பாடிபில்டராக கத்தார் வேலையை விட்ட பெண்! ஆச்சரியப்படுத்தும் அழகிய தம்பதி
கொச்சி: கணவன் மனைவி இருவரும் பாடிபில்டிங் துறையில் பங்கேற்றுப் பல சாதனைகளைச் செய்து வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பாடிபில்டர் என்று சொன்னால் உடனடியாக உடல் முழுவதும் கட்டுக் கட்டாகச் சதை பற்றுள்ள ஆண்கள்தான் உடனடியாக நினைவுக்கு வருவார்கள். இன்னும் அந்தத் துறை பக்கம் பெண்களின் கவனம் அதிகம் திரும்பவில்லை. பொதுவாகப் பெண்கள் என்றாலே மென்மையானவர்கள் என்ற நம்பிக்கை வலுவாக இன்றும் உள்ளது. அவர்களை கட்டுடலுடன் கற்பனை செய்து பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது.

ஆனால், அந்த நம்பிக்கையை உடைத்துள்ளார் ரேஸ்மி. பாடிபில்டர் துறைக்காக அவர் தனது வேலையைக்கூடத் தியாகம் செய்துள்ளார். ரேஸ்மிக்கு சொந்த ஊர் என்றால் கேரளாவில் உள்ள ஃபோர்ட் கொச்சிதான். இவர் ஒரு அக்கவுண்டெண்ட். கத்தாரில் வேலைக் கிடைத்து கணக்காளராக பணியாற்றி வந்தார். அவர் மனம் ஏனோ அதில் அதிக நாட்டம் காட்டவில்லை. கட்டழகு மிக்க உடலை முறுக்கேற்றி பாடிபில்டர் ஆகவேண்டும் என ஆசை அவரை விடாமல் விரட்டியது. விளைவு, இன்று அவர் கத்தார் வேலையை விட்டுவிட்டு முழு நேர பாடிபில்டராக வலம் வருகிறார்.
அவர் எடுத்த தைரியமான முடிவு அவரை கைவிடவில்லை. கடந்த 8 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதி வரை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற உடற்தகுதி கூட்டமைப்பு (WFF) நடத்திய மிஸ்டர் & மிஸ் இண்டியா 2024 போட்டியில் பங்கேற்று தேசிய சாம்பியன்ஷிப்பில் முதல் இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்துள்ளார்.
அவர் கத்தார் வேலையை விட முடிவு செய்தபோது அவரது குடும்பம் அதை ஏற்கவில்லை. இந்தத் துறைக்குள் செல்வது சுத்தமாக யாருக்கும் பிடிக்கவில்லை. பல விமர்சனங்களை ரேஸ்மி எதிர்கொண்டுள்ளார். ஆனால், அவரது மன அழுத்தத்திற்கு மருந்தாக உடலை உறுதி செய்துள்ளார். கடுமையான முயற்சி அவரை முத்திரை பதிக்க வைத்துள்ளது.
ரேஸ்மியின் கணவர் பிபினும் ஒரு பாடிபில்டர். அவரது ஊக்கம் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இது குறித்துப் பேசிய ரேஸ்மி, "நான் பாடிபில்டிங்கில் ஈடுபடுவதற்கு என் கணவர்தான் காரணம். 2022 இல் நான் கத்தாரிலிருந்தபோது இந்தப் பயிற்சியைத் தொடங்கினேன். பிபினிடம் அவர் செய்யும் உடற்பயிற்சிகளின் வீடியோக்களை எனக்கு அனுப்பச் சொல்வேன். அதைப் பார்த்து நானும் செய்வேன். தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் என் தசைகள் வளர்ச்சியடைந்தன.

அப்போது என் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள், எனது முதுகில் உள்ள தசைகளைப் படம் எடுக்கும்படி நான் பிபினை கேட்டேன். அந்தப் படத்தைப் பார்த்தபோது பெரிய வித்தியாசத்தைக் கண்டேன். அதனால், ஜூலை மாதம் அவர் சொந்த ஊருக்குச் சென்று பயிற்சியில் ஈடுபடுமாறு ஊக்கமளித்தார் 2023, நான் ஊர் திரும்பி தீவிர பயிற்சியைத் தொடங்கினேன்.
கடந்த பிப்ரவரி மாதம் எர்ணாகுளத்தில் நடந்த முதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். பின்னர் மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். துரதிர்ஷ்டவசமாக, நடந்த பைக் விபத்தில் என் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது, இதனால் சிறிது நேரம் வேலை செய்வதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சை பெற்றேன். நான் குணமடைந்தவுடன், நவம்பரில் நடந்த தேசிய மகளிர் பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் பற்றி கேள்விப்பட்டேன். பிபினின் வழிகாட்டுதலுடன் நான் பயிற்சியைத் தொடங்கி தேசிய முதல் ரன்னர்-அப் ஆனேன்" என்கிறார்.
பிபின் உடன் எப்படி காதல் மலர்ந்தது என்பது பற்றி மலையாள மனோரமாவுக்கு பேசிய பிபின், "நாங்கள் ஜிம்மில் முதன்முதலாகச் சந்தித்தோம். ஆரம்பத்திலிருந்தே ரேஸ்மியை நான் விரும்பினேன். உடற்பயிற்சி மீதான அவளது அர்ப்பணிப்பு என்னை இன்னும் ஈர்த்தது. அவள் எப்போதும் ஃபிட்டாக இருக்க விரும்பினாள். நான் அவளுக்குப் பயிற்சி அளித்தேன். நான் தான் அவளை ஊருக்குப் போகச் சொன்னேன். அந்த நட்பு இன்று குடும்ப உறவாக மாறிவிட்டது” என்கிறார். பாலிபில்டராக கணவனும் மனைவியும் வலம்வருவதால் கேரளாவில் இந்தத் தம்பதி தலைப்புச் செய்தியாக மாறியுள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications