ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க.. மிகவும் கலங்கி பேசிய டிடிஎஃப் வாசன்.. ஏறி மிதிக்காதீங்கன்னு குமுறல்
சென்னை: நான் யாரையாவது இன்ஸ்பயர் செய்திருந்தால் என்னை தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என யூடியூபர் டிடிஎஃப் வாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
டிராவல் பிலாகர் கோவை வாசன் சாலைகளில் 250 கி.மீ. வேகத்தில் வாகனத்தை இயக்குவது அந்த வீடியோவை பார்க்கும் நிறைய இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
மேலும் தேவையின்றி பொது இடங்களில் ஆயிரக்கணக்கில் கூட்டத்தை கூட்டுவதாகவும் இவர் மீது புகார் எழுந்தது. இதை சென்னை காவல் துறை நடவடிக்கை எடுப்பதாக நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மிகவும் கலங்கிய நிலையில் டிடிஎஃப் வாசன் ஒரு வீடியோவை அவரது சேனலில் வெளியிட்டுள்ளார்.

வருத்தமாக இருக்கேன்
இதுகுறித்து டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எல்லாரும் எப்படி இருக்கீங்க. நல்லாயிருக்கீங்கன்னு நம்புறேன். ஆனால் நான் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறேன்.-காரணம் என்னவென்றால் அண்மைக்காலமாக என்னை சுற்றி நிறைய பிரச்சினைகள் எழுந்துள்ளன.

ஸ்டன்ட் செய்ய நான் அறிவுறுத்தியதில்லை
இதை நாளை காலை விவரமாக சொல்கிறேன். ஆனால் நான் யாருக்கும் வம்பு தும்பு நெனச்சது கிடையாது. திடீரென என்ன என தெரியவில்லை நம் பக்கம் எல்லாமே திரும்புது. காரணமே தெரியலை. திடீரென நெகட்டிவ்வாக நிறைய பேர் பேசுகிறார்கள். நான் யாரையும் ஹெல்மெட் போடாதீங்க, வேகமாக ஓட்டுங்கள், சாகசங்கள் செய்யுங்கள் என ஊக்கப்படுத்தியது கிடையாது.

என் திறமையை வளர்த்து கொள்ளும் முயற்சி
நான் சாகசங்களை செய்வேன். நான் எனது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் நிறைய தூரம் பைக்கில் செல்கிறேன். திடீரென பைக் தூக்கிவிட்டால் அந்த சமயத்தில் என்ன செய்வது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அது போல்தான் சாகசங்களை நான் பழகியிருக்கேன். நான் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில்தான் செய்துள்ளேன்.

தனி இடத்தில் சாகசங்கள்
ஆனால் ஒரு சில ஊடகங்கள் அதை தவறாக கொண்டு செல்கிறார்கள். ஒரு வேளை நான் யாரையாவது இன்ஸ்பயர் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். வாகனங்களை பார்த்து பத்திரமாக ஓட்டுங்கள். ஹெல்மெட் போட்டுக் கொண்டு வாகனங்களை ஓட்டுங்கள். சாகசங்களை செய்வதாக இருந்தால் தனியாக ஒரு இடத்தில் பயிற்சி எடுங்கள்.

தமிழகத்தில் நான் செல்லவில்லை
அது போல் நான் ஹை ஸ்பீடில் போகிறேன், 247, 250 கி.மீ. வேகத்தில் நான் ஓட்டியிருக்கேன். அந்த வீடியோவைதான் எல்லாரும் காண்பித்து எனக்கு எதிராக பேசி வருகிறார்கள். அந்த ஸ்பீடில் நான் தமிழகத்தில் ஓட்டவில்லை. வடஇந்தியாவில் யமுனா எக்ஸ்பிரஸ் எனும் பெரிய நெடுஞ்சாலையில்தான் ஓட்டினேன்.

பைக்கின் திறன்
பைக்கின் திறனை தெரிந்து கொள்வதற்காகவும் அதன் ஸ்பீடு எவ்வளவு என பார்ப்பதற்காகவும்தான் வேகமாக ஓட்டினேன். வட இந்தியாவில் இது போன்ற சாகசங்களை நிறைய பேர் பாராட்டுகிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் புதுசா வளர்ந்து வரும் என் மீது ஏறி மிதிக்கிறார்கள் என்றும் சொல்ல மாட்டேன், ஏறி மிதிக்கலைனும் சொல்ல மாட்டேன். எல்லாம் நல்லதே நடக்கும் என நம்புவோம் என தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications