நீங்க தனியா வழிநடத்துனா சரியா இருக்காது! எடப்பாடியை சுற்றி நின்று கேள்வி கேட்ட 8 பேர்? மெகா ட்விஸ்ட்
சென்னை: அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின், எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிக்கு பின் தமிழ்நாட்டில் வரிசையாக 10 தேர்தல்களில் தோல்வி அடைந்து உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் முக்கிய தலைவர்கள் தலையெடுக்க தொடங்கி உள்ளனர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திடீரென அரசியல் புரட்சி ஏற்பட தொடங்கி உள்ளது. அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக கட்சியினர் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று அதிமுக கூட்டம் நடந்தது. அந்த அதிமுக கூட்டத்தில் ஒருங்கிணைந்த அதிமுக பற்றி எடப்பாடி எதுவும் பேசவிடவில்லை என்று கூறப்படுகிறது.

மாறாக பாஜகவுடன் கூட்டணி இல்லை. பாஜகவுடன் இனி இணைய மாட்டோம். 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இதில் ஒருங்கிணைந்த அதிமுக பற்றி எதுவும் பேசப்படவில்லை.
ஆனால் இந்த கூட்டத்திற்கு முன்பாக.. அதாவது கூட்டம் கூடும் முன் எடப்பாடி பழனிசாமியிடம் கொங்கு மண்டலத்தை சேர்ந்த 6 மாஜி அமைச்சர்கள், இன்னும் 2 மாஜி அமைச்சர்கள் எடப்பாடியை மீண்டும் சந்தித்து கடுமையான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்களாம்.
கோரிக்கை என்ன?: அதன்படி 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. திமுக கூட்டணி 40 இடங்களிலும் வென்று அசத்தி உள்ளது.
வரிசையாக 10 தோல்வி; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. லோக்சபா தேர்தலோடு சேர்த்தால் 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது
டெபாசிட் இழப்பு: அதிலும் இந்த முறை அதிமுக அதிக இடங்களில் டெபாசிட் இழந்து உள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக.
9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும் சென்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. இதை பற்றி எல்லாம் எடப்பாடியிடம் பேசிய சீனியர்கள், அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும். அதிமுகவில் வேட்பாளர் தேர்வு சொதப்பல். பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். சில இடங்களில் வெளியூர் ஆட்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். கல்லை கூட ஜெயிக்க வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே
அதிமுக மீண்டும் ஒருங்கிணைவதே முக்கியம். நீங்க தனியா வழிநடத்துனா சரியா இருக்காது.. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் . கட்சி ஒன்றாக இருந்தால் மட்டுமே நிலைமை சரியாகும். கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைய வேண்டும். அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும்.
நீங்கள் தனியாக வளரவில்லை.. உங்களை நீக்கப்பட்டவர்கள்தான் வளர்த்துவிட்டனர். அவர்கள் மீண்டும் வந்தால்தான் கட்சிக்கு நன்றாக இருக்கும் என்று கூறி 8 பேரும் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications