எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணி காட்டும் ‘பாயிண்ட்’ புள்ளி.. திருமாறன் நீக்கத்திற்குப் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதற்கு என்ன காரணம் என்பதற்கான தகவல்கள் சிறகடித்து வருகின்றன.

ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து, அவருக்காக சட்டப்பூர்வ முயற்சிகளில் உறுதுணையாக இருந்து வருகிறார் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன்.

கடந்த ஒரு மாத காலமாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என ஓபிஎஸ் தரப்பின் பலகட்ட முயற்சிகளுக்கும் உதவி வருகிறார் திருமாறன்.

ஓபிஎஸ்- ஈபிஎஸ் பிணக்கு

ஓபிஎஸ்- ஈபிஎஸ் பிணக்கு

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் பிணக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமியால் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

மாறி மாறி நீக்கம்

மாறி மாறி நீக்கம்

அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பதிலடியாக ஓபிஎஸ், எடப்பாடி ஆதரவாளர்கள் 22 பேரை நீக்கினார். மேலும் 44 பேரை நேற்று கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ஓபிஎஸ். இதையடுத்து ஈபிஎஸ், மேலும் 21 ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். இதையடுத்து இருவரை கட்சியில் இருந்து நீக்கினார் ஈபிஎஸ். மேலும் ஒருவரை தற்போது நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. போட்டி போட்டு இருதரப்பும் கட்சியை விட்டு நீக்கியதில் இதுவரை 66 பேர் ஓபிஎஸ்ஸால் நீக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ் தரப்பு 46 பேரை இதுவரை நீக்கியுள்ளது.

 வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி நீக்கம்

வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி நீக்கம்

அதிமுக வழக்கறிஞர் திருமாறன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸின் வழக்கறிஞர்

ஓபிஎஸ்ஸின் வழக்கறிஞர்

எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கும் முக்கியமான வழக்கறிஞர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் எழுந்தது முதல் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சட்டத் தூண்களில் ஒருவராக விளங்கி வருகிறார் திருமாறன். கட்சி விதிகள் தொடர்பாகவும், அதில் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் ஓபிஎஸ்ஸின் பதவியை எடப்பாடி பழனிசாமி தரப்பு தன்னிச்சையாக நீக்க முடியாது என தொடர்ந்து பாயிண்டுகளை முன்வைத்து வருபவர் திருமாறன்.

 சட்ட நுணுக்கங்கள்

சட்ட நுணுக்கங்கள்

எடப்பாடி பழனிசாமி பக்கம் எத்தனை மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருந்தாலும், ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் மட்டுமே ஒற்றைத் தலைமைக்கு முடிவு கிடைக்கும், அந்தப் பதவி கொண்டு வரப்பட்டபோது வேறு யாரும் இந்தப் பதவிகளை நீக்க முடியாது என ஏற்படுத்தப்பட்ட திருத்தம் காரணமாக ஈபிஎஸ்ஸால் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது என ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறி எடப்பாடி பழனிசாமியை தண்ணீர் குடிக்க வைத்ததற்குப் பின்னணியில் சட்ட நுணுக்கங்களை எடுத்துரைத்து வருபவர் வழக்கறிஞர் திருமாறன் தான்.

 வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

ஒற்றைத் தலைமை வேண்டும் என முடிவானால் அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரின் ஒப்புதலோடு அவர்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும். அவர்கள் தங்கள் பதவி காலத்தை குறைத்துக்கொள்ள வேண்டும், அதனை தேர்தல் ஆணையத்துக்கு முறைபடி அறிவிக்க வேண்டும், புதிய பதவிக்கு தேர்தல் அறிவிக்க வேண்டும். அடிப்படை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களித்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால தலைவர்களாக இருவரும் இருக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினருக்கு நம்பிக்கையூட்டி வரும் திருமாறன், ஓபிஎஸ்ஸின் முக்கிய பிடிப்பாக இருக்கிறார்.

எடப்பாடிக்கு லாக்

எடப்பாடிக்கு லாக்

அதிமுகவில் உள்ள ஒவ்வொரு பிரிவுகள் பற்றியும், உட்கட்சி விதிகள் பற்றியும் ஆழ்ந்த அறிவுள்ள திருமாறன் தரப்பினர், மூத்த வழக்கறிஞர்கள் பலரோடும் ஆலோசித்து முன்னெடுத்த வாதங்களின் காரணமாகவே, உயர் நீதிமன்ற விசாரணையின்போது ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை என எடப்பாடி தரப்பு வழக்கறிஞரே சொல்ல நேர்ந்தது. இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது.

அவரை தூக்க திட்டம்

அவரை தூக்க திட்டம்

திருமாறனை தன் பக்கம் இழுத்தால் ஓபிஎஸ் தரப்பு ஆட்டம்கண்டு விடும் எனக் கணக்குப் போட்டு முயற்சித்துப் பார்த்தது எடப்பாடி தரப்பு. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான மூத்த வழக்கறிஞர்கள் இதுகுறித்து திருமாறனிடம் பேசியுள்ளனர். கட்சி நிலைமை உங்களுக்கே தெரியும், எல்லாம் நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது, அங்கு இருப்பதில் பிரயோஜனம் இல்லை எனப் பேசிப் பார்த்துள்ளனர். ஆனால், அவர்களின் பேச்சுக்கு திருமாறன் பிடிகொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

காரணம்

காரணம்

இதையடுத்து, ஓ.பி.எஸ் தரப்பிற்கு சட்டப்பூர்வ உதவிகளைச் செய்து வரும் திருமாறனை நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அவரிடம் கடுமையாக வலியுறுத்தியதன் பின்பே திருமாறன் அவரது வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பு முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+