'பால் குடத்துடன் மியா கலிபா' பேனர் அடித்து அதகளம் செய்த 2கே கிட்ஸ்.. போலீசார் செய்த தரமான சம்பவம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்பு வைபவத்திற்காக அடிக்கப்பட்ட பேனரில் மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆடி மாதம் துவங்கிவிட்டதால் தமிழகம் முழுக்கவே பல்வேறு பகுதிகளிலும் அம்மன் கோயில்கள் திருவிழாக்கள் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் கோவில் திருவிழா களை கட்டியுள்ளது. கோயில் திருவிழா என்றாலே கிராமங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டும்.. ஊர் முழுக்க வண்ண விளக்குகள், சாமி ஊர்வலம் என்று மக்கள் திருவிழாவை கொண்டாடி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வார்கள்..

பேனர் கலாசாரம்: தற்போதைய கால கட்டத்தில் பேனர் அடிக்கும் கலாசாரம் பெருகிவிட்டதால் கோயில் திருவிழா, திருமண வீடு என எதிலும் பேனர்கள் அடித்து உற்சாகமாக இளைய தலைமுறையினர் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் சில நேரங்களில் இத்தகைய கொண்டாட்டங்களில் வரம்பு மீறி செல்வதையும் காண முடிந்தது. குறிப்பாக பேனர்களில் நடிகைகளின் படத்தை பதிவிட்டு முகம் சுளிக்கும் வகையில் வாசகங்களை எழுதுவது, சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுவது என அத்துமீறும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
கோவில் திருவிழா: அதே போல, நண்பர்களின் திருமணம் என்றால் புது மாப்பிள்ளை புது பெண்ணையும் பல கேரக்டர்களில் சித்தரித்து திரைப்பட காமெடி வரிகளை வைத்து விதவிதமாக போஸ்டர் அடித்து ஒட்டுவதும் பிளக்ஸ் போர்டு வைப்பதும் 2கே கிட்ஸ்களின் வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில்தான், காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழாவில் அங்குள்ள இளைஞர்கள் அடித்த பிளெக்ஸ் போர்டு முகம் சுளிக்கும் விதமாக இருந்தது. இதையடுத்து, காவல்துறையினர் கவனத்திற்கு இந்த பிளெக்ஸ் போர்டு சென்றதையடுத்து, பிளெக்ஸ் போர்டை அகற்ற உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
இது குறித்த விவரம் வருமாறு:-
ஆதார் கார்டு வடிவம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு அங்குள்ள இளைஞர்கள் பிளெக்ஸ் போர்டுகளை அடித்து வைத்தனர். அதில், வித்தியாசமாக பிளெக்ஸ் போர்டு அடிக்கிறோம் என்ற பெயரில் பேனர் அடித்த இளைஞர்கள், தங்களின் பெயர் விவரங்களை ஆதார் கார்டு வடிவத்தில் அடித்து இருந்தனர்.
Kuruvimalai, Tamil Nadu: An image of Mia Khalifa was used on a hoarding for the Aadi Perukku festival carrying a traditional milk vessel. Magaral Police Station removed the hoarding pic.twitter.com/xYRcuJqIOb
— IANS (@ians_india) August 8, 2024
மியா கலிபா போட்டோ: அதோடு நிற்காமல் ஆபாச பட நடிகையான மியா கலிபா போட்டோ போட்டது மட்டும் இன்றி மியா கலிபா பால் குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை வைத்து இருந்தனர். கோயில் திருவிழாவில் வைக்கப்பட்ட பேனரில் மியா கலிபா படம் வைக்கப்பட்டது மட்டுமில்லாமல் பால்குடம் எடுப்பது போல வைத்திருந்ததை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வித்தியாசமான பேனர் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தையும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், அந்த பேனரை அகற்ற வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications