கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண்கள் கிளாமராக உடை அணிந்தால்.. சீண்டி விடுவீர்களா? பெயில் வழக்கில் விளாசிய கேரளா ஹைகோர்ட்!

Google Oneindia Tamil News

கொச்சி: பெண்களின் உடை குறைவாக இருந்தால், அது ஒன்றும் பாலியல் சீண்டலுக்கான அழைப்பு கிடையாது என்று பெயில் வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் சிவிக் சந்திரன் மீது இரண்டு பெண்கள் பாலியல் சீண்டல் புகார்களை கொடுத்து இருந்தனர். அதில் ஒரு பெண் தலித் சமூகத்தை சேர்ந்த எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 Dressing is a not reason to do harassment says Kerala High Court in Civic Chandran case

இரண்டு பெண்கள் அடுத்தடுத்து பாலியல் ரீதியாக சந்திரன் மீது புகார் அளித்த நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய கிருஷ்ணகுமார் என்ற நீதிபதி, சந்திரன் மிகவும் வயதானவர். அவருக்கு 74 வயதாகிறது. அவர் எப்படி ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக சீண்ட முடியும். இதை எல்லாம் நம்ப
முடியவில்லை.

சிவிக் சந்திரன் ஒரு சமூக சீர்திருத்த வாதி. அவர் பெண்களை மதிக்க கூடியவர். முக்கியமாக தலித் சமுதாயத்திற்கு என்று நிறைய போராடி இருக்கிறார். அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார். அப்படி இருக்கும் போது இவர் எப்படி தலித் பெண்ணை பாலியல் ரீதியாக சீண்ட முடியும் என்று கூறினார்.

அந்த வழக்கில் பெயில் கேட்டு இருந்த சந்திரன் தன்னுடைய மனுவில் அந்த தலித் எழுத்தாளரின் புகைப்படத்தை இணைத்து இருந்தார். சம்பவம் நடந்த நாளில் எடுத்த புகைப்படத்தை அணிந்து இருந்தார்.

இதை பார்த்த நீதிபதி கிருஷ்ணகுமார்.. ஓ அந்த பெண் இவ்வளவு குறைவாக ஆடை உடுத்தி இருக்கிறாரே. அதுதான் தவறு. இவ்வளவு குறைவான ஆடை உடுத்திவிட்டு பாலியல் ரீதியாக சீண்டினார் என்று எப்படினு சொல்ல முடியும். Section 354A இதற்கெல்லாம் பொருந்தாது. குறைவாக ஆடை உடுத்திவிட்டு பாலியல் ஆளானேன் என்று சொல்ல முடியாது என்று கூறினார்.

அதோடு இதை பயன்படுத்தி சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீனும் வழங்கினார். இன்னொரு கேஸிலும் வேறு ஒரு நீதிபதி அவருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.

அந்த நீதிபதியின் கருத்து கேரளாவில் புயலை கிளப்பியது. பலர் இந்த கருத்தை எதிர்த்தனர். இணையம் முழுக்க மிகப்பெரிய விவாதத்தை இது ஏற்படுத்தியது. இதையடுத்து கேரளா உயர் நீதிமன்றம் அந்த நீதிபதியை இடமாற்றம் செய்தது. அதே கோர்டில் பணியாற்றிய மொத்தம் 4 நீதிபதிகளை ஹைகோர்ட் இடமாற்றம் செய்தது.

இந்த ஆர்டரை எதிர்த்து நீதிபதி கிருஷ்ணகுமாரும் மனுதாக்கல் செய்து இருந்தார்.

இன்னொரு பக்கம் கேரளா அரசு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்தது. அந்த இரண்டு பெண்களும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது,. இந்த வழக்கில் இன்று நடந்த வாதத்தில் சிவிக் சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட முன் ஜாமீன் உறுதிசெய்யப்பட்டது .

ஆனால் அதே சமயம் பெண்களின் உடை குறைவாக இருந்தால், அது ஒன்றும் பாலியல் சீண்டலுக்கான அழைப்பு கிடையாது. அப்படி ஒரு விஷயத்தை சொல்லி வழங்கியதை ஏற்க முடியாது, பெண்கள் கிளாமராக உடை அணிந்தால்.. சீண்டி விடுவீர்களா? என்று கேரள உயர் நீதிமன்றம் கேட்டு உள்ளது.

English summary
Dressing is a not reason to do harassment says Kerala High Court in Civic Chandran case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X