அதே ஷூ.. காதல் பாட்டு.. தோண்ட தோண்ட பூதம்.. விஜய் அரசியல் வாழ்க்கைக்கு சிக்கலாகும் திரிஷா விவகாரம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு தொடக்கத்திலேயே எண்டு கார்டு போடும் சூழல் உருவாகிவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திடீரென இணையத்தில் பரவும் நடிகை திரிஷாவின் விவகாரம்தான் இந்த பிரச்சனைக்கு காரணம். இந்த செய்தியில் முழுக்க முழுக்க கொடுக்கப்பட்டு இருப்பது எல்லாம் ஏற்கனவே நெட்டிசன்கள் பேசி வருவதுதான்.. அப்படி என்னதான் நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்.. வாங்க பார்க்கலாம்.

நடிகர் விஜய்க்கு சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். அவருக்கு சஞ்சய் என்ற 20 வயது கடந்த மகன் இருக்கிறார். அவர் சினிமா இயக்க முயன்று வருகிறார்.

vijay trisha gossip tamilaga Vetri Kazhagam

இப்போது பரவும் கிசுகிசு என்னவென்றால் நடிகர் விஜயுடன் நடிகை திரிஷா காதலில் இருக்கிறார் என்பதே.. இதை யாரும் உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. இதெல்லாம் கில்லி, குருவி படத்தில் இருந்தே பேசப்படும் விஷயம்தான்.

இப்போது ஏன்?: அதெல்லாம் சரி இப்போது ஏன் இதை பற்றி பேசுகிறீர்கள் என்றால் அதற்கு சில காரணங்கள் உள்ளன. நெட்டிசன்கள் கண்டுபிடித்த காரணங்கள் அவை.

1. திரிஷா நேற்று விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னார். அதற்கு இன்ஸ்டாவில் அவர் ஒரு ஆங்கில காதல் பாடல் போட.. அதில் நீதான் என் காதல்.. என் உயிர் பிரியும் வரை நீதான் என் காதல் என்றெல்லாம் ஆங்கிலத்தில் வரிகள் வருகின்றன.

vijay trisha gossip tamilaga Vetri Kazhagam

2. திரிஷாவின் பழைய படங்களை நெட்டிசன்கள் தோண்ட.. அதில் பல போட்டோக்களில் விஜயின் ஷூ தெரிகிறது. அதாவது அதே காலகட்டத்தில் விஜய் பயணம் செய்த போது அணிந்த அதே கருப்பு வெள்ளை ஷூவை.. அதே மாடலை திரிஷா போட்டோவில் இருக்கும் கால் ஒன்றும் போட்டு உள்ளது.

3. இதெல்லாம் போக திரிஷா இருந்த பயண லொகேஷன்களில் விஜயும் இருந்தது சில போட்டோக்கள் மூலம் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

சாப்ட் லேண்டிங்: 2கே கிட்ஸ் இடையே சாப்ட் லேண்டிங் என்ற வார்த்தை உள்ளது. அதாவது ஒரு விஷயத்தை.. பெரும்பாலும் இருவருக்கு இடையிலான காதல் விஷயத்தை பொதுவில் சொல்லாமல் வைத்திருந்து. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக பொது உலகிற்கு தெரியப்படுத்துவது. அதாவது கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் காதலில் இருக்கிறோம் என்பதை நண்பர்களுக்கும், சமூகத்திற்கும் சில சில ஹிண்டுகள் மூலம் தெரியப்படுத்துவதே சாப்ட் லேண்டிங்.

இதைத்தான் இப்போது திரிஷா செய்கிறாரோ என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.

vijay trisha gossip tamilaga Vetri Kazhagam

விஜய் அரசியலுக்கு சிக்கலா?: இது விஜய் அரசியலுக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1. முதல் விஷயம்.. விஜய் வருகை அரசியலுக்கு தேவைதான். முடிந்த அளவு எதிர்க்கட்சிகள்.. வலுவான குரல்கள் இருப்பதே அரசியலுக்கு தேவை.

2. விஜய் ஒருவேளை திரிஷா உடன் தொடர்பில் இருந்தாலும் அது பர்ஷனல் விஷயம்.

3. என்ன ஒன்று அவர் பொதுவாழ்க்கைக்கு வரும் பட்சத்தில் இதை கண்டிப்பாக கேள்வி எழுப்புவார்கள். விஜய் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

4. கண்டிப்பாக இந்த கிசுகிசு விவகாரம் அவர் அரசியலை பாதிக்கும். இப்போதே அவர் விளக்கத்தை கொடுத்தால் சரியாக இருக்கும்.

vijay trisha gossip tamilaga Vetri Kazhagam

5. யாருடன் வாழ்வது என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். அவர் என்ன முடிவுகளை வேண்டுமானால் எடுக்கலாம். தமிழக மக்கள் இதற்கு முன்பெல்லாம் திருமணம் - உறவு முறை எல்லாம் தலைவர்களுக்கு, தலைவிகளுக்கு எப்படி இருக்கிறது என்று பார்த்து வாக்களித்தது இல்லை. அந்த விதத்தில் தமிழர்கள் progressive கொள்கை கொண்டவர்கள். விஜய்க்கும் அப்படித்தான்.. ஆனாலும் அவர் பொதுவாழ்க்கைக்கு வரும் பட்சத்தில் இதை கண்டிப்பாக கேள்வி எழுப்புவார்கள். விஜய் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+