ஸ்டாலினுக்கு வந்த போன்.. எல்லாத்துக்கும் காரணம் அவர்தானா.. என்ன நடக்கிறது கோட்டையில்.. இமேஜ் எகிறுமா

எஸ்பி வேலுமணி ஏன் கைதாகவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலுமணியை தொட்டதன் மூலம் ஒரு மிகப்பெரிய ரிஸ்க்கை ஸ்டாலின் எடுத்துள்ளார்.. இது எந்த அளவுக்கு திமுகவுக்கு சாதகத்தை ஏற்படுத்தும்? எந்த அளவுக்கு அதிமுகவின் இமேஜை டேமேஜ் செய்யும்? வேலுமணி விவகாரத்தில் ஐயம் திரிபுர ஆதாரங்களை திமுக நிரூபிக்குமா? என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ஒரு வார இதழில் மாஜி அமைச்சர் வேலுமணி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், யாரும் என்னை டச் பண்ண முடியாது என்ற ரீதியிலும் கருத்து கூறியிருந்தார்..

ஆனாலும் நடக்க போகும் ரெய்டு சமாச்சாரத்தை அவர் முன்னமேயே யூகித்திருந்தார்.. தன்னை மட்டுமல்லாமல் தன்னோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கும் நெருக்கடி வரும் என்றும் எதிர்பார்த்தே இருந்தார். இது இயல்பான எதிர்பார்ப்புதான்.. இதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. ஆட்சி மாறினால் வரும் காட்சிகள்தான் இவை.

 பிரச்சாரம்

பிரச்சாரம்

ஆனால், தேர்தல் பிரச்சார சமயத்திலேயே ஒருவேளை ஆட்சி மாற்றம் வந்தால், அதற்காக முன்கூட்டியே என்ன செய்ய வேண்டும், முக்கிய டாக்குமென்ட்டுகளை எங்கு பத்திரப்படுத்த வேண்டும், முக்கியமாக ஃபைல்கள், ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்ய நேர்ந்தால், அவைகளை என்ன செய்ய வேண்டும் என்பன அனைத்து விவரங்களிலும் வேலுமணி கவனத்தை செலுத்தி இருந்தாராம்..

 15 லட்சம் ரூபாய்

15 லட்சம் ரூபாய்

அதனால்தான், கிட்டத்தட்ட 60 இடங்களில் ரெய்டு நடத்தியும் வெறும் 15 லட்சம் ரூபாய் ரொக்கம் மட்டுமே சிக்கியுள்ளது. இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது.. ரெய்டின்போது கிடைத்த சொத்து ஆவணங்களுக்கும் வேலுமணி தரப்பு சரியான ஆவணங்களை கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனாலும், ஏற்கனவே கையில் வைத்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் வேலுமணி கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது... அது நடக்கவில்லை..

 விசாரணை

விசாரணை

அதற்கு என்ன காரணம் என்ற தகவலும் ஓரளவு கசிந்துள்ளது.. விசாரணை முடிந்ததுமே எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தான் வேலுமணி சென்றுள்ளார்.. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரிடமும் ஆலோசனை நடந்துள்ளது.. அப்போதுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் போன் செய்து பேசினாராம்..

வேலுமணி

வேலுமணி

வேலுமணி மீதான கைது நடவடிக்கையை கைவிடும்படி கோரிக்கை வைக்கவும்தான், விஜிலென்ஸ் டிஎஸ்பி கந்தசாமி கோட்டைக்கு விரைந்து, முதல்வருடன் ஆலோசனையும் நடத்தினாராம்.. அதாவது, வேலுமணியின் கைது நடவடிக்கையை இல்லாமல் செய்ததே ஓபிஎஸ்தான் என்கிறார்கள்... இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஓபிஎஸ் பேசியதால், வேலுமணி கைது இல்லாமல் போனதா? அல்லது சரியான கணக்கு விவரங்களை சமர்ப்பித்ததால் கைது இல்லாமல் போனதா? என்பது தெரியவில்லை.

 திமுக

திமுக

ஆனால், திமுக மிகப் பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது.. வேலுமணி மீது கை வைத்துள்ளது கிட்டத்தட்ட கட்சி தலைமையின் மீது கை வைத்ததுபோலதான்..புகார்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்தாலும் இந்தப் புகார்களை கோர்ட்டில் திமுக அரசு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது... ஒருவேளை அதில் சொதப்பல் நடந்து விட்டால், திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட வழி வகுத்து விடும்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

காரணம், கொங்கு மண்டலத்தை திமுக புறக்கணிப்பதாக ஒரு புகார் ஏற்கனவே அதிமுகவால் பரப்பப்பட்டு வருகிறது... கொரோனாவாவில் கொங்கு மண்டலத்தை திமுக புறக்கணிப்பதாக கிளப்பி விட்டும் வருகின்றனர். ஆனால் அது பொய் என்பதை திமுக நிரூபித்து தீவிரமாக களப் பணிகளை முடுக்கி விட்டது...!

கொங்கு

கொங்கு

இப்போது வேலுமணி விவகாரத்திலும் எந்தவித சந்தேகங்களுக்கும் கொஞ்சம்கூட இடம் தராமல் ஆதாரங்களை நிரூபித்தால்தான் திமுகவுக்கு நல்லது... இல்லாவிட்டால் இவ்வளவு முயற்சி எடுத்தும்கூட பலனில்லாமல் போவதுடன், திமுகவுக்கு நீண்ட காலத்திற்கு பாதிப்பு தொடர வாய்ப்புண்டு... வேலுமணியை ஸ்டாலின் காப்பாற்றினாரா இல்லையா என்பதை விட, கொங்குவில் திமுகவின் கவுரவம் சிதைந்துவிடக்கூடாது என்ற நெருக்கடிதான் அதிகமாகி உள்ளது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+