உதயமான உதயநிதி ஸ்டாலின்! கல்லூரி நாட்களிலேயே கட்சிக்காக பிரச்சாரம்! இன்று அமைச்சராக அவதாரம்!
சென்னை: கல்லூரி நாட்களிலேயே கட்சிக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அரசியலில் அமைச்சராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயணம் செல்லும் போது அவருடன் தமிழகம் முழுவதும் பயணித்தவர் உதயநிதி.
தந்தைக்கு உதவியாக அவரது பிரச்சாரத்தை நேரில் காண்பதற்காக ஒவ்வொரு தேர்தலின் போதும் உதயநிதி இந்த டூரில் பங்கேற்பார்.
இதனிடையே நேரடி அரசியலுக்கு வந்த பின்னர் உதயநிதி கடந்து வந்த பாதைகளை சுருக்கமாக பார்க்கலாம்.

இயல்பான பேச்சு
உதயநிதி ஸ்டாலினிடம் உள்ள ப்ளஸ் பாயிண்டே அவரது இயல்பான பேச்சு தான். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களுடன் அவர் கலந்துரையாடிய விதம் மிகுந்த கவனம் ஈர்த்தது. கிராம சபைக் கூட்டங்களில் அதிமுகவினர் ஏடாகூடா கேள்விகளை கேட்டு கலாட்டா செய்த போதிலும் ஸ்மார்ட்டாக அவர்களை எதிர்கொண்டார்.

இளைஞர் அணி
2019-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். மாநிலம் முழுவதும் தூர்ந்து கிடந்த நீர்நிலைகளைத் தூர்வாரவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் கழக இளைஞர் அணியினால் தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வுக்கு எதிராக
நீட் தேர்வுக்கு எதிராக, திமுக மாணவர் அணியுடன் இணைந்து தொடர் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். கொரோனா காலத்தில் இளைஞர் அணி சார்பாக அனைத்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களின் அலைபேசி எண்ணையும் பொதுவெளியில் வெளியிட்டு, 'உதவித் தேவைப்படுவோர் அந்தந்த மாவட்ட அமைப்பாளரைத் தொடர்புகொள்ளலாம்' என அறிவித்து அந்த நலத்திட்டப் பணிகளை ஒருங்கிணைத்தார்.

போராட்டக் குணம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுடன் அதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தார் உதயநிதி ஸ்டாலின். மதச்சார்பின்மைக்கு எதிரான போக்கைக் கண்டித்து, இளைஞர் அணியினருடன் களத்தில் இறங்கிப் போராடிக் கைதானர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் அதை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்ற ஒன்றிய அரசின் முடிவைச் செயல்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினார். அதேபோல் இந்தி திணிப்பு எதிர்ப்பிலும் தீவிரமாக களமாடினார்.

கட்சிக்கு புத்துயிர்
சட்டமன்றத் தொகுதிக்குச் சராசரியாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 25 லட்சம் புதிய உறுப்பினர்களைக் கழக இளைஞர் அணியில் சேர்க்கும் பணியை ஒருங்கிணைத்தார். அவர்களில் திறம்பட பணியாற்றிய 3.5 லட்சம் இளைஞர்களை ஒன்றிய கிளைகளிலும், பகுதி-நகர-பேரூர் வார்டுகளிலும் இளைஞர் அணி நிர்வாகிகளாக நியமித்து, திமுகவுக்கு புத்துயிர் ஊட்டினார். 'ஒற்றைச் செங்கல்' மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு-அ.தி.மு.க. கூட்டணியை திணற வைத்தார் உதயநிதி.

சட்டமன்றத் தேர்தல்
சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தன் தொகுதியில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் அரிசி-மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினார். தொகுதியில் கிட்டத்தட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை ஒருங்கிணைத்தார்.

மெரினா நடைபாதை
மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையில் கடலுக்கு அருகில் சென்று கடலைக் கண்டு ரசிக்கும் வகையிலான தற்காலிக சிறப்பு நடைபாதையை நிரந்த பாதையாக அமைக்கவேண்டும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இவர் வைத்த கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றித் தந்தார். அந்த நடைபாதையையும் உதயநிதி ஸ்டாலினே திறந்தும் வைத்தார்.

பயிற்சி பாசறை
மக்கள் பணியைப்போலவே கட்சிப் பணிகளிலும் தன் முத்திரையைப் பதிக்க தவறுவதில்லை உதயநிதி ஸ்டாலின். 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை'யைத் தொகுதிவாரியாக நடத்தி முடித்துள்ளார். 'இனி நான் எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் அங்கு முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நிச்சயம் இடம்பெறும்' என அறிவித்து அவற்றைச் செயல்படுத்தியும் வருகிறார்.

இல்லந்தோறும் இளைஞர் அணி
தற்போது இளைஞர்களை வீடுவீடாக சென்று அணியில் சேர்க்கும் 'இல்லந்தோறும் இளைஞர் அணி' என்ற முன்னெடுப்பின் மூலம் திமுகவை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கிறார். கட்சிப்பணி, தொகுதிப்பணி, சமூகப் பணி என எல்லாவற்றிலும் தனது திறமைகளை காட்டிய உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை கொடுத்து அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications