சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரிய சிக்கலாகிடும்.. வேண்டாம்! எடப்பாடிக்கு பறந்த வார்னிங்.. "நேக்காக" எடுத்த முடிவு.. செம ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அவரின் வழக்கறிஞர் குழு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    சின்னம்மாவும் வரனும்- பாசம் காட்டும் OPS

    அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டாலும் அதிமுகவிற்குள் இன்னும் மோதல் நிற்கவில்லை. அதிமுகவில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஓ பன்னீர்செல்வமுடன் இணைந்து செயலாற்ற முடியாது என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமாக வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    அதிமுக அலுவலக சாவி வழக்கு.. தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு! இபிஎஸ், வருவாய்த் துறைக்கு நோட்டீஸ்அதிமுக அலுவலக சாவி வழக்கு.. தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு! இபிஎஸ், வருவாய்த் துறைக்கு நோட்டீஸ்

     பொதுக்குழு வழக்கு

    பொதுக்குழு வழக்கு

    அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததால் அதிமுகவில் அனைத்தும் ஜூலை 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலைக்கு செல்கிறது. அதாவது அதிமுகவில் ஜெயலலிதாதான் இப்போதும் பொதுச்செயலாளர். கட்சியில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி இருக்க முடியாது. அந்த பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தானாக நீக்கப்படுகிறார். அதோடு கட்சியில் எடப்பாடி பழனிசாமி மூலம் தனியாக அறிவிக்கப்பட்ட பதவிகளும் நீக்கப்படுகின்றன.

    பதவிகள் நீக்கம்

    பதவிகள் நீக்கம்

    தானாக இந்த பதவிகள் நீக்கப்படும். உதாரணமாக பொருளாளர் பதவியில் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது தானாக செல்லாது என்று அறிவிக்கப்படும். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லாது என்று முடிவிற்கு வந்துள்ளது. சட்டப்படி தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.

    எடப்பாடி

    எடப்பாடி

    இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கைகளில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று பயன்படுத்த கூடாது என்று அவரின் லீகல் டீம் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளது. அப்படி செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு போல மாறிவிடும். அது பெரிய சிக்கலாகும். அதனால் இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.

     கவனம்

    கவனம்

    ஆனால் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தினால் அது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படும். ஓ பன்னீர்செல்வத்திடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும். அதோடு மேல்முறையீடு செய்து இருக்கிறார். இவரே இன்னும் அந்த 2 பதவிகள் காலாவதியாகவில்லை என்று ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும். நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் வாதம் வைக்க இது வசதியாக மாறிவிடும்.

    நேக்காக முடிவு

    நேக்காக முடிவு

    இந்த பக்கம் போனால் கோர்ட் அவமதிப்பு. அந்த பக்கம் போனால் மேல்முறையீட்டு வழக்கில் சிக்கல் என்று நடுவில் எடப்பாடி மாட்டிக்கொண்டார். இதனால் எடப்பாடி இரண்டையும் பயன்படுத்துவதை தவிர்த்து உள்ளார். ஆம் அவர் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதையும் பயன்படுத்தவில்லை, இடைக்கால பொதுச்செயலாளர் என்பதையும் பயன்படுத்தவில்லை. மாறாக எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் என்று மட்டுமே பயன்படுத்தி உள்ளார். இன்று கிருஷ்ண ஜெயந்திக்கு அவர் பயன்படுத்திய அறிக்கையிலும்

    English summary
    Why does not Edappadi Palanisamy use his posting names in his statement letter? அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அவரின் வழக்கறிஞர் குழு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X