விம்பிள்டன் வரை விஜய்.. உலக அளவில் ஜனநாயகன் ரீச்! காசு கொடுத்தாலும் இப்படி ஒரு விளம்பரம் கிடைக்காது!
சென்னை: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில் விம்பிள்டன் நிர்வாகம் ஜனநாயகன் போஸ்டரை ரீகிரியேட் செய்து விம்பிள்டன்நாயகன் என சின்னருக்கு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து உலக அளவில் விஜய் ரீச் ஆனதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக முக்கியமான தொடரான விம்பிள்டன் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வெளியேறிய நிலையில் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கஹராஸ், இத்தாலியின் ஜன்னிக் சின்னர் ஆகியோர் மோதினர்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4க்கு 6, 6க்கு 4, 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் ஜன்னிக் சின்னர் கார்லஸ் அல்கராஸை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் முதல்முதலாக விம்பிள்டன் பட்டத்தை வென்றிருக்கிறார்.

அதுமட்டுமல்லாம் விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையோடு, இது அவரது நான்காவது கிராஸ்லாம் பட்டமாகும். இந்த நிலையில் ஜானிக் சின்னருக்கு உலக அளவில் வாழ்த்து குவிந்து வருகிறது. அந்த வகையில் விம்பிள்டன் நிர்வாகமும் சின்னருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. குறிப்பாக நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போலவே ஜானி சின்னருக்கும் போஸ்டர் வெளியிட்டிருக்கிறது.
வேனின் மீது ஏறி விஜய் செல்ஃபி எடுப்பது போல இருந்த புகைப்படத்தை, ஜானிக் சின்னர் புகைப்படம் எடுப்பது போல மாற்றி இருக்கின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த புகைப்படத்தின் ஒரிஜினல் போட்டோ எது என இணையத்தில் பலரும் தேடி வருவதால் ஜனநாயகன் படத்துக்கு உலக அளவில் இலவச விளம்பரம் கிடைத்திருக்கிறது. இதனால் உலக அளவில் விஜய் ஃபேமஸ் ஆகி இருப்பதாகவும் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உண்மையிலேயே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படப்பிடிப்பிற்காக விஜய் நெய்வேலியில் இருந்த போது அவரது வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது. தொடர்ந்து விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் சென்னைக்கு அழைத்து வந்தனர். பிறகு மீண்டும் அவர் நெய்வேலி வந்தபோதுதான் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேனின் மீது ஏறி நின்று செல்பி எடுத்தார். தற்போது அந்த செல்பி ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிடப்பட்டுள்ளதோடு தற்போது விம்பிள்டன் நிர்வாகமும் அதனை ரீ கிரியேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications