சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: மே 22-ல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. பங்கேற்க போகும் 13 பேர்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா ஊரடங்கை மே 24ம் தேதிக்கு பிறகு நீட்டிப்பது குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர் குழுவுடன் மே 22-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவல் உச்சம் பெற்று வருவதால் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவுக்கு தினசரி ஏற்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் கடந்த மே 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவித்தார். இந்த ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயங்கவில்லை. அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

கடும் நிபந்தனை

கடும் நிபந்தனை

மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதற்கும் இ பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு, முதியோர் பராமரிப்பு, மருத்துவ அவசரம் உள்ளிட்ட நான்கு காரணங்களுக்காக இ பதிவு அனுமதி அளிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு காரணம்

முழு ஊரடங்கு காரணம்

தற்போது போலீசாரின் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. சென்னையில் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் கொரோனா பரவல் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மே 22ல் ஆலோசனை

மே 22ல் ஆலோசனை

இந்நிலையில் கொரோனா ஊரடங்கை மே 24ம் தேதிக்கு பிறகு நீட்டிப்பது குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர் குழுவுடன் மே 22-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் காலை 11.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்த ஆலோசனையில், எழிலன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஜிகே மணி, ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்பட அனைத்து கட்சிகளின் 13 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர்.

எப்போது வரை நீட்டிப்பு

எப்போது வரை நீட்டிப்பு

கொரோனா பரவல், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து கடசி எம்.எல்.ஏ.க்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்று, பின்னர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம் பெற்று வருவதால் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Chief Minister MK Stalin's consultation with All party MLAs on May 22 over Will full lockdown be extended in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X