சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹாட்ரிக் வெற்றி பெற்று... கோவில்பட்டி தனது கோட்டை என்பதை நிரூபிப்பாரா அமைச்சர் கடம்பூர் ராஜூ!

Google Oneindia Tamil News

சென்னை: செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக களம் இறங்குகிறார்.

கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடம்பூர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர்தான் கடம்பூர் ராஜூ. ஆசிரியர் பட்டய பயிற்சி படித்து ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

அதிமுகவில் தொடக்க காலத்திலிருந்து உறுப்பினராக உள்ள கடம்பூர் ராஜூ சிதம்பராபுரம் கிளைக் கழகச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

3-வது முறையாக களம் காணும் கடம்பூர் ராஜூ

3-வது முறையாக களம் காணும் கடம்பூர் ராஜூ

அதிமுக 171 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. மேலும், பாமக போட்டியிடும் 23 தொகுதிகளும், பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக களம் இறங்குகிறார்.

கோவில்பட்டி இவர் கோட்டை

கோவில்பட்டி இவர் கோட்டை

கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற கடம்பூர் ராஜூ ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து களம் காண்கிறார். அவர் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்பது மே 3-ம் தேதி தெரிந்து விடும். வாருங்களேன் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் குடும்ப பின்னணி உள்ளிட்ட விவரங்களை பார்த்து விடுவோம்.

ஜெயலலிதா பேரவை செயலாளர்

ஜெயலலிதா பேரவை செயலாளர்

கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடம்பூர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர்தான் கடம்பூர் ராஜூ. ஆசிரியர் பட்டய பயிற்சி படித்து ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். அதிமுகவில் தொடக்க காலத்திலிருந்து உறுப்பினராக உள்ள கடம்பூர் ராஜூ சிதம்பராபுரம் கிளைக் கழகச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

2 பிள்ளைகள் உள்ளனர்

2 பிள்ளைகள் உள்ளனர்

தற்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வருகிறார். 2011-ல் கோவில்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடிய அவர், 2016-ம் ஆண்டிலும் கோவில்பட்டி தனது கோட்டை என்பதை நிரூபித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது மனைவி பெயர் இந்திரா காந்தி ஆவார். இவர்களுக்கு மகன் அருண்குமார், மகள் காயத்ரி ஆகியோர் உள்ளனர்.

English summary
Information and Publicity Minister Kadampur Raju is entering the fray for the third time in a row in the Kovilpatti constituency of Thoothukudi district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X