சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்லைன் ரம்மி எனும் அரக்கன்.. கோரப்பசிக்கு மற்றொரு உயிர்ப்பலி.. கடனால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Recommended Video

    Online Rummyயால் அழியும் குடும்பங்கள்..தீர்வு என்ன?

    பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லது வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என நினைத்து அறியாமையில் மூழ்கி மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

    விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து கடனுக்கு மேல் கடன் வாங்கி கடனில் மூழ்கி வேறு வழியின்றி தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அவலநிலை நீடிக்கத்தான் செய்கிறது. ஆன்லைன் ரம்மி, ட்ரேடிங்க் ஆப்கள் தான் இந்த அவலநிலைக்கு காரணம். இதனையடுத்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் கோரிக்கைகளால் தடை கொண்டுவரப்பட்டது.

    சென்னை ரேஷன் கடையில் முதல்வர் திடீர் விசிட்! மாஸ்க் போடாதவர்களை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா? சென்னை ரேஷன் கடையில் முதல்வர் திடீர் விசிட்! மாஸ்க் போடாதவர்களை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா?

     ஆன்லைன் ரம்மி எனும் அரக்கன்

    ஆன்லைன் ரம்மி எனும் அரக்கன்

    கடந்த ஆட்சிக்காலத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டன. ரம்மி நிறுவனங்கள் மேலமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த சட்டத்திற்கு தடைபெற்றனர். இதையடுத்து மீண்டும் தமிழகத்தில் நுழைந்தது ஆன்லைன் ரம்மி. அப்போதிருந்து இப்போது வரை பல உயிர்களை தனது கோர பசிக்கு இரையாக்கி வருகிறது என்றே கூறலாம்.

     ஆன்லைன் ரம்மியால் தற்கொலை

    ஆன்லைன் ரம்மியால் தற்கொலை

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட வங்கி ஊழியர் ஒருவர் தனது அழகான மனைவி அன்பான குழந்தைகளை கொடூரமாக கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது ஆன்லைன் ரம்மி எனும் அரக்கன் காரணமாகத்தான். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சென்னையிலேயே மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது . சென்னை கோயம்பேட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த தினேஷ் என்கின்ற நபர் மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார்.

     மீண்டும் அதிர்ச்சி

    மீண்டும் அதிர்ச்சி

    இவர் கோயம்பேடு பகுதியில் இன்டர்நெட் சேவை மையத்தை நடத்தி வருவதாகவும் சில வருடங்களாக இவர் ஆன்லைன் விளையாட்டில் அதிக ஈர்ப்பு கொண்டு கடன் வாங்கி விளையாடி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விளையாட்டில் பண இழப்பு ஏற்பட்ட நிலையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினாலும் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு காவல் துறையினர் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி விட்டு வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.

     அரசுக்கு கோரிக்கை

    அரசுக்கு கோரிக்கை

    போலீசார் விசாரணை நடத்தியதில் தினேஷ் சில வருடங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் கடன் வாங்கி பணம் செலுத்தி விளையாடி வந்ததாகவும், கடனாளிகள் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டதால் மன உளைச்சல் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார் என்பதும் போலீஸ் விசாரணயில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விபரீத விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு சட்டத்தை மீண்டும் இயற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    English summary
    Police are investigating a shocking incident in which a debtor committed suicide after losing money in an online rummy game in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X