Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? ஆளுநர் தரப்பில் முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் விலக்கு மசோதா உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுனர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதற்கான காரணம் குறித்து ஆளுனர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக திமுக கூறி வருகிறது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என அக்கட்சி தனது தேர்தல் பரப்புரையில் கூறியது.

அதேபோல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுனர் ஆர்என் ரவிக்கு அனுப்பியது. ஆனால் ஆளுனர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.

நீட் விலக்கு மசோதா

நீட் விலக்கு மசோதா

இதற்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுனர் ஆர்என் ரவிக்கு அனுப்பப்பட்டது. இது தற்போது கிடப்பில் உள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலினும், ஆளுனர் ஆர்என் ரவியை சமீபத்தில் சந்தித்து வலியுறுத்தினார். இருப்பினும் ஆளுனர் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை.

திமுக எதிர்ப்பு

திமுக எதிர்ப்பு

இந்நிலையில் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியிருந்தது. நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் ஆளுனர் காலதாமதம் செய்வது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் 2 முறை வெளிநடப்பு செய்தனர்.

 எத்தனை மசோதாக்கள்

எத்தனை மசோதாக்கள்

இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்பட வேறுசில மசோதாக்கள் ஆளுனர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு காத்துள்ளது. இதில் கூட்டுறவு சங்கங்களுக்கான சட்ட திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதாக்கள், ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை, கூட்டுறவுச் சங்கங்களின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்றாண்டுகளாகக் குறைப்பதற்கான கூட்டுறவுச் சங்கச் சட்டம் உள்ளிட்ட மசோதாக்கள் ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இதில் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆளுனர் தரப்பு விளக்கம்

ஆளுனர் தரப்பு விளக்கம்

ஆனால் கவர்னர் ஆர்என் ரவி தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வருகின்றார். இதனால் தமிழக அரசு, ஆளுனர் மாளிகை மீது அதிருப்தியில் உள்ளது. இதன் வெளிப்பாடு தான் மக்களவையில் ஆளுனர் ஆர்என் ரவியை திரும்ப பெறக்கோரியதாகும். இந்நிலையில் தான் நீட் விலக்கு உள்பட 3 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காததற்கான காரணம் குறித்து ஆளுனர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

 கூட்டுறவு சங்க திருத்த மசோதா

கூட்டுறவு சங்க திருத்த மசோதா

இதுபற்றி பிபிசி செய்தி நிறுவனத்துக்கு ஆளுனர் தரப்பு கூறியுள்ளது. அதில் கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை பொறுத்தவரை விதிகளை மீறி செயல்படுவதாக கூறப்படும் சங்கங்களின் செயல்பாட்டை இடைநிறுத்தி வைக்கவும், விசாரணையின்றி கலைக்கவும் உத்தரவிட அரசு ஊழியர்களான கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கும் ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் மாநில அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

 பல்கலைக்கழக திருத்த மசோதா

பல்கலைக்கழக திருத்த மசோதா

அடுத்ததாக, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவில் பல்கலைக்கழக சிண்டிகேட் நிர்வாக குழுவில் நியமிக்கப்படுபவருக்கு கல்வித்தகுதி, அனுபவம் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த அம்சத்துக்கு ஆளுநர் உடன்படவில்லை. ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

 நீட் மசோதாவுக்கு விளக்கம்

நீட் மசோதாவுக்கு விளக்கம்

இதேபோல் நீட் விலக்கு மசோதா குறித்தும் ஆளுனர் தரப்பு கூறுகையில், பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும் கூட அதன் மீது ஆளுனருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவை அனுப்பிவைக்க வேண்டும் என்ற அழுத்தம் என்பது ஆளுனருக்கு கிடையாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 புரிய வைத்திருப்பார்...

புரிய வைத்திருப்பார்...

மேலும் தமிழக முதல்வர், ஆளுனரை சந்தித்தபோது மசோதா தொடர்பான நிலை, சட்டபூர்வ சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின்படி அரசு செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். தனது நிலைப்பாட்டை முதலமைச்சருக்கு, தலைமை செயலாளர் புரிய வைத்திருப்பார் என்று நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

 அரசியலுக்கு நுழைய விரும்பவில்லை

அரசியலுக்கு நுழைய விரும்பவில்லை

ஆளுநனருக்கு எதிராக மக்களவையில் திமுகவினர் எழுப்பி வரும் குரல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‛‛தனது பொறுப்பை தான் கவனித்து வருவதாகவும், திமுகவினரின் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+