3 காரணங்கள்.. அடுத்த விக்கெட்டை இழக்கிறதா அதிமுக.. "சைதை டூ கமலாலயம்?".. என்ன நடக்கிறது?
சைதை துரைசாமி பாஜக பக்கம் சாய போவதாக தகவல் வெளியானது
சென்னை: அதிமுகவில் இருந்து, கமலாலயத்துக்கு புதுவரவு ஒன்று அதிமுகவில் இருந்து வரப்போவதாக செய்திகள் பரபரத்து கொண்டிருக்கின்றன..!
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வெற்றியின் முடிவில் இருந்தே மாற்று கட்சியினர் திமுக பக்கம், தாவி வருவது நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, 5 வருட காலத்துக்கு இனி திமுக ஆட்சிதான் என்பதால், அதிமுகவில் இருந்து எதையும் சாதிக்க முடியாது, பலன்களை அறுவடை செய்ய முடியாது என்பதால் திமுக பக்கம் அதிமுகவின் நிர்வாகிகள் தங்கள் கவனத்தை திருப்ப தொடங்கினர்.

நடவடிக்கை
அதேபோல, ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கைகள் பாய்ந்து வருவதாலும், சம்பந்தப்பட்ட சீனியர்கள் வீடுகளுக்குள்ளேயே புகுந்து ரெய்டு நடத்தப்பட்டு வருவதாலும், மாஜிக்களே திமுக பக்கம் தாவி வருவதும், அதற்காக தூது நடவடிக்கைகளில் இறங்குவதும் நடந்து கொண்டிருக்கிறது.. இதற்கு நடுவே நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலின் வெற்றியும், திமுகவில் பலர் இணைய அடித்தளமாக அமைந்து வருகிறது.

அண்ணாமலை
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுகவுக்கே ஷாக் தரும்படியான ஒரு பேச்சு அதிமுகவுக்குள் எழுந்துள்ளது.. அதிமுகவின் ஒரு முக்கிய புள்ளி பாஜக பக்கம் வர போவதாக ஒரு பேச்சு கிளம்பி உள்ளது.. மன்கிபாத் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சிகளை தொகுத்து 'மனதின் குரல்' என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக சார்பில் நூல் தொகுப்பு ஒன்று சென்னையில் வெளியிடப்பட்டது.. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மனதின் குரல் புத்தகத்தை வெளியிட முன்னாள் மேயர் சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

சீனியர் தலைவர்
அதிமுகவின் சீனியர் தலைவரான சைதை துரைசாமி, பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான் முக்கிய டாக் ஆகிவிட்டது.. சைதை துரைசாமியை பொறுத்தவரை, மனிதநேயம் அறக்கட்டளை என்ற பெயரில் இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையம் நடத்தி வருபவர்.. எத்தனையோ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவி கொண்டிருப்பவர்..

சைதாப்பேட்டை
ஆனால், கடந்த சில காலமாகவே அதிமுகவில் இருந்து ஒதுங்கியே இருப்பதாக தெரிகிறது.. இருந்தபோதிலும், கட்சித் தலைமை கடந்த சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் சீட் தந்தது.. ஆனால், மாசு. முன்பு தோல்வியடைந்தார்... இந்த தோல்விக்கு பிறகு, இன்னும் சுத்தமாக அதிமுக பக்கமே சைதை துரைசாமி வராமல் இருந்தார்.. அதிமுக நடத்தி வரும், திமுகவுக்கு எதிரான கட்சி கூட்டங்கள், போராட்டங்களிலும் அவர் தென்படவில்லை.. இப்படி எதிலுமே பங்கேற்காமல், திடீரென பாஜக விழாவில் பங்கேற்றதால்தான் சந்தேகம் அதிகமாகிவிட்டது...

நெருப்பு அண்ணாமலை
அதுமட்டுமல்லாமல், அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து வரும் நிலையில், இவரும் கட்சி மாற தயாராகிவிட்டாரா என்ற எண்ணத்தையும் பரவலாக ஏற்படுத்தியது.. இதைவிர இன்னொரு காரணமும் உள்ளது.. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு " நெருப்பு".. அண்ணா என்றால் நெருப்பு என்று பொருள்.. அதனுடன் மலையும் சேர்ந்து இருக்கிறது.. அப்படின்னா, உங்கள் தலைவர் ஒரு நெருப்பு, அண்ணாமலை அவர்கள் திராவிட இயக்க தலைவர்களின் போல பேசக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார்" என்று புகழ்ந்து பேசிவிடவும், அந்த சந்தேகம் உறுதியாகிவிட்டது.

எம்ஜிஆர்
அதனால், இந்த சந்தேகத்தை செய்தியாளர்கள் நேரடியாகவே, சைதை துரைசாமியிடம் கேட்டுள்ளனர்.. அதற்கு அவர், "நான் ஒரு கல்வியாளராக பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறேன்... இலவச ஐஏஎஸ் அகாடமி நடத்துவதால் பல்வேறு கட்சியினர் என்னை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது வழக்கம்.. அப்படித்தான் பாஜக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டேன்... 14 வயது முதல் எம்ஜிஆரின் கைகளை பிடித்து நடந்த நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன்.. எனவே எனக்கு தேவையற்ற அரசியல் சாயத்தை பூசாதீங்க" என்று கொந்தளித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!











Click it and Unblock the Notifications