ராத்திரியில்.. காஸ்ட்லி காரில்.. லட்சுமி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. மிரண்ட போலீஸ்..!
சென்னையில் ஆடுகளை திருடிய பெண் கைதானார்
சென்னை: ராத்திரி நேரத்தில், தினமும் காரில் வந்திறங்குவார் லட்சுமி.. பிறகு யாருக்கும் தெரியாமல் அந்த வேலையை செய்துவிட்டு மறுபடியும் அதே காரில் எஸ்.ஆகி விடுவார்.. இப்போது லட்சுமி, கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்!
சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலானோருக்கு ஆடு மேய்ச்சல்தான் பிரதான தொழில்.. இந்த ஆடுகளை நம்பியே பலரது குடும்பம் உள்ளன.

ஆனால், இந்த ஆடுகளையும் சில கும்பல்கள் அடிக்கடி திருடி வந்துள்ளன.. ஒருசில மாதங்களுக்கு முன்புகூட அண்ணன் - தம்பிகள் ஒரு காரில் வந்து ஆடுகளை நோட்டம் விட்டு சென்று, அதன்பிறகு, மேய்ச்சலில் உள்ளவர் அசந்து இருக்கும் நேரத்தில் அந்த ஆடுகளை திருடி வந்துள்ளனர்.. இப்படி திருடிய பணத்தில், சினிமா படம் எடுத்து ஜாலி வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
அதுபோலவேதான் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. சென்னை அடுத்த எண்ணூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஆடுகள் காணாமல் போய் கொண்டிருந்தன.. தொடர்ச்சியாக ஆடுகள் திருடு போகவும், அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. அவர்களில் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் இந்த ஆடுகளை நம்பிதான் உள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணூர் போலீசில் புகார் தந்தனர். போலீசாரும் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் ஒரு கார் அங்கு வந்து சென்றது தெரியவந்தது.
அந்த காரின் நம்பரை வைத்து விசாரித்தபோது, அது திருமழிசையை சேர்ந்த அஷ்ரப்பின் என்பவரின் கார் என்பது தெரியவந்தது.. இவர் மனைவி பெயர் லட்சுமி.. 38 வயதாகிறது.. லட்சுமிதான் நைட் நேரத்தில் காரில் வந்து ஆடுகளை திருடி, அதே காரில் அவைகளை கடத்தி சென்று விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது...
இந்த 2 மாசத்தில் மட்டும் எண்ணூர் பகுதிகளில் 20 ஆடுகளை லட்சுமி திருடி கடைகளுக்கு விற்றுள்ளார்.. இதையடுத்து, லட்சுமியை போலீசார் கைது செய்தனர்.. ஆனால், அவரது கணவன் அஷ்ரப்பை காணோமாம்.. ஆடுகளை திருடி விற்றதில் இவருக்கும் பங்குள்ளது போலும்.. அதனால், அஷ்ரப் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications