சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உறவை முறிச்சிக்கிறேன்! அண்ணாமலை தந்த 2 ஆப்ஷன்கள்.. உதறிய திருச்சி சூர்யா.. யார் இந்த கேசவ விநாயகம்?

Google Oneindia Tamil News

சென்னை: திருச்சி சூர்யாவை பாஜகவில் இருந்து இடைக்கால பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கி இருந்த நிலையில் தற்போது மொத்தமாக கட்சியில் இருந்து ட்விட் செய்துள்ளார். அண்ணாமலை இவருக்கு 2 முக்கியமான ஆப்ஷன்களை கொடுத்திருந்த நிலையில்தான் சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளார்,

பாஜகவில் உறுப்பினராக இருந்த திருச்சி சூர்யாவிற்கு - டெய்சி சரணுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன் போனில் கடுமையான சண்டை நடந்தது . சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு சில பாஜக தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது. நீ எப்படி பதவி வாங்குன என்று தெரியும் என்று கூறி, அதோடு பாஜக தலைவர் ஒருவரின் பெயரும் அடிபட்டு உள்ளது. அதேபோல் நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை தீர்த்து காட்டுவேன் என்று பேசி உள்ளார்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! காயத்ரி ரகுராமுக்கு கல்தா! இவருக்கா அந்த பதவி? அதிரடி காட்டிய அண்ணாமலை!ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! காயத்ரி ரகுராமுக்கு கல்தா! இவருக்கா அந்த பதவி? அதிரடி காட்டிய அண்ணாமலை!

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதுபற்றி விசாரிக்க அண்ணாமலை கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த விசாரணை தொடங்கிய 24 மணி நேரத்தில் இவர்கள் இருவரும் சமாதானம் ஆவதாக அறிவித்தனர். நாங்கள் எங்களுக்குள் பேசி சமாதானம் செய்துவிட்டோம். எங்களுக்கு இடையில் நடந்த மோதலை பெரிதுபடுத்த வேண்டாம், என்று டெய்சி சரண் இந்த விவகாரம் பற்றி சமாதானம் சொல்லி இருக்கிறார். இந்த விவகாரத்தில் காயத்ரி ரகுராம் குரல் கொடுத்த நிலையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டெய்சி சரணுக்கு துணையாக நின்று அவர் போஸ்ட் செய்து வந்தார். காயத்ரி ஆடியோவை லீக் செய்யவில்லை என்றாலும் பாஜகவில் இருந்து அந்த ஆடியோவை பகிர்ந்த முதல் நிர்வாகி அவர்தான். அதற்கு முன் ஊடகங்களும், திமுக நிர்வாகிகளும் மட்டுமே பகிர்ந்து வந்தனர். காயத்ரி ரகுராம் இந்த ஆடியோவை பகிர்ந்த பின்புதான் அந்த விவகாரம் மிகவும் பெரிதானது. இதையடுத்தே காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

திருச்சி சூர்யாவை சஸ்பெண்ட் செய்த போது அண்ணாமலை அவருக்கு 2 ஆப்ஷன்களை மறைமுகமாக கொடுத்தார். அதன்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவர் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும், என்று திருச்சி சூர்யாவை நீக்கிய அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அதோடு சூர்யா வகித்த ஓபிசி பிரிவிற்கும் புதிய நிர்வாகியை அண்ணாமலை போடவில்லை. அதாவது.. கட்சி உறுப்பினர்களுடன் சூர்யா தொடர்பில் இருக்கலாம் என்பது முதல் ஆப்ஷன். கட்சிக்கு திரும்பி வரும் போது மீண்டும் பதவி கிடைக்கும் என்பது இரண்டாவது ஆப்ஷன்.

காயத்ரி

காயத்ரி

ஆனால் காயத்ரிக்கு இது போன்ற சலுகைகள் கொடுக்கப்படவில்லை. காயத்ரியை சஸ்பெண்ட் செய்யும் போது , 6 மாத காலத்திற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை உத்தரவிட்டார். அதோடு அவரின் அயலக தமிழர், வெளிமாநில தமிழர் நலப்பிரிவு தலைவர் பொறுப்பிற்கு தீனாவை அண்ணாமலை நியமனம் செய்தார். சூர்யாவிற்கு கொடுக்கப்பட்ட 2 சலுகைகளும் இங்கே காயத்திரிக்கு கொடுக்கப்படவில்லை. இதுவே கடுமையாக விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இந்த சலுகைகளை எல்லாம் உத்தரவிட்டு திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளார்.

திருச்சி சூர்யா

திருச்சி சூர்யா

திருச்சி சூர்யா செய்துள்ள ட்விட்டில், அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி, என்று குறிப்பிட்டு உள்ளார்.

யார் கேசவ விநாயகம்?

யார் கேசவ விநாயகம்?

முன்னதாக டெய்சியிடம் பேசும் ஆடியோவில் திருச்சி சூர்யா கேசவ விநாயகத்தை விமர்சனம் செய்து இருந்தார். இன்றும் அவர் தனது போஸ்டில் கேசவ விநாயகம் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்.தமிழ்நாட்டில் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் கேசவ விநாயகம். பாஜகவில் மாநில மற்றும் தேசிய அளவில் அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். அப்படித்தான் தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் ஆக கேசவ விநாயகம் இருக்கிறார். ஏற்கனவே கே டி ராகவன் வீடியோ வெளியான சமயத்தில் கேசவ விநாயகம் பெயர் அடிபட்டது. தற்போது மீண்டும் சூர்யா விவகாரத்தில் கேசவ விநாயகம் பெயர் அடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Why does Trichy Surya quit BJP party even after Annamalai support? Who is Keshava Vinayakam?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X