இது திராவிட நாடா? ஏன் தமிழா இப்படி இருக்கீங்க? இயக்குனர் பேரரசுக்கு வந்ததே கோபம்! சுளீர் கேள்வி
சென்னை: தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றபோது வரும் கோபம், திராவிடநாடு எனும்போதும் தமிழனை திராவிடன் எனும்போதும் ஏன் வரவில்லை தமிழா? என திரைப்பட இயக்குனரும், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணை தலைவருமான பேரரசு ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக சார்பில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பாராட்டினார். இந்த நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி பேசினார். அப்போது தமிழ்நாடு பற்றி பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டை தமிழகம் என கூறுவதே சரியாக இருக்கும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு
இதுபற்றி ஆளுநர் ஆர்என் ரவி பேசுகையில், ‛‛பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. அனைவருக்கும் பாராட்டுகள் விடுதலை போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்'' என பேசினார்.

சர்ச்சையான ஆளுநர் பேச்சு
தமிழ்நாட்டை தமிழகம் என சொல்வதே சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்என் ரவி பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் பாஜகவினர் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. பல்வேறு தலைவர்கள் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநருக்கு ஆதரவாக வந்த பேரரசு
இந்நிலையில் தான் திரைப்பட இயக்குனரும், பாஜகவின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக செயல்பட்டு வருபவருமான பேரரசு ட்விட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் தமிழ்நாட்டை திராவிட நாடு, தமிழனை, திராவிடன் என அழைக்கும்போது ஏன் எதிர்ப்பது இல்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இதன்மூலம் ஆளுநர் ஆர்என் ரவிக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் கூறியது என்ன?
இதுபற்றிபேரரசு, தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றபோது வருகின்ற கோபம், தமிழ்நாட்டை திராவிட நாடு என்றபோது, தமிழனை திரவிடன் என்றபோது, நம் தமிழக முதல்வர் தமிழ்நாடு மாடல் அல்லது தமிழ் மாடல் என்று செல்லாமல் திரவிட மாடல் என்று சென்னபோது ஏன் தமிழா இந்த கோபம் வரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications