சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போதி தர்மர் மீண்டும் வருவாரா.. உலகையே உலுக்கி வரும் கொரோனா.. கை கொடுக்க தவறிய பாரம்பரிய மருத்துவம்

கை கொடுக்க தவறிவிட்டதாக தெரிகிறது பாரம்பரிய மருத்துவம்

Google Oneindia Tamil News

சென்னை: பெளத்தமும் சித்தமும் இணைந்த சுத்த சாமியார் .. யார் தெரியுமா.. நம்ம போதி தர்மர்தான். பல்லவ சாம்ராஜ்யத்தில் உதித்து தென் பொதிகை மலைச் சாரலில் அகஸ்தியரிடம் பல அரிச்சுவடிகளை பயின்று, சீனம் சென்று பல வித்தைகளையும், அற்புதங்களையும் நிகழ்த்தி அசத்தி மறைந்த மாபெரும் துறவிதான் போதி தருமர்.

Recommended Video

    கொரோனா Update: இதுவரை 3 பேர் உயிரிழப்பு

    போதி தருமர் வரலாறு நிறையப் பேருக்கு சரிவரத் தெரியாது. காரணம், அவரது வரலாறை சரிவர யாருமே பதிவு செய்யவில்லை. பல தகவல்கள், வரலாறுகள் மறைக்கப்பட்டு விட்டன.

    அகஸ்தியரின் நேரடி சீடர்தான் போதி தருமர் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பான உண்மையான பதிவுகள் எங்குமே இல்லை. ஆனால் அகஸ்தியரிடம்தான் போதி தருமர் சித்த வைத்தியத்தையும், தற்காப்புக் கலையையும் பயின்றதாக சொல்கிறார்கள்.

    மருத்துவம்

    மருத்துவம்

    தான் கற்ற வித்தைகளையும், மருத்துவத்தையும் மிகப் பெரிய அளவில் மக்களுக்காக பயன்படுத்திய பெருமைக்குரியவர் போதி தருமர். நமது நாட்டில் இவர் பயன்பட்டதை விட சீனத்தில்தான் மிகப் பெரிய அளவில் பங்களித்துள்ளார். இவர் சீனத்திற்குப் போன காலத்தில் அங்கு பெரு வியாதி ஒன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட கொரோனா போல.

    கொரோனா

    கொரோனா

    அன்று கொரோனா போல ஆட்டிப்படைத்து பல உயிர்களைக் குடித்துக் கொண்டிருந்த அந்த நோய்க்கு போதி தருமர் முற்றுப் புள்ளி வைத்ததாக சொல்கிறார்கள். அதுவரை துயருக்குள்ளாகி கொத்துக் கொத்தாக மடிந்து விழுந்து கொண்டிருந்த சீனர்களுக்கு போதி தருமரின் சித்த வைத்தியம் உயிர்களை காப்பாற்றி கை கொடுத்தது. அவரது மருத்துவ முறையால் சீனர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

    மருந்துகள்

    மருந்துகள்

    மருந்து கொடுத்து உயிர்களைக் காத்த போதிதருமர் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தபோது அவரை போகக் கூடாது என்று அன்புக் கட்டளையிட்டு தடுத்து நிறுத்தினர் சீனர்கள். இதனால் அங்கேயே தங்கினார் போதி தருமர். தான் கற்ற மருத்துவத்தை அவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். அத்தோடு நில்லாமல் அதுவரை தற்காப்புக் கலை குறித்து அறியாமல் இருந்த சீனர்களுக்கும் தனது தற்காப்புக் கலையை கற்றுக் கொடுத்து அவர்களை வீரர்களாக்கினார்.

    போதி தருமர்

    போதி தருமர்

    இப்போது நாம் போதி தருமரை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. அவரை விட.. அவர் கற்றுக் கொடுத்த மருத்துவத்தை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. போதி தருமரைப் போல எத்தனையோ முனிவர்கள், சித்தர்கள் இதுபோன்ற கொடும் நோய்களுக்கெல்லாம் நிச்சயம் மருந்து கண்டுபிடித்திருப்பார்கள். அவர்கள் காலத்தில் வராத கொள்ளை நோயா.. இப்போது வந்து விடப் போகிறது. ஆனால் அதையெல்லாம் அவர்கள் தங்களது மூலிகை மருத்துவத்தால் நிச்சயம் குணப்படுத்தியிருக்கவே செய்வார்கள்.

    எனினும் இன்று அவையெல்லாம் எங்கே போயின.. அந்த மருந்துகள் என்னவாயின.. காலப் போக்கில் அவை காலத்துடன் கரைந்து போய் விட்டனவா.. நாம் ஏன் இதுபோன்ற மருந்துகளை தொலைத்து விட்டு இப்படி அருமையான உயிர்களை எமனுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவும் சரி, சீனமும் சரி உலகுக்கு பல விஷயங்களில் முன்னோடிகள் ஆவர். கலாச்சாரம் ம ட்டுமல்லாமல் கலை மட்டுமல்லாமல் மருத்துவத்திலும் நாம் எத்தனையோ சாதித்துள்ளோம்.

    சித்த மருத்துவம்

    சித்த மருத்துவம்

    ஆனால் இன்று நாம் அனைவருமே அந்த பாரம்பரியத்தை தொலைத்து விட்டு நிர்க்கதியாக நிற்கிறோம். நிச்சயம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தி குணப்படுத்தி விடக் கூடியதாகவே இருக்கக் கூடும். ஆனால் அதற்கான சரியான மருந்து நம் கையில் நிச்சயம் இல்லை. ஆனால் அது நிச்சயம் சித்த மருத்துவத்தில் இருக்க வேண்டும். ஆனால் அந்த மருந்தை நாம் தொலைத்து விட்டோம்.. கண்ணுக்கு தெரியாமல் எங்கேயோ அது போய் விட்டது. இதுதான் வருத்தமாக இருக்கிறது.

    சீனத்தை அன்று காத்த போதிதருமரைப் போல இன்றும் இந்த கொரோனாவின் பிடியிலிருந்து உலகைக் காக்க யாராவது வர மாட்டார்களா என்று ஒவ்வொருவரின் மனசும் ஏங்குகிறது என்பது உண்மைதான்.

    English summary
    coronavirus: Will bodhi-dharma's traditional medicine save us
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X