அவசரபட்ட எடப்பாடி! ஓபிஎஸ்ஐ காப்பாற்ற போகும் எம்ஜிஆர்? இதுதான் நடக்கும்..ஆருடம் சொல்லும் தேனி தரப்பு!
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தங்களுக்கே தீர்ப்பு சாதகமாக வரும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
அதிமுக வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக இறுதி வாதத்தை முன்வைக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்கள் தீவிரமாக இருக்கின்றனர். அந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு தான் சாதகமாக வரும் என இரு தரப்புமே நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

அதிமுக வழக்கு
இதற்கிடையே அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இதனால் அவ்வழக்கில் பரபரப்பு நிலவி வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் மிக முக்கிய வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது. பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிய தீர்மானம் ஏன் இடம்பெறவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் வைத்தனர்.

சாதகமாக தீர்ப்பு
தற்போதைய சூழ்நிலையில் தொண்டர்களே கட்சி தலைமையை தீர்மானிக்க முடியும் எனவும் இதன் காரணமாக தங்கள் தரப்புக்கே தீர்ப்பு சாதகமாக வரும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் கூறியிருக்கின்றனர். இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற விசாரணையில் கலந்து கொண்ட வழக்கறிஞர் ஒருவரிடம் பேசிய போது,"தற்போதுள்ள சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தீர்ப்பு சாதகமாக வரவே வாய்ப்பு இருக்கிறது.

வழக்கறிஞர்
காரணம் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட சில வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இது எங்கள் கருத்து தான் காரணம், அதிமுக விதிகளின் படி பொதுச்செயலாளரை தவிர யாரையும் அவ்வளவு சீக்கிரம் எளிதாக புதிதாக பதவியைப் பெற்றவர்கள் நீக்கிவிட முடியாது. எம்ஜிஆர் வகுத்துக் கொடுத்த விதிகள் தான் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை காப்பாற்ற போகிறது. எது எப்படி எனினும் தீர்ப்பு இன்னும் சில தினங்களுக்குள் வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அவசரகதியில் எடப்பாடி
எடப்பாடி தரப்பு அராஜகமாக நடந்து கொண்டதை அனைவருமே அறிவார்கள். குறிப்பாக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளரை தண்ணீர் பாட்டில்களை விட்டு வீசி விரட்டியடித்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து இருக்க முடியாது. தமிழ்மகன் உசேனை அவை தலைவராக முன்மொழிந்தது ஓபிஎஸ் தான். முதலில் நடந்த பொதுக் குழுவில் தமிழ் மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என மொத்தமாக சிவி சண்முகம் அனைத்து தீர்மானங்களுமே செல்லாது என கூறினார். பின்னர் அவர் நியமனம் செய்யப்பட்ட தீர்மானம் மட்டும் எப்படி செல்லும் . இப்படி அவசர கதியில் எடப்பாடி எடுத்த முடிவுகள் அவருக்கு பின்னடைவை தர இருக்கிறது எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications