"லிஸ்ட் ரெடி".. ஸ்டாலின் அனுப்பிய லெட்டர்! சேகர் பாபுவுடன் சேர்ந்து போன உதயநிதி.. அந்த 10 பாயிண்ட்ஸ்
சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதியை நேரில் சந்தித்தார்.
தமிழ்நாடு முழுக்க அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து அதை களைய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதாவது உங்கள் தொகுதியில் உள்ள 10 முக்கிய பிரச்சனைகளை பட்டியலிடுங்கள். அதை உங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள். அதில் உடனே அரசு சார்பாக தீர்வு காணப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வானதி சீனிவாசனை
இது தொடர்பாக அதிமுக, பாஜக, திமுக என்று அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். கோவையில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, ஆட்சியரிடம் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், 07.05.2022 அன்று தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட மேலும் ஐந்து புதிய திட்டங்களைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் அறிவித்ததைத் தங்களுக்கு அன்புடன் நினைவூட்ட விரும்புகிறேன்.

திட்டங்கள்
இதுபோன்ற அத்தியாவசியத் திட்டங்களை அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.

முக்கியம்
அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள்ளது. குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம், மக்களின் இன்றியமையாத தேவையின் அடிப்படையிலான அத்தகைய திட்டங்களுக்கான பணிகளை நிறைவேற்றிடத் திட்ட அறிக்கை தயாரித்து அரசு அளவில் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற வேண்டிய அவசியமும் இருக்கலாம்.

லிஸ்ட் ரெடி
இதுபோன்ற அத்தியாவசியத் திட்டங்களை அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது., என்று முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

உதயநிதி
திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் பலர் இதை தொடர்ந்து கடிதம் எழுதி இருந்தனர். இந்த நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதியை நேரில் சந்தித்தார். 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதயநிதி ஸ்டாலின் ஆட்சியரிடம் வழங்கினார். இதில் முக்கியமான சில கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன. சென்னை மாநில கல்லூரியில் கலையரங்கள் புதிதாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். சிந்தாதரிப்பேட்டையில் தனியார் இடத்தில் மீன் அங்காடி செயல்பட்டு வருகிறது.

என்ன கோரிக்கை
இதை அரசு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதை நவீனமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சில இடங்களில் கழிவுநீர் செல்ல குழாய்கள் இல்லை. இந்த குழாய்களை தொகுதி முழுவதும் வைக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் பணிகளை தொகுதி முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு உதயநிதி ஸ்டாலினுடன் உடன் இருந்தார்.
-
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications