கையில் வாழைப்பழத்தோடு.. செஸ் போட்டிக்கு வரும் பிரக்ஞானந்தா! குழம்பிய சக போட்டியாளர்கள்! என்ன காரணம்?
சென்னை: இந்திய செஸ் பி அணி வீரர் பிரக்ஞானந்தா ஒவ்வொரு செஸ் போட்டிக்கும் கையில் வாழைப்பழத்தோடு வருவது பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது,
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் சென்னையில் நடந்து வருகிறது. இந்தியாவை சேர்ந்த 6 அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகின்றன. இந்த தொடரில் நேற்று இந்திய ஏ அணி டிரா செய்தது. அதேசமயம் எதிர்பார்க்கப்பட்டபடியே இந்திய ஆண்கள் பி அணி வெற்றிபெற்றது.
இந்திய ஆண்கள் பி அணி இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை வரிசையாக 4 போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்றது.
இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்திய ஆடவர் பி அணிதான் டாப்பில் இருக்கிறது. மகளிர் பி அணியும் சிறப்பாக ஆடி வருகிறது. ஆனால் மகளிர் சி அணி ஒரு தோல்வியுடன் திணறி வருகிறது.

பிரக்ஞானந்தா
இந்த தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா மிக முக்கியமான போட்டியாளராக இருக்கிறார். இந்திய பி டீமில் இவர் ஆடி வருகிறார். இந்திய ஏ அணியை பார்த்து எங்களுக்கு பயம் இல்லை. ஆனால் பி அணியை பார்த்துதான் எங்களுக்கு பயம். இந்திய பி அணியில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்று பிரக்ஞானந்தா அணியை பார்த்து நார்வே ஜாம்பவான் மேக்னஸ் கார்ல்சனே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் நேற்று பிரக்ஞானந்தா போட்டியை கார்ல்சன் நேரில் வந்து அருகில் நின்று பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.

கார்ல்சன்
இதற்கு முன்பே வேறு சில போட்டிகளில் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோல்வி அடைய செய்து இருக்கிறார் என்பதால் அவரின் ஆட்டத்தை கார்ல்சன் நேரில் வந்து பார்த்தார். இப்படிபட்ட பிரக்ஞானந்தாதான் இந்த தொடரில் அதிகம் கவனம் ஈர்க்க கூடிய வீரர். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருக்கிறார். ஏற்கனவே இவர் நெற்றியில் இருக்கும் விபூதி காரணமாக இவர் வெளிநாட்டு வீரர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இது மட்டுமின்றி வேறு ஒரு காரணத்திற்காகவும் இவர் அங்கு உள்ள வீரர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.

நம்பிக்கை
அதன்படி இவர் எல்லா போட்டிக்கும் வரும் போதும் கையில் வாழைப்பழம் ஒன்றை கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தினமும் ஒவ்வொரு போட்டியிலும் இவர் வாழைப்பழம் கொண்டு வருகிறார். இவர் ஏன் இப்படி கையில் வாழைப்பழம் கொண்டு வருகிறார் என்று பலரும் இவரை வியந்து பார்த்து வருகிறார். சாப்பிடுவதற்காக, பசிக்காக இவர் வாழைப்பழம் கொண்டு வருகிறாரா அல்லது இதற்கு வேறு காரணம் இருக்கிறதா என்று பலரும் குழம்பிப் உள்ளனர்.
Recommended Video

வாழைப்பழம் ஏன்?
அதன்படி அங்கு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஸ்னேக்ஸ் வைக்கப்பட்டு இருக்கும். போட்டிக்கு நடுவே பசித்தால் தண்ணீர் பாட்டில் எடுக்கவும் சிறிய அளவிலான சிற்றுண்டி சாப்பிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அப்படி இருக்கும் போது பிரக்ஞானந்தா இப்படி வாழைப்பழம் கொண்டு வர காரணம் இருக்கிறது. அவருக்கு மிகவும் அதிகமாக கூச்ச சுபாவம். போட்டிக்கு இடையிலும் இடைவெளியிலும் சிற்றுண்டியை எழுந்து எடுக்க வெட்கப்பட்டு கொண்டு இவர் வாழைப்பழத்தோடு வருவதாக கூறப்படுகிறது. இவரின் கூச்ச சுபாவம்தான் இந்த வாழை பழத்திற்கு பின்னிருக்கும் சீக்ரெட் என்கிறார்கள்!
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!












Click it and Unblock the Notifications