சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினகரன் செம அப்செட்.. இதுக்கு தனியாவே நின்னுருக்கலாம்.. "அண்ணியார்" ஓவர் பிடிவாதமாமே.. சலசல கூட்டணி

தேமுதிக மீது டிடிவி தினகரன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இதுக்குதான் தேமுதிகவை யாருமே கூட்டணி சேர்க்கவில்லையா? என்ற முணுமுணுப்புகள் எழ ஆரம்பித்துள்ளதாம்.. இதற்கு காரணம் பிரேமலதாவின் பிடிவாதம் என்றும் புகைய ஆரம்பித்துள்ளது.

கிட்டத்தட்ட 6 மாத காலம் கூட்டணிக்காக காத்து கிடந்தது தேமுதிக.. ஒருத்தரும் கண்டுகொள்ளவே இல்லை.. விஜயகாந்த்தின் கட்சியாக பார்க்கப்பட்டது மறைந்து, பிரேமலதாவின் கட்சியாக அது பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் பரவலாக இருக்கும் வாக்கு வங்கி என்னவோ விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்கு சொந்தமானது மட்டுமே.

திடுக் திருப்பங்கள், அடுத்தடுத்து புகார்கள்.. பாஜக வைக்கும் கோரிக்கை.. மராட்டிய துணை முதல்வர் பதிலடிதிடுக் திருப்பங்கள், அடுத்தடுத்து புகார்கள்.. பாஜக வைக்கும் கோரிக்கை.. மராட்டிய துணை முதல்வர் பதிலடி

யாருமே தயங்கிய நிலையில், பல கட்சிகள் கதவை அடைத்துவிட்ட நிலையில், அமமுக மட்டும் கூட்டணி கதவை திறந்து வைத்தது.. இதற்கு, தினகரனின் கோவில்பட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற சுயநல காரணமும் உண்டு.

 விருதாச்சலம்

விருதாச்சலம்

அதற்காகவே, தேமுதிகவுக்கு 60 சீட்டை தந்து வியக்க வைத்தது... மேலும் அவர்கள் விரும்பி கேட்ட விருத்தாச்சலம் தொகுதியையும் ஒதுக்கியது. 15 வருஷத்துக்கு முன்பு, விஜயகாந்த்துக்கு வெற்றியை வாரி தந்ததை நம்பி இப்போது களம் இறங்கி உள்ளார் பிரேமலதா. இதற்காக அங்கேயே முகாமிட்டுள்ளார்.. தீவிரமாக களப்பணியும் ஆற்றி வருகிறார்... விருதாச்சலத்தை தேமுதிகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை முழக்கமிட்டும் வருகிறார் பிரேமலதா.

 தொகுதிகள்

தொகுதிகள்

ஆனால், சில புகைச்சல்கள் தேமுதிக தரப்பில் இருந்தே கசிந்து வருகிறதாம். இதற்கு 2, 3 காரணங்களும் சொல்லப்படுகின்றன.. முதலாவதாக, விருதாச்சலம் தொகுதியில் கட்சி நிர்வாகிகள் பிரேமலதாவுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தெரிகிறது.. இதனால், தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் சார்ந்த மாவட்ட செயலாளர்களைத தவிர மற்ற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் எல்லாருமே விருத்தாசலம் தொகுதிக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 விருச்சாலம்

விருச்சாலம்

இதனால், தலைமை உத்தரவை ஏற்று, அந்த நிர்வாகிகளும் கிளம்பி விருதாச்சலம் வந்துள்ளனர்... ஆனால், அவர்களை வரவழைத்துவிட்டு, எந்தவித வசதியும் செய்து தரவில்லையாம்.. தங்குவதற்கும் இடமில்லாமல், பணவசதியும் செய்து தராமல் தேமுதிக தலைமை இருந்துள்ளதாக தெரிகிறது.. இதனால் காத்திருந்து காத்திருந்து நொந்து போன தேமுதிகவினர், ஆளாளுக்கு கிளம்பி சொந்த ஊருக்கு போய்விட்டார்களாம்.

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

அடுத்த காரணம், தங்களை நம்பி 60 சீட் தந்த அமமுக வெற்றிக்காகவும், தேமுதிகவினர் சரியாக ஒத்துழைப்பு தருவதில்லையாம்.. கூட்டணி கட்சி போட்டியிடும் பல தொகுதிகளுக்கு தேமுதிக நிர்வாகிகள் சரியாக செல்வதில்லையாம்.. இதற்கு காரணமும் பிரேமலதா தான் என்கிறார்கள்.. அவர் மறைமுக உத்தரவு போடவும்தான், இவ்வாறு தேமுதிக நிர்வாகிகள் நடந்து கொள்வதாகவும் சொல்கிறார்கள். இந்த விஷயம் தினகரனுக்கு தெரியவர, அவர் அப்செட்டில் உள்ளாராம்.

 கூட்டணி வெற்றி

கூட்டணி வெற்றி

"தினகரனை பொறுத்தவரை, தேமுதிக துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்ததை அனைவருமே பார்த்தனர்.. சுதீஷூக்கு உடம்பு சரியில்லாமல் போன நிலையில்கூட, தினகரன் தேமுதிகவுக்காக பிரச்சாரம் செய்தார்.. கூட்டணிக்காக அவர் இறங்கி வந்துள்ளதுடன், கூட்டணி வெற்றிக்காகவும் உழைக்கிறார் என்பதில் மாற்று கருத்தில்லை, ஆனால், திமுகவை தோற்கடிக்க வேண்டும், அதிமுகவுக்கு செக் வைக்க வேண்டும், கோவில்பட்டியை வென்று காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருப்பவருக்கு ஒத்துழைப்பு என்னவோ குறைவாகதான் உள்ளது" என்கிறார்கள் தென்மண்டல நிர்வாகிகள்.

 வதந்தியா

வதந்தியா

எனினும், இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா? அல்லது காற்றில் வாக்கில் பரப்பிவிடப்படும் வதந்தியா என்று தெரியவில்லை.. ஒருவேளை வதந்தியாகவே இருந்தாலும் சரி, இதனை களைய தேமுதிக முன்வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.. எத்னையோ அவமானங்கள், எத்தனையோ இழுத்தடிப்புகள், புறக்கணிப்புகளை கடந்துதான், 60 சீட் தேமுதிகவுக்கு அமமுகவில் கிடைத்துள்ளது.

 சலசலப்பு

சலசலப்பு

இதை தக்க வைப்பது கட்சியின் அங்கீகாரத்துக்கு அடிப்படையான தேவையானதாகவும் இருக்கிறது.. எனவே, "தன்னிச்சையான செயல்பாடுகளும், பிடிவாதமும்" கூட்டணிக்கு தற்சமயம் பொருந்தாத ஒன்று.. தேமுதிக தலைமை எல்லா பக்கமும் இப்படி இறுக்கி பிடித்தாலே, அல்லது சொந்த கட்சியினரையே முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டாலோ, இது அக்கட்சிக்கு கடைசி தேர்தலாககூட இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்... பார்ப்போம்..!

English summary
Will DMDK Premalatha Win in Viruthachalam Consititution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X