2-3 வருஷத்தில்.. சென்னையில் இங்கே முதலீடு பண்ணுங்க.. கோடீஸ்வரர் ஆகலாம்.. அதிர்ஷ்டம் அடிக்கும்!
சென்னை: சென்னையில் ரியல் எஸ்டேட் துறை மீண்டும் உச்சம் அடைந்து உள்ளது. கடந்த 10 வருடங்களாக சுணக்கமாக இருந்த ரியல் எஸ்டேட் துறை மீண்டும் வளர்ச்சி அடைய தொடங்கி உள்ளது. அந்த வகையில் சென்னையில் முக்கியமான ஒரு பகுதி அதிக கவனம் பெற்று வருகிறது... அந்த பகுதி ஈசிஆர்!
சென்னையில் ஈசிஆர் பகுதியில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. 5 வருடங்களுக்கு முன் இங்கே சதுர அடிக்கு 1500- 2500 ரூபாய் வரை சராசரியாக இருந்தது. தற்போது இதே பகுதிகளில் சதுர அடி 5500- 6000 ரூபாய் வரை செல்கிறது. இங்கே இப்போது முதலீடு செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் பெரிய அளவில் ரிட்டர்ன்ஸ் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

இப்போது இங்கே நிலம் அல்லது வீடுகளை வாங்கிப்போட்டால்.. அடுத்த 2-3 வருடங்களில் அதன் மதிப்பு இரண்டு மடங்கு ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இங்கே முதலீடு செய்தால் மிகப்பெரிய அளவில் ரிட்டர்ன் கிடைக்கும். குறைவான முதலீடு கூட இங்கே ராஜயோகமாக மாற வாய்ப்புகள் உள்ளன. இதற்கு பின் 4 முக்கியமான காரணங்கள் உள்ளன.
காரணம் 1: சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.
இந்த சாலைக்கு CPRR என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த CPRR முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்றால் கற்பனை செய்து பாருங்கள். இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
காரணம் 2: தினமும் பல லட்சம் வாகனங்கள் செல்லும் ஈசிஆர் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் 90 சதவிகிதம் முடிந்துள்ளது. கடைசி 10 சதவிகிதம் அடுத்த மாதம் முதல் நடக்க உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.24,435 கோடியில் மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து, மாமல்லபுரம் - மரக்காணம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்போது மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விரிவாக்கத் திட்டத்திற்காக தயாரிக்க ஒரு நிறுவனத்தை வாடகைக்கு எடுக்க NHAI டெண்டர் எடுத்துள்ளது. மொத்தம் 675 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலைகள் மேம்படுத்தப்பட்டு 4 வழி சாலையாக மாற்றப்பட உள்ளது.
மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரை, நான்கு வழிப் பாதை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில், தேவையான இடங்களில், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தடையின்றி செல்ல கிரேடு பிரிப்பான்கள், மேம்பாலங்கள் மற்றும் வாகன சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகிறது. நகரங்களுக்கு இடையூறு விளைவிப்பதற்குப் பதிலாக வெளியே செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பெரிய அளவில் வளைவுகள் இல்லாமல் நேராக செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான இயக்கத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஆய்வின் அடிப்படையில் இந்த சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த சாலை பணிகள் நடக்க உள்ளன. 8 பிரிவுகள் என்றால்.. தனி தனியாக இந்த 675 கிலோ மீட்டரை பிரித்து.. அதன்பின் அதில் சாலை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
காரணம் 3: சென்னையிலுள்ள ECR இல் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தை அமைப்பதற்கான டெக்னோ எகனாமிக் சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கான ஏலங்களை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை மாநில நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
இங்கே இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. முதல் பாலம் ஒரு வழி பாதையாக இருக்கும். அதற்கு மேலே உள்ள பாலம் எதிர் திசையில் ஒரு வழி பாதையாக செயல்படும்.
இங்கே நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும்,'' என, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
அதாவது சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்படும்.
காரணம் 4: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) நெரிசல் மிகுந்த இடத்தின் அமைந்துள்ள மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்கு பதிலாக ECR இல் புதிய பேருந்து முனையத்தை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது.
தென் தமிழ்நாட்டிற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காகவே கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் புறநகர் பேருந்து நிலையங்கள் உள்ளன. ஆனாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் இடிக்கப்பட உள்ளதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் செயல்பட உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஈசிஆரில் இன்னொரு பேருந்து நிலையத்தை பிரம்மாண்டமாக கட்ட முடிவு செய்துள்ளனர். மாமல்லபுரம் நகருக்கு வெளியே ECR இல் அமைய உள்ள இந்த புதிய பேருந்து முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டரை CMDA வெளியிட்டு, அடுத்த மாதம் நவம்பர் மாதத்திற்குள் ஒப்பந்ததாரரை இறுதி செய்யும் என்று அறிவித்துள்ளது.
சிஎம்டிஏ அமைச்சர் பி.கே சேகர் பாபு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டினருக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக இருந்தாலும், மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதை மாற்ற முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் புதிய பேருந்து நிலையத்தின் இடத்தைப் பார்வையிட்ட சேகர்பாபு, பயணிகளுக்கு எளிமையான பயண அனுபவத்தை அளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்தை கட்டுவோம் என்று கூறியுள்ளார்.
அதன்படி 6.79 ஏக்கரில் 27,500 சதுர மீட்டர் பரப்பளவில் மொத்தம் ₹67 கோடி செலவில் புதிய பஸ் டெர்மினஸ் திட்டம் தொடங்கப்படும் என சிஎம்டிஏ தரப்பு தெரிவித்துள்ளது. இரண்டு மாடி கொண்ட பேருந்து முனையத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் பார்க்கிங், தரைத்தள கடைகள், டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் காத்திருப்பு அறைகள் மற்றும் முதல் தளத்தில் அலுவலக அறைகள், தங்குமிடங்கள், பணியாளர்கள் ஓய்வு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications