அடடே.. கிளைமேட் மாறுதே.. திமுகவிற்கு டெல்லி அனுப்பிய "முதல்" கிரீன்.. ஒரே குஷியாம்! அப்போ அதுதானே?
சென்னை: குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு எடுத்த முக்கியமான முடிவு ஒன்று ஆளும் திமுக தரப்பை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து திமுகவிற்கு கிடைத்த முக்கியமான கிரீன் சிக்னலாக இது பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வென்றார். தமிழ்நாட்டில் இவரை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.
இவருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி நிறுத்திய யஷ்வந்த் சின்காவை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.
ஆனால் திமுக திரௌபதி முர்முவை ஆதரிக்கவில்லை.

சந்தேகம்
இந்த நிலையில்தான் திரௌபதி முர்மு ஆளும் திமுக அரசு நிறைவேற்றும் மசோதாக்களில் கையெழுத்து போடுவாரா என்ற கேள்வி எழுந்தது. அதாவது தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பி வைப்பார். இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாக்க வேண்டும். தற்போது ஆளுநர் ஆர். என் ரவியிடம் 10 மசோதாக்கள் வரை நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்கள் இன்னும் டெல்லிக்கு செல்லவில்லை.

டெல்லி
ஆனால் நீட் மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் சமீபத்தில் டெல்லிக்கு அனுப்பப்பட்டன. கடந்த 3 மாதங்களில் ஒரு சில மசோதாக்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டன. இதில் நீட் மசோதா தவிர மற்ற மசோதாக்கள் பெரும்பாலும் மத்திய அரசை சீண்டாத மசோதாக்கள். இந்த மசோதாக்கள் பெரிய சர்ச்சைகளை கொண்டு இருக்காத மசோதா. இந்த நிலையில்தான் குடியரசுத் தலைவர் முர்மு முக்கியமான மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

என்ன மசோதா
அதன்படி பதிவுத்துறை சட்ட திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி சட்டமாக்கி உள்ளார். இந்த மசோதா மூலம் மாட்ட சார் பதிவாளர்கள் பதிவுத்துறை தொடர்பான மோதல்களை விசாரணை செய்வார்கள். அதாவது பதிவுத்துறையில் நில தகராறு ஏற்பட்டால் கோர்ட்டுக்கு செல்லாமல் பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்களே இந்த மோதல்களை சரி செய்ய முடியும். விசாரிக்க முடியும். இதற்குத்தான் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

முர்மு
முர்மு எடுத்துள்ள இந்த முடிவால் மற்ற மசோதாக்களுக்கும் அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று ஆளும் திமுக அரசு தரப்பு நம்ப தொடங்கி உள்ளது. டெல்லியில் இருந்து கிடைத்த முதல் கிரீன் சிக்னலாக இது பார்க்கப்படுகிறது. இந்த வருட தொடக்கத்தில் நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. முதலில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் தமிழ்நாடு அரசு இதே மசோதாவை தாக்கல் செய்தது. நீட் விலக்கு மசோதாவை இரண்டாவது முறையாக கேபினெட்டின் ஒப்புதலைப் பெற்று பேரவையிலும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடியரசு தலைவர்
இப்போது இது குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்டத்தை அங்கீகரிக்கவில்லை. தற்போது முர்மு இதை அங்கீகரிப்பார் என்ற சின்ன நம்பிக்கை இதன் மூலம் எழுந்துள்ளது. முர்மு குடியரசுத் தலைவர் ஆன நிலையில் திமுக எம்பிக்கள் அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் திட்டத்தில் உள்ளனர். அதோடு நீட் பற்றியும் அவரிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications