்கும் வரை கொங்கில் நாம் 2ம் கட்ட தலைவராகவே இருப்போம் என்பதால்தான் எடப்பாடியை அண்ணாமலையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் நேருக்கு நேரான மோதலாக மாற இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications