ஆபத்துங்க! எடப்பாடிக்கு போன போன்.. "ஐயோ".. எச்சரித்த சீனியர்.. டிடிவியை எதிர்த்தது இதுக்குத்தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் மெகா கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு இடம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதற்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2024 லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாடு கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. லோக்சபா தேர்தலை மனதில் வைத்து மத்திய அமைச்சர்கள் 70 பேரை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் திட்டத்தில் மத்திய பாஜக களமிறங்கி உள்ளது.

அடுத்தடுத்து பாஜகவின் டாப் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் அதிமுகவும் இந்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

அந்த வகையில்தான்.. 2024 தேர்தலுக்கு நாங்கள் மெகா கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவித்தார்

மெகா கூட்டணி

மெகா கூட்டணி

எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த கூட்டம் ஒன்றில் திடீரென அதிமுக கூட்டம் குறித்து பேசினார். அதில், நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார்.

 கவனம்

கவனம்


எடப்பாடி பழனிசாமி இப்படி சொன்னதும்.. உடனே கூட்டணி குறித்த பல்வேறு விவாதங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுந்தது. இரண்டு கட்சிகள் இந்த கூட்டணியை வரவேற்றன. முதல் கட்சி பாஜக. அண்ணாமலை இது பற்றி அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களின் கூட்டணி பெரிய கூட்டணி. அதில் இணைவோம். அவர்களின் தலைமையில் கீழ் செயல்படுவதில் எந்த தவறும் இல்லை, என்று கூறினார்.

 அமமுக

அமமுக

இரண்டாவதாக அமமுக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இதை வரவேற்றார். அவர் அளித்த பேட்டியில், திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்போம். நாங்கள், திமுகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு எப்போதும் நேசக்கரம் நீட்டுவோம். திமுக என்ற தீய சக்தியை வீழ்த்துவதற்காக தயாராக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும், என்னவாக இருந்தாலும், எங்கே இருந்தாலும் சரி, மெகா கூட்டணி அமைக்கிறவர்களாக இருந்தாலும் சரி நாம் கூட்டணி அமைத்தால்தான் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த முடியும் என்று டிடிவி தினகரன் பேசி உளளார்.

விவாதம்

விவாதம்

எடப்பாடி பேசிய மறுநாளே டிடிவி தினகரன் மெகா கூட்டணி பற்றி பேசியது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. எடப்பாடி - டிடிவி சேர போகிறார்களோ என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் இடையே எழுந்தது. இந்த நிலையில்தான் டிடிவி தினகரன் சார்பாக எடப்பாடியிடம் சிலர் பேசி இருக்கிறார்களாம். அதில், நம்மிடம் முக்குலத்தோர் ஆதரவு இல்லை. ஆனால் தென் மாவட்டங்களில் டிடிவிக்கு முக்குலத்தோர் சப்போர்ட் உள்ளது.

சப்போர்ட்

சப்போர்ட்

அவர் உள்ளே வந்தால் திமுகவை எளிதாக தென் மண்டலத்தில் வீழ்த்த முடியும். தென் மண்டலம் - மேற்கு மண்டலம் இணைந்தால் திமுகவை எளிதாக வீழ்த்தலாம். டிடிவி வந்தால் கேம் சேஞ்சராக இருப்பார் என்று கூறியுள்ளனர். ஆனால் எடப்பாடிக்கு நெருக்கமான டாப் தலைகள் சிலர்.. டிடிவி வேண்டாம். அவருக்கு டெல்லியின் நேரடி சப்போர்ட் இப்போது இருக்கிறது. அவர் உள்ளே வந்தால் கட்சியை கபளீகரம் செய்துவிடுவார். அவரை பற்றி தெரியாதா?

யார் அவர்?

யார் அவர்?

அவர் ஜெயலலிதா காலத்திலேயே அரசியல் செய்தவர். அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை கைப்பற்றி விடுவார். அது மட்டும் வேண்டாம், நமக்குத்தான் ஆபத்து என்று எடப்பாடிக்கு மூத்த தலைகள் போன் போட்டு அறிவுரை கூறி உள்ளனர். இதையடுத்தே டிடிவி தினகரனை தொடக்கத்திலேயே கட் பண்ணி விட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று டிடிவி தினகரனுக்கு எதிராக பேசினார். அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு 1 சதவிகிதம் கூட இடம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுக்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+