சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தரமான ‘மூவ்’.. எடப்பாடிக்கு நெருக்கடி..“அவர் சொல்லமாட்டாரே” உற்று கவனிக்கும் டெல்லி! என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை : பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்கிற நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்திருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அத்தகைய முடிவை எடுப்பதற்குத் தயாராக இல்லை. இந்த அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் பாஜக தலைவர்கள் ஈபிஎஸ் தரப்பை ஆதரிக்க மாட்டார்கள் எனக் கூறியிருக்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது ஒருபுறம் இருக்க, அதிமுகவில் இரு அணிகளின் பலத்தை நிரூபிப்பதற்கான களமாகவும் மாறியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தமாகா விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் அணியே களமிறங்குகிறது. அதற்குப் போட்டியாக, ஓபிஎஸ் தங்கள் அணியும் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸின் இந்த முடிவு பரபரப்பைக் கிளப்பி இருக்கும் சூழலில், அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக யாரை ஆதரிக்கப் போகிறது என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது

பாஜக தலைமை கைக்கு போன 'பந்து’.. யாருக்கு ஆதரவு? அண்ணாமலை முடிவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் எதிர்காலம்? ஆஹா! பாஜக தலைமை கைக்கு போன 'பந்து’.. யாருக்கு ஆதரவு? அண்ணாமலை முடிவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் எதிர்காலம்? ஆஹா!

சரியான ஆக்‌ஷன்

சரியான ஆக்‌ஷன்

இதுகுறித்து செய்தி தொலைக்காட்சியில் பேசியுள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஓபிஎஸ் சரியான முடிவை எடுத்துள்ளார். இரட்டை இலை சின்னம் முடக்கத்திற்கு நாங்கள் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டோம். இதுதொடர்பாக எடப்பாடி தரப்பு எங்களிடம் பேசினால் நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் களத்திலிருந்து நாங்கள் ஓடி ஒளியவில்லை, போட்டியிட தயாராக இருக்கிறோம் எனவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டுபட்டு எப்படி ஜெயிக்க முடியும்

இரண்டுபட்டு எப்படி ஜெயிக்க முடியும்

மேலும், அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஒன்றாக இணைந்து தேர்தல்களைச் சந்தித்தபோதே தொடர் தோல்விகளைப் பெற்றனர். கடைசியாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட 25%க்கும் குறைவாகத்தான் வாக்குகளை பெற்றனர். இப்படியான சூழலில் ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சராக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவரை ஒதுக்கிவிட்டு எப்படி ஆளுங்கட்சியான திமுகவை தோற்கடிக்க முடியும் என்பதுதான் ஓபிஎஸ் தரப்பு வாதம். இதற்காகவே ஈபிஎஸ் எவ்வளவு முரண்டு பிடித்து வந்தாலும், ஒன்றிணைந்து செயல்பட தயார் என கூறி வந்தார் ஓபிஎஸ்.

 எடப்பாடிக்கு நெருக்கடி

எடப்பாடிக்கு நெருக்கடி

ஆனால் தற்போது தனித்து நின்று மீண்டும் அதிமுகவை தோல்விக்கு கொண்டு செல்வது எடப்பாடி பழனிசாமி தான் என்ற கருத்தை முன்வைத்து தங்கள் பலத்தை காட்ட ஓபிஎஸ் தரப்பு தேர்தலில் போட்டியிடத் தயார் என அறிவித்திருக்கிறது. மேலும், பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஆதரிக்கத் தயார் என்று ஓபிஎஸ் கூறியிருப்பதன் மூலம் கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து திமுக எதிர்ப்பு வாக்குகள் பிளவுபடாமல் பார்த்துக் கொள்வோம் எனச் சொன்னதன் மூலம் நீங்களும் பாஜகவிற்கு ஆதரவளியுங்கள் என ஈபிஎஸ் தரப்பிற்கு ஓபிஎஸ் அரசியல் நெருக்கடி கொடுத்துள்ளார்.

பாஜகவுக்கு இணக்கம்

பாஜகவுக்கு இணக்கம்

ஈரோட்டில் யாருக்கு செல்வாக்கு என்பது நிரூபிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. பிரதமர் மோடி ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளையும் ஒரே அளவில் தான் மதிக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், பாஜகவை மதித்து, அக்கட்சியின் ஆதரவைக் கோருகிறார் ஓபிஎஸ். தேவைப்பட்டால் பாஜகவை ஆதரிப்போம், பாஜக தாங்கள் போட்டியிட விரும்பினால் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்கிற நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்திருக்கிறார்.

எடப்பாடி சொல்ல மாட்டார்

எடப்பாடி சொல்ல மாட்டார்

இன்னொரு அணியான எடப்பாடி அணி என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதை பாஜக டெல்லி தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். எனவே, இந்த இடைத்தேர்தல் போட்டி என்பது என்பது ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பில் யாருக்கு பலம் அதிகம் எனப் பார்ப்பதற்காக பாஜக நடுநிலை வகிக்கும் என்றே பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் போல, ஈபிஎஸ்ஸும், பாஜக போட்டியிட்டால் ஆதரிக்கத் தயார் என்று சொன்னால், பாஜக அதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு போட்டியிடவும் செய்யலாம்.

ஈக்குவல் டிஸ்டன்ஸ்

ஈக்குவல் டிஸ்டன்ஸ்


ஆனால், எடப்பாடி பழனிசாமி, அத்தகைய முடிவை எடுப்பதற்குத் தயாராக இல்லை. ஓபிஎஸ்ஸை, எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கியதே பாஜகவை கழற்றி விடுவதற்கான சதிதான். ஓபிஎஸ்ஸை வைத்துக்கொண்டு பாஜகவை கூட்டணியில் இருந்து உதறித்தள்ள முடியாது என்று தான் ஓபிஎஸ்ஸை வெளியேற்றினார். இந்த உண்மையை பாஜக புரிந்துகொண்டுள்ளதால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் சமமான அணுகுமுறையையே பாஜக கடைபிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

English summary
O Panneer selvam has taken a stand that if BJP wants to contest, we will not contest. But Edappadi Palaniswami is not ready to take such a decision. So the BJP leaders who are closely watching this politics will not support the EPS anymore. : says Political critic Ravindran Duraisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X