இதான் தமிழ்நாடு! கிளாஸ் ரூம் அல்ல.. கிளாம்பாக்கம் பூங்கா! வைரலாகும் ஐடி பெண் - செக்யூரிட்டி வீடியோ
சென்னை: தொழில்நுட்ப மாற்றங்களால் வேலைவாய்ப்பு பறிபோகுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு, கிளாம்பாக்கத்தில் உள்ள ஒரு முதியவர் பேசிய வார்த்தைகள் பெரும் நம்பிக்கையை அளித்து வருகின்றன.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்காவில் (Kalaignar Centenary Climate Park) எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஒரு ஐடி பெண் ஊழியருக்கும், அங்கு பணியாற்றும் முதிய பாதுகாப்பு ஊழியருக்கும் (Security Guard) இடையேயான இந்த உரையாடல், வெறும் பேச்சாக மட்டுமில்லாமல் ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் பாடமாக மாறியுள்ளது.

ஏஐ (AI) குறித்த பயமும், முதியவரின் முதிர்ச்சியான பதிலும்
அந்த வீடியோவில், பொறியியல் முடித்துவிட்டு ஐடி துறையில் பணியாற்றி வரும் அந்த இளம்பெண், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வளர்ச்சியால் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற தனது கவலையைப் பகிர்ந்து கொள்கிறார். தொழில்நுட்பம் தனது வேலையைப் பறித்துவிடுமோ, தான் படித்த படிப்பு வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் அவர் இருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது.
அவரை அமைதிப்படுத்திய அந்தப் பாதுகாப்பு ஊழியர், மிகவும் நிதானமாகவும், இப்போது உள்ள டிரெண்டிங் தொழில்நுட்ப அறிவோடும் பதில் அளித்தார்.
"டாடா இறந்த பின்பே டிசிஎஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் எல்லாம் வந்தது.. ஆட்டோமேஷன் காரணமாகவே பணி நீக்கம் வந்தது.. AI வரும்... ஆனால் மனிதன்தான் உலகை இயக்குவான். வாழ்க்கை என்பது ஒரு காக்பிட் (Cockpit) போன்றது; எப்போது டர்புலன்ஸ் (Turbulence) வரும் என்று தெரியாது, ஆனால் நீங்கள் பயப்படக்கூடாது, ஏம்மா, எதுக்கு இப்போ பயப்படுற? AI வரும்... ஆனா 'Man will run the world'. மிஷின் என்னைக்குமே மனுஷனுக்கு கீழ தான்" என்று அவர் சரளமான ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலந்து பேசிய விதம் வீடியோபார்ப்போரை வியக்க வைத்தது.
இதற்கு அந்த பெண்மணி, இல்லை தாத்தா, இப்போவே நிறைய பேரை வேலையை விட்டு தூக்குறாங்க. நான் கத்துக்கிட்டதெல்லாம் வேஸ்ட் ஆகிடுமோன்னு தோணுது என்று சொல்ல..
அம்மா, வாழ்க்கைங்கிறது ஒரு 'Cockpit' மாதிரி. ஒரு பைலட் பிளேன் ஓட்டும்போது எப்போ 'Turbulence' வரும்னு அவருக்கு தெரியாது. ஆனா அதனால அவர் பிளேனை விட்டுட்டு குதிச்சிடுவாரா? கிடையாது. அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கணும்னு கத்துக்கிட்டு நிதானமா ஓட்டுவார். நீயும் அப்படித்தான் இருக்கணும் என்று கூறி உள்ளார்.
A casual conversation with a security worker at Kalaignar Centenary Climate Park, Kilambakkampic.twitter.com/SC0nVCoz8C
— Tamil Nadu Infra (@TamilNaduInfra) February 9, 2026
அதற்கு அந்த பெண், உங்களுக்கு இதெல்லாம் எப்படி தாத்தா தெரியுது? டர்புலன்ஸ், காக்பிட்-ன்னு கரெக்டா சொல்றீங்க? என்று கேட்கிறார்.
படிப்புங்கிறது வேற, அறிவுங்கிறது வேறம்மா. நீ பெரிய கம்பெனில வேலை செய்யலாம், நல்லா இங்கிலீஷ் பேசலாம். ஆனா அதைவிட முக்கியம் 'Humility'. பணிவா இருக்கணும். நீ கத்துக்கிட்டது என்னைக்குமே வீண் போகாது. உலகம் மாறும்போது நாமளும் அதுக்கேத்த மாதிரி மாறிக்கணும். இன்னைக்கு டாடா (Tata Group) மாதிரி பெரிய கம்பெனிலாம் எப்படி இன்னும் நிலைச்சு நிக்குது? அவங்க காலத்துக்கு ஏத்த மாதிரி தங்களை மாத்திக்கிட்டே இருக்காங்க.. நான் பேசுறது எல்லாம் படிப்பு அறிவு இல்லமா.. கேள்வி ஞானம்தான் என்று கூறி உள்ளார்.
இருவரும் நெகிழ்ச்சியாக உரையாடும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதை பகிர்ந்து.. இதுதாங்க தமிழ்நாடு என்று பாராட்டி வருகிறார்கள்!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications