"சீக்ரெட்" ரிப்போர்ட்.. திமுக "உறவு"வுக்கு குறி.. அமித்ஷா ஒருபக்கம், ஆளுநர் மறுபக்கம்.. டெல்லி பரபர
எடப்பாடி பழனிசாமியின் புது வியூகம் திமுகவுக்கு சறுக்கலை தருமா என தெரியவில்லை
சென்னை: திமுகவின் ஊழல் குறித்து அதிமுக ஒருபக்கம், பாஜக ஒரு பக்கம் புகார்களை வாசித்து கொண்டிருக்க, அது தொடர்பாக மேலிடம் என்ன முடிவெடுக்க போகிறது? அதை திமுக எப்படி சமாளிக்க போகிறது என்ற டென்ஷன் களத்தில் எகிறி உள்ளது.
இப்போதைக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தாலும், கட்சியை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு என்று எடப்பாடி பழனிசாமி நம்புவதாக தெரிகிறது..
அதற்காக, கட்சியை பலப்படுத்துவது, சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பது, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவது என வழக்கமான ரூட்கள் ஒருபக்கம் இருந்தாலும், திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி அதன்மூலம் தங்களை நிலைநாட்டிக் கொள்ளவே ஆர்வம் அதிகமாக காட்டி வருகிறாராம்.

அமித்ஷா
அதனால்தான், சமீபத்தில் சென்னை வரப்போகும் பிரதமர் மோடியிடம், திமுக மீதான ஊழல் புகார்களை, குறைகளை லிஸ்ட் போட்டு தரப்போவதாக கடந்த மாதமே செய்திகள் கசிந்தன.. அதற்கேற்றபடி, அதிமுக தலைவர்களை பிரதமர் சந்தித்து பேசியபோது, சொன்னபடியே புகார் லிஸ்ட்டையும் தந்தார்கள் என்றும், பிரதமர் மோடி, அதை பெற்றுக் கொண்டுவிட்டு எந்த பதிலும் சொல்லவில்லை என்றும் கூறப்பட்டது.. அதற்கு பிறகுதான் பாஜக அண்ணாமலை, திமுகவின் ஊழல் அமைச்சர்கள் குறித்து அம்பலப்படுத்துவேன் என்று செய்தியாளர்களிடம் அடுத்தடுத்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்த துவங்கினார்.

3 பக்க அறிக்கை
இதற்கிடையில், எடப்பாடி & கோ பிரதமரிடம் தயாரித்து வழங்கிய அந்த ரகசிய புகார் அறிக்கையில், யார் யார் இடம்பெற்றுள்ளனர், என்ன மாதிரியான விஷயங்கள் இடம்பெற்றிருந்தன என்ற தகவல்கள் முழுமையாக வெளிவராவிட்டாலும், ஓரளவு கசிய துவங்கியது.. அது 3 பக்க அறிக்கை என்கிறார்கள்.. பிரதமரிடம் வழங்கப்பட்ட அந்த புகார் அறிக்கை, அமித்ஷா டேபிளில் இருக்கிறதாம்.. அது தொடர்பாக உளவுத்துறையும் களமிறங்கி உள்ளதாக கூறுகிறார்கள்..

டாப் - 5 யார்?
டாப் 5 ஊழல் மாஜிக்கள் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளதாம்.. அத்துடன், எந்த பொறுப்பிலும் இல்லாத, ஆனால், திமுக குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமான நபரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாம். தேர்தல் சமயங்களில் இவரை ஆப் செய்யாததால்தான், திமுக தலைதூக்கிவிட்டது, இந்த முறை இவருக்கு செக் வைத்தால், எம்பி தேர்தலில் திமுக கூட்டணி பலவீனமடையும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாம்.. மேலும், ஆளுநரிடமும் திமுக அரசு பற்றி விரைவில் புகார் புத்தகம் தரப்போவதாக பாஜக சொல்லி உள்ள நிலையில், அது குறித்து டெல்லி மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று தெரியவில்லை..!

எடப்பாடி & கோ
இதுஒருபுறம் இருக்க, எடப்பாடி & கோ தந்த அந்த ரகசிய அறிக்கையில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள திமுக தரப்பு கண்டுகொள்ளவே இல்லையாம்.. காரணம், மடியில் கனமில்லை என்ற நம்பிக்கைதான் காரணம்.. இந்த முறை ஆட்சி அமைந்ததில் இருந்து, அனைத்துக்கும் முறையாகவே கணக்கு உள்ளதால், ஊழலிலும் யாருமே ஈடுபடாமல் ஸ்டிரிக்ட்டாகவே அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாலும், அவ்வப்போது கூட்டங்களை நடத்தி கடிவாளங்கள் போடப்பட்டு வருவதாலும், பாஜக, அதிமுக சூழ்ச்சிகள் ஒருபோதும் பலிக்காது என்று தெம்பாக சொல்கிறது திமுக தரப்பு..

அறிவாலயம்
எனினும், ஏதாவது ஒன்றில் இவர்கள் சிக்க மாட்டார்களா என்பதே இப்போதைய தமிழக பாஜகவின் ஒரே குறிக்கோளாக இருந்து வருவதாகவும், அதனால்தான் திமுகவுக்கு கலக்கத்தை தந்து லைம்லைட்டிலேயே வைத்திருக்க நினைப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.. இருந்தாலும், எடப்பாடி தரப்பு அளவுக்கு அதிகமாக புகார் சொன்ன அந்த மேலிட உறவு யார்? எதற்காக அவரை மட்டுமே குறிவைத்து, ரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டது? என்பதே தற்போது வட்டமடித்து வரும் கேள்வி..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications