நல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்
கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்
சென்னை: ஆரம்பத்தில் நல்லவராகத்தான் இருந்தார் வனிதா.. திடீரென அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுவிடவும்தான் இப்படி ஒரு காரியத்தில் துணிந்து இறங்கி இருக்கிறார்.. இப்போது போலீசில் சிக்கி கொண்டு அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார்.
சென்னையில் பல இடங்களில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல்கள், புகார்கள் வந்து கொண்டே இருந்தன.
குறிப்பாக கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் டூவீலரில் கஞ்சா சப்ளை நடப்பதாக சொல்லவும் அதன் அடிப்படையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. கிண்டி, வேளச்சேரி ரோடுகளில் போலீசார் மப்டியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கஞ்சா
அப்போதுதான் வனிதா சிக்கினார்.. டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.. ஸ்விக்கி ஊழியர் போல, சாப்பாட்டை டெலிவரி செய்ய சென்று கொண்டிருந்தார்.. ஸ்விக்கி ஊழியர் என்றாலும் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது.. அதனால் வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சாப்பாட்டு பையில், சுமார் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்தனர்.

ஸ்விக்கி
அப்போதுதான் பெயர் வனிதா என்பதும், 32 வயசாகிறது என்றும் மடிப்பாக்கத்தில் வசித்து வருவதாகவும் சொன்னார்.. ஸ்விகியில் உணவு டெலிவரி செய்பவராக வேலை பார்த்து வந்துள்ளார்.. அப்படியே பார்ட் டைம் ஆக கால் டாக்சியும் ஓட்டி வந்துள்ளார்.. அப்போதுதான் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அந்த பெண் கஞ்சா சப்ளை செய்பவராம்.

கடத்தல்
அதனால் வனிதாவை தன் தொழிலுக்கு வருமாறு பேசி சம்மதிக்க வைத்துள்ளார். ஸ்விக்கி டிரஸ்ஸிலேயே கஞ்சாவை மறைத்து கொண்டு போனால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதாலேயே இவ்வளவு நாள் கஞ்சா கடத்தினாராம் வனிதா.

கஸ்டமர்கள்
கோயம்பேடு பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி வந்து, கஸ்டமர்களுக்கு தந்து வந்துள்ளார்.. இவரிடம் கஞ்சா வாங்க ஒரு பெரிய கஸ்டமர் கூட்டம் இருக்கிறதாம்.. அவர்களில் பெரும்பாலானோர் கிண்டி பகுதியில்தான் உள்ளனராம்.. இப்போது வனிதாவிடம் 2 செல்போன், 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications