சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நொறுங்குகிறதா திமுக கணக்கு.. குறுக்கே வரும் கமல்.. "அது" ஒர்க் அவுட் ஆகுமா? அப்ப சீமான்?

கமலும் சீமானும் ஒன்றிணைவார்களா என்ற ஆர்வம் மக்களிடம் எழுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு முக்கியமான விஷயத்தை கொளுத்தி போட்டு விட்டு போயுள்ளார் கருணாஸ்.. இது திட்டமிட்ட ஒன்றா, அல்லது யதேச்சையான ஒன்றா என்று தெரியவில்லை.. ஆனால், அரசியல் உலகில் இதுகுறித்து விவாதங்கள் பற்றி கொண்டு எரிகிறது.
நேற்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை கருணாஸ் சந்தித்து பேசினார்.. கமல் வீட்டில் வளர்ந்தவன் என்ற முறையிலும், அவரால் வளர்க்கப்பட்ட மாணவன் என்ற முறையிலும் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசியதாக சொன்னார்.

அதுமட்டுமல்ல, நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மநீம 10 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது, வரும் காலங்களில் லஞ்ச, லாபமற்ற ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மநீம நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் இத்தேர்தலில் மொத்தம் 40 லட்சம் வாக்குகளை பெற்றன.

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசிடமிருந்து மாநில உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்க வேண்டும்: கருணாஸ் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசிடமிருந்து மாநில உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்க வேண்டும்: கருணாஸ்

 தமிழர் நலன்

தமிழர் நலன்

இந்த வாக்குகள் வருங்காலத்தில் ஒரு கோடியை தாண்டும்.. தமிழர்களுடைய நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் கமல்ஹாசனும், சீமானும் உறுதிபட இருப்பதால், இருவரும் இணைந்து பயணித்தால் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்" என்றார்.

அச்சாரம்

அச்சாரம்

கருணாஸின் இந்த வார்த்தைகள் பல்வேறு வியூகங்களையும் சந்தேகங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.. திமுக இப்போதுதான் 10 வருஷம் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது.. அதற்குள் புதிய அரசை கருணாஸ் ஏன் பேச வேண்டும்? புது அரசின் செயல்பாட்டை கொஞ்சம் காலம் பொறுத்திருந்து பார்க்காமல், இப்போதே ஏன் ஒரு அச்சாரத்தை போடுகிறார்? என்பதே முதல் கேள்வி.

 சீட் பிரச்சனை

சீட் பிரச்சனை

கமலும், சீமானும் இணைவது குறித்து ஏற்கனவே பலமுறை செய்திகள் கசிந்தன.. நடந்து முடிந்த தேர்தலில் கமல், திமுக பக்கம் தாவ இருப்பதாக ஒரு செய்தி வந்தது.. கமலுடன் கூட்டணி பேசி கொண்டிருப்பதாககூட முக ஸ்டாலின் ஒரு டிவி பேட்டியில் சொல்லி இருந்தார்.. ஆனால், சீட் பிரச்சனை காரணமாக இது பாதியிலேயே முறிந்துவிட்டது.. இந்த பேச்சுவார்த்தை நடப்பதை பார்த்து சீமானும் ஒதுங்கியே கொண்டார். ஆக மொத்தம் கமலுக்கு திமுகவும் இல்லை, சீமானும் இல்லை என்ற நிலைமையே ஏற்பட்டது.

கமல்

கமல்

ஒருகட்டத்தில் கமல் இறங்கி போய் சீமானிடம் கூட்டணிக்கு பேசினாராம்.. ஆனால், வேட்பாளர்களை அறிவித்துவிட்டதாலும், கடைசி நேரத்தில் தொண்டர்களின் மனநிலைமையை மாற்ற முடியாததாலும், கூட்டணிக்கு மறுப்பு சொன்னதாகவும்கூட செய்திகள் வந்தன.

தோல்வி

தோல்வி

இப்போது மறுபடியும் இவர்களின் கூட்டணி பற்றி கருணாஸ் பேசியுள்ளதை பார்த்தால், இனிவரும் தேர்தலுக்கு முன்னதாகவே மநீம கூட்டணியை இப்போதிலிருந்தே வலுப்படுத்த கமல் திட்டமிட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது.. இன்றைக்கு மய்யத்தில் வலுவானவர்கள் யாருமே இல்லை.. கமலின் நிழலில் பிழைக்க வந்த பறவைகள் எல்லாம், தோல்வியை பார்த்ததும், நன்றிமறந்து பறந்தும்விட்டன.. கமலுக்கு இது பெரிய அளவில் நெருக்கடியை தந்துவருகிறது, அதனாலேயே கமலின் அரசியல் செயல்பாடுகள் தற்சமயம் குறைந்தும் காணப்பட்டு வருகிறது.

கருணாஸ்

கருணாஸ்

ஒருவேளை கருணாஸ் சொல்லும்படி, கமலும் - சீமானும் இணையலாம்தான்.. இருவருமே மாற்றத்தை தர நினைப்பவர்கள்.. இருவருமே பணத்தை நம்பாமல் மக்களை நம்புபவர்கள்.. இருவருமே களப்பணியில் இறங்கி வேலை பார்ப்பவர்கள்.. இருவருமே ஒவ்வொரு தேர்தலிலும் துணிந்தும், தனித்தும் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபித்து வருபவர்கள்.. இருவருமே இளைஞர்களின் எதிர்கால தூண்களாக கருதப்படுபவர்கள்.. அந்த வகையில் இவர்கள் இணையலாம்தான். ஆனால், கமல் சம்மதித்தாலும், தனித்தே போட்டியிட்டு பழக்கப்பட்ட சீமான் இதற்கு சம்மதிப்பாரா என்று தெரியவில்லை..

வாக்குகள்

வாக்குகள்

வரப்போகும் பஞ்சாயத்து தேர்தலில் சீமான் கட்சி நிச்சயம் களமிறங்கி, பெருவாரியான வாக்குகளை பிரிக்ககூடும்.. அப்படி பிரிவது திமுகவின் வாக்கு வங்கிகளாகவே இருக்கும் என்பதால்தான், இப்போதே சீமானை வளைத்து போடும் முயற்சியில் திமுக இறங்குவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. ஒருஇடத்தில்கூட சீமான் வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழகத்தின் 3வது இடத்தை வலுவாக பெற்றுள்ளார்.. சீமானின் அரசியல்மிக நுட்பமாகவும், ஆழமாகவும் இருப்பதாலேயே டிடிவி தினகரனை பின்னுக்கு தள்ள முடிகிறது.

மநீம

மநீம

அந்த வகையில் திமுக அல்லது மநீம இவைகளில் எந்த கட்சி சீமானை தன் பக்கம் சாய்க்க போகிறது என்ற ஆர்வமும் பெருகி உள்ளது.. கருணாஸை பொறுத்தவரை, இந்த முறை அவருக்கு அதிமுகவில் சீட் கொடுக்கப்படவில்லை... சசிகலா பக்கம் செல்வார் என்று பார்த்தால், இந்த நிமிஷம் வரை சசிகலாவையும் சென்று சந்திக்கவில்லை.. தேர்தல் சமயத்திலும் அமைதியாகவே இருந்தார்... தேர்தலிலும் பங்கேற்கவில்லை... திமுகவுக்கு ஆதரவு தருவதாக சொல்லி அடுத்த 5 நிமிஷத்திலேயே அதையும் வாபஸ் வாங்கிவிட்டார்..

 அரசியல் லாபம்

அரசியல் லாபம்

இந்த சூழ்நிலையில்தான் கமல்ஹாசனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.. இது அவரது அரசியல் லாபத்துக்காகவே இருந்தாலும், கருணாஸை வைத்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளாரோ? அப்படி திட்டமிட்டால் அதற்கு சீமான் ஒத்துழைப்பாரா? அல்லது திமுக முந்திக் கொள்ளுமா? என்ற கேள்விகள் நம்மிடம் தொத்தி நிற்கின்றன..!

English summary
Will Seeman alliance DMK or MNM in Tamilnadu Panchayat Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X