சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Yaas Cyclone LIVE : யாஸ் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி இன்று ஆய்வு

Google Oneindia Tamil News

கோர தாண்டவமாடிய யாஸ் புயலால் ஒடிசா, மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்.

Yaas Cyclone Live Tracking: Know Current Location, Speed, Path, Landfall Updates in Tamil

Newest First Oldest First
5:44 PM, 28 May

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு ரூ.1,000 கோடி நிவராண நிதி ஒதுக்கீடு - பிரதமர் மோடி உத்தரவு. ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தில் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் பிரதமர் மோடி அறிவிப்பு. யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி. யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி.
11:44 AM, 28 May

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது. கேரளாவில் 31ம் தேதி தென்மேற்குப் பருவழை தொடங்க வாய்ப்பு. வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ம் தேதி பருவமழை தொடங்கும். வங்கக்கடலின் தென்கிழக்குப்பகுதிகளில் 27ஆம்தேதியே பருவமழை தொடங்கிவிட்டது. யாஸ் புயல் உதவியால் அரபிக்கடல் பகுதிக்கு பருவமழையை இழுத்துள்ளது.
7:09 AM, 28 May

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு. ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு. மேற்கு வங்கத்தில் கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்கள் பாதிப்பு. யாஸ் புயலுக்கு 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர தாண்டவமாடிய யாஸ் புயலுக்கு ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் விமானப்படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்
11:25 AM, 27 May

குமரி மாவட்டத்தில் தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்
11:24 AM, 27 May

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை நீடிக்கிறது
கனமழையால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
8:54 AM, 27 May

மேற்கு வங்கத்தில் 3 லட்சம் வீடுகளை சேதப்படுத்தியது யாஸ் புயல். மேற்கு வங்கம், ஒடிஸாவில் மீட்பு பணிகள் துரிதம். கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. கடல் நீரால் சுமார் 2 அடி உயரத்திற்கு மேல் நீர் மட்டம் இருந்தது
8:13 AM, 27 May

ஒடிஸா, மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் 4 பேர் பலி. மரங்கள் விழுந்தும் வீடுகள் சேதமடைந்தும் இந்த பலி நடந்துள்ளதாக தகவல். இரு மாநிலங்களிலிருந்து 20 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்
7:30 AM, 27 May

கொல்கத்தா, மேதினிபூர் கிழக்கு மற்றும் மேற்கில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. யாஸ் புயல் அதி தீவிர புயலிலிருந்து தீவிர புயலாக வலுவிழந்த நிலையில் கொல்கத்தாவில் மழை
6:58 AM, 27 May

யாஸ் புயலால் மேற்கு வங்கத்தில் 1,100 கிராமங்களில் வெள்ளநீர். ஒடிஸாவில் 120 கிராமங்கள் மழை நீர் மற்றும் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டன. 120 கிராம மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
6:41 AM, 27 May

தீவிர புயலாக இருந்த யாஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது- இந்திய வானிலை மையம். வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நேற்று ஒடிஸா அருகே கரையை கடந்தது. யாஸ் புயல் நேற்று அதி தீவிர புயலாகவே கரையை கடந்தது. கரையை கடந்தவுடன் நேற்று மாலை தீவிர புயலாக வலுவிழந்தது. தீவிர புயலாக வலுவிழந்த யாஸ் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது . அடுத்த 12 மணி நேரத்தில் யாஸ் புயல் காற்றழுத்தமாக வலுவிழக்கும்
3:54 PM, 26 May

மண்டபத்தில் இருந்து புறப்படும் . சூறாவளி காற்று காரணமாக ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர்; ராமேஸ்வரம் - மண்டுவாடி ஆகிய 2 சிறப்பு ரயில்கள் ராமேஸ்வரத்துக்கு பதிலாக மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
3:32 PM, 26 May
ஒடிஷா

யாஸ் புயல் 3 மணிநேரத்துக்குப் பலவீனமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையாகும்- வானிலை மையம்
1:27 PM, 26 May
ஒடிஷா

யாஸ் புயல் ஒடிஸாவின் பாலசோருக்கு அருகே கரையை கடந்தது புயல் கரையை கடந்த போது மணிக்கு 140 முதல் 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது
11:57 AM, 26 May

மேற்கு வங்கம் மாநிலம் மேதினிபூர் மாவட்டத்தில் திகா பகுதியில் காற்றின் வேகம் அதிகரிப்பு. மேதினிபூர் பகுதியில் உள்ள கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. யாஸ் புயல் பாலசோருக்கு தென் கிழக்கே 30 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. புயல் காற்றின் வேகம் மணிக்கு 130- 140 ஆக உள்ளது- இந்திய வானிலை மையம்
11:17 AM, 26 May
மேற்கு வங்காளம்

யாஸ் புயல் கரையைக் கடப்பதால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
9:40 AM, 26 May
மேற்கு வங்காளம்

யாஸ் புயல் சீற்றம் காரணமாக கிழக்கு மிட்னாப்பூரில் ஊருக்குள் புகுந்த கடல் நீர்
9:40 AM, 26 May

யாஸ் புயல் இன்று காலை 9 மணியளவில் கரையை கடக்க தொடங்கியது- வானிலை மையம். யாஸ் புயல் ஒடிஸாவின் பாலசோர் அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது
9:11 AM, 26 May
ஒடிஷா

யாஸ் புயல் கரையை கடப்பது தாமதமாகிறது; இன்று காலை 10 மணி முதல் 11 மணி இடையே கரையை கடக்க வாய்ப்பு என வானிலை மையம் தகவல்
9:11 AM, 26 May
ஒடிஷா

ஒடிஸாவின் கோபால்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை. யாஸ் புயலால் கோபால்பூரில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல். யாஸ் புயலால் கடல் கொந்தளிப்புடன் காண்கிறது. கடல் அருகே சில மீனவர்கள் குழுமியுள்ளனர்
8:52 AM, 26 May

புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் இந்திய கடற்படை. மாநில அரசுடன் இணைந்து செயல்பட குர்தாவில் தயாராக உள்ள ஐஎன்எஸ் சில்கா விமானம்
8:01 AM, 26 May

ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும் - இந்திய வானிலை மையம். ஒடிஸாவின் பாரதீப்பில் கனமழை பெய்யும். வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் யாஸ் மையம் கொண்டிருக்கிறது. தம்ராவிலிருந்து கிழக்கில் 40 கி.மீ. தொலைவில் யாஸ் புயல் மையம். பாலசோரிலிருந்து தென்கிழக்கில் 90 கி.மீ. தொலைவிலும் யாஸ் மையம்- இந்திய வானிலை மையம்
7:25 AM, 26 May

யாஸ் புயல் மேற்கு வங்கம், ஒடிஸாவில் மரங்கள் வேரோடு சாயும்- இந்திய வானிலை மையம். காற்றின் வேகம் அதிகமாக வீசுவதால் யாஸ் புயலால் மின்கம்பங்களும் சாய்ந்து விழும். கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு தாக்கம் கடுமையாக இருக்கும்
7:07 AM, 26 May

யாஸ் புயல் இன்று கரையை கடப்பதால் காலை 8.30 மணி முதல் கொல்கத்தா விமான நிலையம் மூடல். யாஸ் புயல் இன்று மதியம் கரையை கடக்கிறது. யாஸ் கரையை கடக்கும் வரை ஒடிஸாவுக்கு விமான சேவைகள் நிறுத்தம்
7:06 AM, 26 May

யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறிய நிலையில் இன்று கரையை கடக்கிறது. ஒடிஸா, மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை. ஒடிஸாவில் பத்ராக் மாவட்டத்தில் தம்ரா துறைமுகம் அருகே இன்று கரையை கடக்கிறது
10:11 PM, 25 May

வங்கக் கடலில் உருவான' யாஸ்' புயல் அதிதீவிர புயலாக மாறியது - இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது 15 கி.மீ வேகத்தில் வடக்கு, வடக்கு திசை நோக்கி யாஸ் புயல் நகர்கிறது - வானிலை ஆய்வு மையம். நாளை பிற்பகல் பாரதீப் சாகர் தீவு இடையே யாஸ்' புயல் கரையை கடக்கிறது .
8:22 PM, 25 May
மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் கோரத்தாண்டவாமட தொடங்கியது- மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன
4:51 PM, 25 May
மேற்கு வங்காளம்

யாஸ் புயலை எதிர்கொள்வதற்கான கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
4:51 PM, 25 May
ஒடிஷா

யாஸ் புயல் காரணமாக ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இன்று பகல் 2 மணிமுதல் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன.
4:33 PM, 25 May
ஒடிஷா

ஒடிஷாவின் தாம்ரா துறைமுகம் அருகே யாஸ் புயல் கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4:32 PM, 25 May
மேற்கு வங்காளம்

யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்: முதல்வர் மமதா பானர்ஜி
READ MORE

English summary
Cyclone Yaas (யாஸ் புயல்) LIVE Tracking in Tamil: Check the Yaas Puyal live tracking status, current location, speed, path, landafall, rain alerts and latest news updates in Tamil. யாஸ் புயல் தற்போதைய நிலவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X