"விக்கெட்" விழுந்தாச்சு..? திமுகவை சீண்டும் "உதயசூரியன் எம்பி" பாரிவேந்தர்.. பாஜக குஷிதான்
திமுக கூட்டணியில் உள்ள பாரிவேந்தர், பாஜகவுடன் இணைய போகிறாரா
சென்னை: திமுக கூட்டணியில் இருக்கும், எம்பி ஒருவர் திமுகவையே டார்கெட் செய்து விமர்சித்துள்ளது மிகுந்த பரபரப்பை கிளப்பி உள்ளது.. என்னவா இருக்கும்?
இந்திய ஜனநாயக கட்சி என்ற அரசியல் இயக்கத்தின் தலைவர் பாரிவேந்தர். தான் சார்ந்த உடையார் சமுதாயத்தினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அந்த முயற்சி பெருமளவு அவருக்கு கொடுக்கவில்லை..
பிறகு, பாஜக, திமுக என்ற மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் களத்தில் போட்டியிட்டார்.. 2019-ல் பெரம்பலூர் எம்பி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று, இப்போது எம்பியாக இருக்கிறார்.

ஆக்டிவ்வாக இல்லை
எம்பியான பிறகு, ஆக்டிவ்வாக இவர் இல்லை என்றும், உடல்நலம் சார்ந்த விஷயங்கள் காரணமாக தொகுதி பக்கம் அவ்வளவாக போக முடியவில்லை என்றும் ஒருசில வருடங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இதனிடையே திருச்சியில் ஒருமுறை செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர் மனம் நொந்துபோய் பேசியிருந்தார்.. "அரசியலுக்கு ஏன் வந்தேன் என்று நினைத்து வருத்தப்படுகிறேன்.. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிப்பது நிற்கவில்லை..
திமுகவுடன் தனக்கு நட்பும் இல்லை விரோதமும் இல்லை.. இனி வரும் எந்த தேர்தலிலும் இந்திய ஜனநாயக கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது.. இவர்களோடு கூட்டணி வைத்தால் அவர்கள் கோபப்படுகிறார்கள், அவர்களோடு கூட்டணி வைத்தால் இவர்கள் கோபப்படுகிறார்கள்" என்று கூறியிருந்தார்.. பாரிவேந்தர் இப்படி ஒரு பேட்டியை பார்க்கும்போதே, அவர் யாரை சொல்கிறார் குழப்பம் ஏற்பட்டது.. காரணம், பாஜக, திமுக இரண்டு கட்சியுடன்தான் கூட்டணியில் இருந்திருக்கிறார்..

டவுட் + சந்தேகம்
அப்படி இருக்கும்போது, இந்த நேரத்தில் மனம் நொந்து புலம்புகிறார் என்றால், அது திமுகவாக இருக்குமோ? என்ற சந்தேகம் பல தரப்பிலும் எழுந்தது.. மேலும் முதல்வர் ஸ்டாலினை அவர் சந்தித்து பேசவும் இல்லை.. திமுக தொடர்பான பேச்சுக்களையும் அவர் தவிர்த்து வந்தார்.. அதற்கேற்றார்போல், அந்த சந்தேகம் ஓரளவு கிளியர் ஆகும் அளவுக்கு இன்னொரு செய்தியாளர் பேட்டியை தந்திருந்தார்.. அந்த பேட்டியில், பிரதமர் மோடியை அபாரமாக புகழ்ந்து தள்ளினார்..

மாய தோற்றம்
அதில், "மகாத்மா காந்தியை போன்றவர் நம் பிரதமர் மோடி... நாட்டின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் உழைக்கிறார்... அவருக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ச்சியாக தவறான தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் விரைவில் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். அவரை நேசிப்பார்கள், ஏற்றுக் கொள்வார்கள்.இந்தியாவின் பெருமையை பாதுகாக்க, நாட்டுப்பற்றுக் கொண்டு, நாட்டுக்காக உழைத்து வரும் பெருமகன் மோடி... இதே தமிழகம், மோடியை புகழ்ந்து பாராட்டும் காலம் விரைவில் வரும்... அது வெகு தொலைவில் இல்லை" என்றார்.

ஓவர்டோஸ்
வரும் எம்பி தேர்தலுக்கு, பாஜகவுடன் கூட்டணி வைக்க, ஐஜேகே இப்போதே தயாராகிவிட்டதோ என்ற டவுட் வலுவாக எழுந்தது.. இந்த டவுட்டையும் சில தினங்களுக்கு முன்பு, பாரிவேந்தர் கிளியர் செய்துவிட்டார்.. இந்திய ஜனநாயக கட்சித் தலைவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தரின் மகன் பிறந்தநாள் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய நிகழ்வு நடந்தது.. அப்போதும்கூட, ஒருவேளை இது அரசியல் மரியாதையாக இருக்குமோ? திமுக எம்பியாகத்தானே இன்னமும் இவர் இருக்கிறார்?" என்று டவுட் இருந்தது.. அந்த கொஞ்ச நஞ்ச டவுட்டையும் பாரிவேந்தர் இன்று கிளியர் செய்துவிட்டார்.

பச்சைமுத்து
டாக்டர் பாரிவேந்தர் பிறந்தநாள் நிகழ்ச்சி காட்டாங்குளத்தூரில் இன்று நடந்தது.. அப்போது பாரிவேந்தர் பேசும்போது, "திராவிட கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் கட்சியை தொடங்கினேன்.. ஆனால், குடும்ப ஆட்சி, குடும்ப அரசியல் கூடாது.. பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் குடும்ப அரசியல் ஒழிக்கப்படும்.. குடும்ப ஆட்சி என்பது எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் என ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரசு பணத்தை பெறக்கூடிய வகையில் செயல்படக்கூடாது" என்றார்.

உதயசூரியன்
ஆக... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இப்போது திமுக எம்பியாகவே பதவியில் இருக்கும் பாரிவேந்தர், திமுகவை விமர்சித்துள்ளார்.. அப்படியானால், மீண்டும் பாஜக பக்கம் போக போகிறார் என்றே கணிக்கப்படுகிறது.. இதே விழாவில், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து பேசும்போது, "ஐஜேகே ஓர் தேசிய கட்சி... திமுகவிற்கு மேல், நாம் இருக்கிறோம்" என்றார்.. இப்படித்தான், திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு, பாஜகவை குறை சொல்லிவிட்டுதான் அந்த கூட்டணி முறித்துக் கொண்டு இங்கு வந்தார்.. இப்போது இந்த கூட்டணியை முறித்துக் கொண்டு அங்கே போக போகிறாரோ? உறுதியாக தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications