இருக்குற ஆதாரை ஓரமா வச்சுட்டு.. இந்த "டைப்" ஆதார் கார்டை உடனே வாங்குங்க.. அப்பறம் அசந்து போயிடுவீங்க
சென்னை: ஆதார் கார்டுகளில் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட பிவிசி ஆதார் கார்டுகளை நீங்கள் எளிதாக ஆன்லைன் மூலமே வாங்க முடியும். இந்த கார்டுகளில் பல அசத்தலான அம்சங்கள் உள்ளன.
ஆதார் கார்டுகளிலேயே 4 வகைகள் உள்ளன. ஆதார் லெட்டர் வகை: இது ஒரு லெட்டர் அடிப்படையிலான லேமினேட் செய்யப்பட்ட ஆதார் கடிதம் ஆகும். இதில் ஆதார் அட்டை கொடுக்கப்பட்ட வெளியிடப்பட்ட தேதி மற்றும் QR குறியீடு இருக்கும். புதிய பதிவு அல்லது பயோமெட்ரிக் மாற்றம், மொத்தமாக ஆதார் புதுப்பிப்பு செய்யப்பட்டால், புதிய ஆதார் அட்டை சாதாரண தபால் மூலம் மக்களுக்கு அனுப்பப்படும். ஆதார் கடிதத்தை அது வரை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே சமயம் இந்த ஆதார் கடிதம் இருந்தால் மட்டுமே தபாலில் வரும் கார்டை வாங்க முடியும்.

eAadhaar: eAadhaar என்பது ஆதாரின் மின்னணு வடிவமாகும். இது UIDAI ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டது. இதில் பாதுகாப்பான QR குறியீடு இடம்பெற்று இருக்கும். அதேபோல் ஆன்லைனில் திறக்க கடவுச்சொல் கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் eAadhaar/masked eadhaar ஐ எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு ஓடிபி வரும். eAadhaar/masked eAadhaar பொதுவாக ஆதார் கார்டில் உள்ள கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காட்டும்.
ஆதார் பிவிசி கார்டு: ஆதார் பிவிசி கார்டு என்பது UIDAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதாரின் சமீபத்திய வடிவமாகும். எடுத்துச் செல்ல எளிதானது மற்றும் வலிமையானது. PVC-அடிப்படையிலான ஆதார் அட்டையானது டிஜிட்டல் முறை மூலம் கையொப்பமிடப்பட்ட ஆதார் ஆகும். இது டேம்பர் ப்ரூஃப் கொண்டது. அதேபோல் தண்ணீரில் விழுந்தாலும் வீணாகாது.
முக்கிய அடையாளம்: ஆதார் கார்ட் தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இது போன்ற சமயத்தில் பிவிசி ஆதார் வைத்து இருப்பது இன்னும் சிறப்பானது ஆகும்.

இந்த பின்வரும் கார்டில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன:
1. டேம்பர் ப்ரூஃப் QR குறியீடு
2. ஹாலோகிராம்
3. மைக்ரோ எழுத்து
4. கோஷ்ட் படம்
5. வெளியீட்டு தேதி & அச்சு தேதி
6. பாதுகாப்பிற்கான Guilloche பேட்டர்ன்
7. ஆதார் லோகோ ஆகியவை உள்ளன.
எப்படி பெறுவது?: சாதாரண கார்டை விட இந்த கார்ட் வலிமையாக இருக்கும். அதேபோல் நீண்ட காலம் உழைக்கும். பாதுகாப்பானதும் கூட.
uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையை பெற முடியும். இதற்கு கட்டணம் ரூ. 50 செலுத்தி மேற்கண்ட பக்கத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். அல்லது மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தி பிவி கார்டை பெற முடியும்.
இந்திய அஞ்சல் சேவையின் ஸ்பீட் போஸ்ட் சேவை மூலம் ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவரியில் வசிப்பவருக்கு டெலிவரி செய்யப்படும். 7 நாட்களில் இந்த புதிய பிவிசி ஆதாரை நீங்கள் உங்கள் வீட்டு விலாசத்தில் பெற முடியும்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications