வங்கியில் தங்க நகை பறிபோகுமா.. ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு நடுவில் உள்ள இரண்டு வழிகள்
சென்னை: தங்கம் வாங்கி வைத்திருந்த அத்தனை பேருக்கும் ஜாக்பாட் போல் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துவிட்டது. அதனால் மகிழ்ச்சி அடைந்தாலும், தங்க நகைகளை அவசரத்திற்கு அடகு வைத்தால் நகையையே இழக்க வேண்டியது வருமோ என்று தவிப்பில் இருக்கிறார்கள் மக்கள். ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவிற்கு நடுவில் உள்ள இரண்டு வழிகளை இப்போது பார்ப்போம்.
ரிசர்வ் வங்கியின் உத்தரவு காரணமாக தங்க நகையை அடகு வைத்த பலர் மொத்தமாக அசல் மட்டும் வட்டியை கட்டி நகையை திருப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படி கட்ட முடியாதவர்கள் நகையை மறந்துவிட வேண்டும் என்கிற நிலை உருவாகி உள்ளது. தங்க நகை இருக்கிறது என்று நினைத்து வங்கியில் போய் அடகு வைத்துவிட வேண்டாம். ஏனெனில் ரூல்ஸ் மொத்தமாக மாறிவிட்டது.

தங்க நகையை அடகு வைப்பவர்கள் தனிநபர் கடன் பாணியில் மாதம் மாதம் இஎம்ஐயில் வட்டி மற்றும் அசல் தொகையை கட்ட முடியும். இரண்டாவதாக தங்க நகைக்கு மாதம் மாதம் வட்டி மட்டும் கட்டி வந்து இறுதியில் அசலை கட்டி நகையை திருப்ப முடியும். 3வதாக புல்லட் ரீபேமெண்ட் என்று அழைக்கப்படும் திட்டம் ஆகும். இதன்படி அசல் மற்றும் வட்டியை ஆண்டு இறுதியில் மொத்தமாக கட்ட வேண்டும்.. 4வது முறை என்றால், ஓவர் டிராப்ட் என்று அழைக்கப்படும் முறையாகும்.
இதில் நகை அடகு மதிப்பு 3 லட்சம் ஆக இருக்கும். அப்படி கடன்வாங்கினாலும் அதில் குறைந்த பணத்தை மட்டும் வாங்கி கொண்டு மீதியை வாங்காமல் அப்படியே வங்கி கணக்கில் வைத்திருப்பார்கள்.. இப்படி நான்கு விதமாக நகைக்கடனை வாங்கி வருகிறார்கள் மக்கள். இதில் பலரும் புல்லட் ரீ பேமெண்ட் முறையில் தான் நகைக்கு வட்டி கட்டுவார்கள். ஒருவேளை நகைக்கான அசல் வட்டியை கட்ட முடியாவிட்டாலும், வட்டியை மட்டும் கட்டிவிட்டு மறு அடமானம் வைத்து அடுத்த ஆண்டில் அசலை வட்டியை கட்டி நகையை மீட்பார்கள். இப்போது அந்த வழியை நிரந்தரமாக ரிசர்வ் வங்கி அடைத்துவிட்டது.
தற்போதைய நிலையில் நண்பர்கள் நகையை அடகு வைக்க போகிறார்கள் என்றால், ஒரு நாள் முன்பு நீங்கள் அவரிடம் நகையை வாங்கி அடகு வைத்து பணத்தை எடுத்து அந்த பணத்தில் உங்கள் நகையை திருப்பலாம். மீண்டும் மறு நாள் அடகு வைத்து அந்த பணத்தை உங்கள் நண்பருக்கு கொடுத்துவிடலாம். இப்படி உறவினர்கள், நண்பர்களுக்குள் கைமாற்றாக கடன் வாங்கித்தான் மாற்ற வேண்டும்.
இல்லை என்றால் கந்துவட்டிக்கு விடுகிறார்கள் அல்லவா.. அவர்களிடம் தான் பணத்தை வாங்கி நகையை மீட்டு மறுநாள் மீண்டும் அடகு வைக்க வேண்டும். அதற்கு இரண்டு நாள் வேலைக்கு போக முடியாத நிலை ஏற்படுவதுடன், கந்து வட்டிக்கு வாங்குவோரிடம் சில ஆயிரங்களை நீங்கள் தர வேண்டியது வரலாம். எனவே அப்படி ஒரு வேளை நிலை வந்தால், அடுத்த ஆண்டில் இருந்து மாதம் மாதம் வட்டி, அசலை கட்டிட பழகுங்கள். இதுதான் சிறந்த வழி..
அதேநேரம் சில தனியார் வங்கிகள், வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு மீண்டும் மறு அடகு வைக்க இன்னமும் அனுமதிக்கின்றன. எனவே அப்படி எந்த வங்கிகள் அனுமதிக்கின்றன என்பதை உங்கள் பகுதியில் அறிந்து அங்கு அடகு வைக்கலாம். ஆனால் பொதுத்துறை வங்கியை விட அங்கு சற்று வட்டி அதிகமாக இருக்கும்.
பொதுத்துறை வங்கிகளில் 72 பைசா அல்லது 84 பைசா என்றால் அங்கு 95 பைசா என்கிற அளவில் இருக்கும். விசாரித்து சரி என்றால் மட்டும் நகைகளை அப்படி அடகு வைக்கலாம். அதேநேரம் நகைகளின் மதிப்பு அதிகமாக கடன் வாங்குவதோ அல்லது நகைகளுக்கு மாதம் மாதம் அசல் வட்டி கட்ட முடியாது என்றாலோ அது எப்படி இருந்தாலும் சிக்கலையே ஏற்படுத்தும்.. எனவே அசல் வட்டியை மாதம் மாதம் கட்டும் பழக்கத்திற்கு மாறுவதே நமக்கு நல்லது.
-
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications